ஜவகர் அறிவியல் கல்லூரி
ஜவகர் அறிவியல் கல்லூரி (Jawahar Science College), என்பது தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். ஜவகர் கல்விச் சங்கத்தால் துவக்கப்பட்ட இந்தக் கல்லூரியானது அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [2]
குறிக்கோளுரை | STUDY - STRIVE - SUCCEED |
---|---|
வகை | கலை மற்றும் அறிவியல் - இளங்கலை மற்றும் முதுகலை |
உருவாக்கம் | 1987 |
சார்பு | அண்ணாமலைப் பல்கலைக்கழகம்[1] |
முதல்வர் | முனைவர் வி. டி. சந்திரசேகரன் |
மாணவர்கள் | 1800 |
அமைவிடம் | தொகுதி - 14, நெய்வேலி நகரியம் , தமிழ்நாடு , 607803 11.614162, 79.469021 |
இணையதளம் | https://www.jsc104.net |
வரலாறு
தொகுஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை பண்டித ஜவஹர்லால் நேரு வலியுறுத்தினார். அவரது பெயரை இக்கல்லூரிக்கு இட்டு, பல வேலை சார்ந்த படிப்புகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது. 120 மாணவர் எண்ணிக்கையுடன் கல்லூரி செயல்படத் தொடங்கியது. இக்கல்லூரியை 1987 அக்டோபர் 18 அன்று அப்போது நடுவண் அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் திறந்து வைத்தார்.
கால ஓட்டத்தில் கல்லூரியானது படிப்படியாக வளர்ந்து பல்வேறு படிப்புகள் கொண்டதாகவும் சுமார் 1500 மாணவர்களைக் கொண்ட ஒரு கல்வி நிறுவனமாக வளர்ந்துள்ளது. இக்கல்லூரியானது கட்டாய நன்கொடை வசூலிக்காமல் மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. மேலும் தமிழக அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு கொள்கையையும் பின்பற்றிவருகிறது.
கல்லூரியானது காலை 9.00 மணி முதல் மாலை 2.05 மணி வரை செயல்படுகிறது
வளாகம்
தொகுஇக்கல்லூரியானது தமிழ்நாட்டின் நெய்வேலி தொகுதி -14 இல் என்.பி.டி.ஐ அருகே 40 ஏக்கர் நிலப்பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளும் கொண்ட கட்டிடத்தில் செயல்படுகிறது.
கல்வியாளர்கள்
தொகுகல்லூரி பின்வரும் 3 ஆண்டு இளங்கலை படிப்புகளை வழங்குகிறது.
- இ. அ. கணினி அறிவியல்
- இ. அ. வேதியியல்
- இ. அ. நிலவியல்
- இ. அ. கணிதம்
- இ.வணிகவியல்
- இ. க. ப
- இ. அ. சுற்றுச்சூழல் மேலாண்மை
- இ.க ஆங்கிலம்
- இ.வ மே.
- இ. அ. ஊட்டச்சத்து உணவு அறிவியல் மேலாண்மை மற்றும் உணவு முறைகள்
கல்லூரி பின்வரும் 2 ஆண்டு முதுகலை படிப்புகளை வழங்குகிறது.
- மு.அ. வேதியியல்
- மு.அ. கணிதம்
- எம்.எஸ்.டபிள்யூ (சமூகப் பணிகள் முதிநிலை)
- மு.அ ஆங்கிலம்
- மு.வணிகவியல்
சங்கங்கள்
தொகு- சுழற் சங்கம்
- லியோ சங்கம்
- என்.எஸ்.எஸ் அலகுகள் I & II
- குடிமக்கள் நுகர்வோர் கழகம்
- இளையோர் ஜெய்சீஸ்
- செம்பட்டை சங்கம்
குறிப்புகள்
தொகு- ↑ "Annamalai University". annamalaiuniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.
- ↑ "Affiliated College of Thiruvalluvar University" (PDF).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)