ஜமீலா ஆப்கானி

ஜமீலா ஆப்கானி (பிறப்பு 1976[1]) ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்ணியவாதி மற்றும் ஆப்கானிஸ்தானின் பெண்கள் உரிமைகள் மற்றும் கல்விக்கான ஆர்வலர் ஆவார். அவர் நூர் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்பின் (என்இசிடிஓ) நிறுவனராகவும், நிர்வாக இயக்குநராக உள்ளார். மேலும் இவர் ஆப்கானிய மகளிர் வலையமைப்பு (ஏ.டபிள்யூ.என்) என்ற அமைப்பின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார்.

ஜமீலா ஆப்கானி (2020)
ஜமீலா ஆப்கானி (2020)

வாழ்க்கை

தொகு

ஜமீலா ஆப்கானி 1974 ஆம் ஆண்டில் ஆப்கானித்தானின் காபூல் நகரில் பிறந்தார். ஜமீலா குழந்தைப் பருவத்தில் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டார். இந் நோயினால் சாதரணமாக நடக்க முடியாதவராக உள்ளார்.[2] அவரது பதினான்கு வயதில் சோவியத் போரின் போது தலையில் சுடப்பட்டார்.[2]

1990 ஆம் ஆண்டுகளின் ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரின் போது காபூலை விட்டு வெளியேறி, பெஷாவரில் குடியேறினார்.[3] ஜமீலா பெஷாவர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றார்.[4] இவர் பாக்கிஸ்தானில் உள்ள ஆப்கானிய அகதிகள் முகாம்களில் சமூக சேவையாளராக பணி புரிந்தார். குர்ஆனிய கல்வி வகுப்புகள் மூலம் முகாம்களில் உள்ள பெண்கள் கல்வியறிவு பெற உதவினார்.[5]

பெண்கள் கல்வி பெறுவதற்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்று பெண் ஆசிரியர்களின் பற்றாக்குறை என்று ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது.[6] 2001 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகளைப் பெற உதவும் நோக்கத்துடன் ஜமீலா என்இசிடிஓ நிறுவனத்தை நிறுவினார்.[4] என்இசிடிஓ நிறுவனத்தினால் சைகை மொழியும் கற்பிக்கப்படுகின்றது. மேலும் இந் நிறுவனத்தால் முரண்பாடு தீர்த்தல், மற்றும் பாலின பிரச்சினைகள் தொடர்பான வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன.[2] கல்வி பெண்கள் மற்றும் சிறுமிகளை சென்றடைய புதுமையான வழிகளை உருவாக்குவதில் என்இசிடிஓ அறியப்படுகிறது. உதாரணமாக, என்இசிடிஓ சிறுமிகளுக்காக ஒரு நூலகத்தை நிறுவியது. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறுமிகளை நூலகத்திற்கு அழைத்து வர சிறுவர்களை நியமித்தனர். அவர்கள் அழைத்து வந்த சிறுமிகளுக்கும், சிறுவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.[3] ஜமீலா ஆப்கானியின் இந்த அமைப்பு 22 மாகாணங்களில் சுமார் 50,000 பெண்களுக்கு சேவை செய்கிறது.[7]

பெண்களுக்கு எதிரான வன்முறையை இஸ்லாம் ஆதரிக்கிறது என்ற தவறான கருத்துக்கு ஜமீலா ஆப்கானியின் பணி நேரடி சவால் விடுக்கின்றது.[8] அவர் "ஆப்கானிஸ்தானில் இமாம்களுக்கான பாலின உணர்திறன் பயிற்சியை" உருவாக்கினார்.[9] இத் திட்டத்தினால் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பெண்களின் உரிமைகளை உள்ளடக்கிய கருத்துக்களை இமாம்கள் பிரசங்கிக்கத் தொடங்கினர். 2015 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தில் சுமார் 6,000 இமாம்கள் பணிபுரிந்தனர். காபூலில், அவரது திட்டம் "நகரத்தின் செல்வாக்கு மிக்க இருபது மசூதிகளில் தொடர்ச்சியான குத்பாக்கள் (வெள்ளிக்கிழமை பிரசங்கங்கள்) இடம் பெற்றுள்ளது.[10]

இஸ்லாம் பெண்களின் உரிமைகளை அனுமதித்துள்ளது என்பதை உணராத ஆண்கள் மீது அவரது பாலின பயிற்சி வலுவான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.[7]

ஆப்கானிஸ்தானில் ஆணாதிக்க பழங்குடி அரசாங்க முறைக்கு சவால் விடுப்பதாகவே அவரின் பணிகள் அமைந்துள்ளன.[8] அவர் இஸ்லாத்தின் அமைதியான விளக்கத்தை போதனை செய்வதால் அச்சுறுத்தல்களுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.[9]

2008 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு டானன்பாம் பீஸ்மேக்கர் இன் ஆக்சன் விருது வழங்கப்பட்டது.[11] 2017 ஆம் ஆண்டில் விழிப்புணர்வு மனிதநேயத்திற்கான அரோரா பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட இறுதிப் போட்டியாளர்களில் அவர் ஒருவராக இருந்தார்.[12]

சான்றுகள்

தொகு
  1. வார்ப்புரு:Chú thích web
  2. 2.0 2.1 2.2 "Jamila afgani". Archived from the original on 2013-09-05.
  3. 3.0 3.1 "EBSCOhost Login". search.ebscohost.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  4. 4.0 4.1 "Afghan Women Leaders Speak"" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "Jamila Afghani – Tanenbaum.org". tanenbaum.org. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  6. Kitch, Sally L. (2014). Contested Terrain: Reflections with Afghan Women Leaders. University of Illinois Press. p. 26. ISBN 978-0252038709.
  7. 7.0 7.1 Weingarten, Elizabeth. "How to Promote Women's Rights, in Afghanistan and Around the World". Foreign Policy (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  8. 8.0 8.1 Clark, Meredith. "How One Amazing Afghan Woman Is Succeeding Where So Many Have Failed". www.refinery29.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  9. 9.0 9.1 "In Afghanistan, Danger Stalks Gender Imam Training". Women's eNews (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  10. ""Jamila Afghani". Women's Islamic Initiative in Spirituality and Equality". Archived from the original on 2015-09-28.
  11. Taplin, Shahnaz; consultant, ContributorA strategic communications (2014-01-05). "Muslim Women: Movers and Shakers Fight for Women's Rights". HuffPost (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02. {{cite web}}: |first2= has generic name (help)
  12. "2017 Aurora Prize Finalists". AURORA PRIZE (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமீலா_ஆப்கானி&oldid=3572892" இலிருந்து மீள்விக்கப்பட்டது