ஜங்-இ-ஆசாதி நினைவிடம்

இந்திய விடுதலை இயக்கத்தில் பஞ்சாபி சமூகம் செய்த பங்களிப்பிற்காக கட்டபட்ட நினைவிடம்

ஜங்-இ-ஆசாதி நினைவிடம் (Jang-e-Azadi Memorial) என்பது இந்திய விடுதலை இயக்கத்தில் பஞ்சாபி சமூகம் செய்த பங்களிப்பு மற்றும் தியாகங்களின் நினைவாக இந்தியாவின் பஞ்சாபின் கர்தார்பூரில் ஜலந்தர் நகருக்கு அருகிலுள்ள நகரம்) கட்டப்பட்ட ஒரு நினைவு இல்லமும் அருங்காட்சியகமும் ஆகும்.[1] இந்த நினைவுச்சின்னம் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ .200 கோடி செலவில் கட்டப்பட்டது.

ஜங்-இ-ஆசாதி நினைவிடம்
ஜங்-இ-ஆசாதி நினைவிடம்
Map
நிறுவப்பட்டது19 அக்டோபர் 2014 (2014-10-19) Construction start date
அமைவிடம்கர்தார்பூர் , ஜலந்தர்
ஆள்கூற்று31°26′02″N 75°30′21″E / 31.43389°N 75.50583°E / 31.43389; 75.50583
வகைஅருங்காட்சியகம்
நிறுவியவர்இயக்குனர், பஞ்சாப் சுற்றுலா மற்றும் கலாச்சார விவகாரங்கள் துறை
உரிமையாளர்பஞ்சாப் அரசு
அருகில் உள்ள தானுந்து நிறுத்துமிடம்5 ஏக்கர்

கட்டுமானம்

தொகு
 
நினைவிடத்தின் கட்டுமானத்தின் போது

பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் 19 அக்டோபர் 2014 அன்று இந்த நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.[2] இதன் பணிகள் 26 மார்ச் 2015 அன்று தொடங்கப்பட்டது.[3] நினைவுச்சின்னத்தின் செயல் திட்டத்தையும் கருத்தையும் கட்டமைக்க வரலாற்றாசிரியர்கள், ஊடகவியலாளர்கள், அறிஞர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

கட்டிடக்கலை

தொகு

இந்தத் திட்டத்தை கட்டிடக் கலைஞர் இராஜ் ரேவால் என்பவர் வடிவமைத்துள்ளார். முன்மொழியப்பட்ட வடிவமைப்பின் படி சுதந்திர போராட்டத்தின் வெவ்வேறு இயக்கங்களை முன்வைக்க பல்வேறு காட்சியகங்கள் கட்டப்பட்டன. ஷாஹீத்-இ-மினார் (தியாகிகளின் மினாரெட்டுகள்) என்றும் அழைக்கப்படும் ஒரு கோபுரம் முன்மொழியப்பட்டது. இது தவிர, கலையரங்கம், திரைப்பட அரங்கம், திறந்தவெளி திரையரங்கம், ஒலிஒளி திரையரங்கம், நூலகம், ஆராய்ச்சி அரங்குகள், கருத்தரங்கு அரங்குகள் போன்றவையும் நினைவு காட்சியகங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக கட்டப்பட்டன. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Jang-e-Azadi Memorial: A repository of freedom struggle". Tribuneindia News Service. 1947-08-15. பார்க்கப்பட்ட நாள் 2020-10-03.
  2. "Badal unveils foundation stone of Jang-e-Azadi Memorial". YesPunjab.com. 2014-10-19. Archived from the original on 2015-05-09. பார்க்கப்பட்ட நாள் 2016-12-18.
  3. "Construction work of Jang-e-Azadi Memorial at Kartarpur begins". YesPunjab.com. 2015-03-26. Archived from the original on 2015-03-27. பார்க்கப்பட்ட நாள் 2016-12-18.
  4. "CM to lay foundation stone of Jang-e-Azadi memorial on Oct 12 | chandigarh". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/chandigarh/cm-to-lay-foundation-stone-of-jang-e-azadi-memorial-on-oct-12/story-UPCx9EgNtWTrJyOL3LcH2J.html. பார்த்த நாள்: 2016-12-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜங்-இ-ஆசாதி_நினைவிடம்&oldid=3878680" இலிருந்து மீள்விக்கப்பட்டது