ஜடபரதர்

ஜடபரதரை வணங்கும் ரஹூகணர்

ஜடபரதர், (Jadabharata) ஒரு இந்து புராணக் கதாபாத்திரம். இவர் பரதன் என்ற பெயரில் நாடான்ற மன்னர். காட்டில் தவ வாழ்வு மேற்கொள்ள நாட்டைத் துறந்தார். தவ வாழ்க்கையில், காட்டில் தாயை இழந்த மான் குட்டியை எடுத்து வளர்த்தார். மான் குட்டி மேய்ச்சலுக்கு சென்று திரும்பும்வரை அதன் நினைவாகவே இருந்து தவவாழ்வினை மறந்தார். மரணத்தறுவாயிலும் பரதர் மான் குட்டியின் நினைவாகவே இறந்தார். இதனால் மறுபிறவியில் பரதர் மானாக பிறந்தார். தான் மானாக பிறந்த காரணத்தை உணர்ந்தார் பரதர், அதற்கடுத்த பிறவியில் பிறக்கும் போதே ஆத்ம ஞானியாகவே பிறந்து வளர்ந்தார். நீண்ட ஜடாமுடியுடன் என்றும் காட்சியளித்ததால் மக்கள் அவரை ஜடபரதர் என்றழைத்தனர். ஒரு நாள் சௌவீர மன்னனின் பல்லகைத் தூக்கும் நால்வரில் ஒருவராக ஜடபரதர் இருந்தார். பல்லக்கு நிலையின்றி தடுமாறி செல்வதற்கு காரணமானவர் ஜடபரதர் என்று எண்ணிய மன்னர், ஜடபரதரைப் பார்த்து “உடல் பருத்திருக்கும் உன்னால் இந்த பல்லக்கை தூக்க முடியவில்லையா? என வெகுண்டார்”. அதற்கு ஜடபரதர் “பல்லக்கை நான் சுமக்கவில்லை, இந்த உடல்தான் சுமக்கிறது. அதுபோல உங்கள் ஆத்மா சுமக்கப்படவில்லை; உடலே சுமக்கப்பட்டது ” என்றார். ஜடபரதரின் பதிலுரையை புரிந்து கொண்ட மன்னன் சௌவீர மன்னர், ஜடபரதர் மிகப்பெரிய ஆத்ம ஞானி என்றுணர்ந்து, அவர் தாள் பணிந்து, தன் பிழை பொறுத்தருள வேண்டினார்.[1]

ஜடபரதரின் அருளரைதொகு

ஆத்மாவுக்கு தேவன், மனிதன் என்ற வேறுபாடு கர்மங்களால் உண்டாகிறது. கர்ம சம்பந்தம் நீங்கியதும் வேற்றுமை நீங்கிட பிரம்மமாக இருப்பது ஜீவாத்மா ஒன்றே” மேலும் ’ஜீவாத்மாக்களுக்குள் ஒருவருகொருவர் உருவத்தில் வேற்றுமை கிடையாது’ என்று ஜடபரதர், சௌரவீர மன்னருக்கு ஆத்ம தத்துவத்தை அருளினார்.

மேற்கோள்கள்தொகு

  1. விஷ்ணு புராணம் பக்கம் 113 முதல் 116 முடிய

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜடபரதர்&oldid=2577433" இருந்து மீள்விக்கப்பட்டது