ஜனசம்மோதினி
ஜனசம்மோதினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
தொகுஇந்த இராகத்தில் சட்சம் (ச), சதுசுருதி ரிஷபம் (ரி2)ம் அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2) மற்றும் கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ரி2 க3 ப த2 நி2 ச் |
அவரோகணம்: | ச் நி2 த2 ப க3 க3 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஷாடவ" இராகம் எனப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990