ஜடா பிங்கெட் சிமித்

அமெரிக்க நடிகை (பிறப்பு 1971)

ஜடா கோரன் பிங்கெட் சிமித் (ஆங்கில மொழி: Jada Koren Pinkett Smith) (பிறப்பு: செப்டம்பர் 18, 1971) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை, பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர், பாடகி மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் பேஸ்புக் வாட்ச் என்ற ஓடிடி தளத்தில் 'டால்க் ஷோ ரெட் டேபிள்' என்ற நிகழ்ச்சியில் இணை தொகுப்பாளராக உள்ளார்,[1] இதற்காக இவர் பகல்நேர எம்மி விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2021 இல் டைம் என்ற இதழ் இவரை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக பட்டியலிட்டுள்ளது.[2]

ஜடா பிங்கெட் சிமித்
பிறப்புஜடா கோரன் பிங்கெட்
செப்டம்பர் 18, 1971 (1971-09-18) (அகவை 53)
பால்ட்டிமோர், மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா
பணி
  • நடிகை
  • பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர்
  • பாடகி
  • தொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
1990–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்3
வலைத்தளம்
jadapinkettsmith.com

இவர் 1991 ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'எ டிபெரண்ட் வேர்ல்ட்' என்ற தொடரில் நடித்ததன் மூலம் பலரது கவனத்தை பெற்றார். அதை தொடர்ந்து மெனசு II சொசைட்டி (1993), தி நட்டி புரொப்பசர் (1996), செட் இட் ஆப் (1996) மற்றும் இசுக்ரீம் 2 (1997) போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Jada Pinkett Smith, Daughter Willow & Mom Adrienne Launch 'Deeply Personal' Facebook Talk Show" (in en). People இம் மூலத்தில் இருந்து 2018-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181016181113/https://people.com/movies/jada-pinkett-smith-willow-smith-red-table-talk/. 
  2. Haddish, Tiffany. "The 100 Most Influential People of 2021 – Adrienne Banfield Norris, Willow Smith and Jada Pinkett Smith". Time (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-01.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜடா_பிங்கெட்_சிமித்&oldid=3848043" இலிருந்து மீள்விக்கப்பட்டது