ஜஸ்ட் லைக் ஹெவன் (திரைப்படம்)

ஜஸ்ட் லைக் ஹெவன் செப்டம்பர் 16, 2005 அன்று அமெரிக்காவிலும் கனடாவிலும் வெளியிடப்பட்ட ஒரு நகைச்சுவைக்காதல் திரைப்படம் ஆகும். சான் ஃபிரான்ஸிஸ்கோவில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ரீஸ் விதர்ஸ்பூன், மார்க் ரஃபலோ மற்றும் ஜோன் ஹெடர் ஆகியோர் நடித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்காவில் வசூலில் முதல் இடத்தை பிடித்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஆகவில்லை இது இஃப் ஒன்லி இட் வேர் ட்ரூ என்ற நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம். திரைப்படத்தின் துணைத்த்லைப்பு: இட்ஸ் அ வண்டர்ஃபுல் ஆஃப்டர் லைஃப்

ஜஸ்ட் லைக் ஹெவன்(Just like Heaven)
திரைப்படத்தின் விளம்பரம்
இயக்கம்மார்க் வாடர்ஸ்
தயாரிப்புவால்டர் எஃப். பார்க்ஸ்
லாரீ மெக்டொனால்டு
கதைமார்ச் லெவி (நாவல்)
பீட்டர் டோலன்
லெஸ்லீ டிக்ஸன்
இசைரோல்ஃப் கென்ட்
நடிப்புரீஸ் விதர்ஸ்பூன்
மார்க் ரஃபலோ
டோனல் லோக்
ஜோன் ஹெடர்
டீனா ஸ்பைபே
இவனா மிலிசெவிச்
விநியோகம்டிரீம்வர்க்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 16, 2005
ஓட்டம்95 நிமிடங்கள்.
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு~ US$58,000,000

கதைச்சுருக்கம்

தொகு

எலிசபெத் மாஸ்டர்சன்(ரீஸ் விதர்ஸ்பூன்) பணிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு இளம் மருத்துவர். இவர் கார் விபத்துக்கு உள்ளாகிறார். தன் மனைவியை இழந்த சோகத்தில் இருக்கும் டேவிட் அபாட்(மார்க் ரஃபலோ) மூன்று மாதங்கள் கழித்து எலிசபெத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுகிறார். அந்த குடியிருப்பில், எலிசபெத் டேவிட் முன்பு தோன்றுகிறார். எலிசபெத்துக்கு ஆவியை போன்ற குணாதிசயங்கள் காணப்படுகின்றன. இருவரும் சந்திக்கும் போது இருவருமே அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். எனினும் தன் நிலையை குறித்து அறியவில்லை. தன் வீட்டுக்குள் டேவிட் அத்துமீறி நுழைந்ததாக கருதுகிறார். பிறகே தன்னிலையை எலிசபத் உணருகிறார். எலிசபத் டேவிட்டை தவிர யார் கண்களிலும் படுவதில்லை, டேவிட் மட்டும் தான் எலிசபத்துடன் பேசவோ பார்க்கவோ முடிகிறது.

எலிசபத்துக்கு தொடக்கத்தில் தன்னை குறித்த விவரங்களை முற்றிலும் மறந்திருந்தது. டேவிட்டும், இவளும் சேர்ந்து அவளை குறித்த விவரங்களைத்தேட சிறிது சிறிதாக நினைவு திரும்புகிறது. அப்போதுதான், தான் மருத்துவர் என்றும் விபத்தின் காரணமாக தான் கோமாவில் மூன்று மாத காலமாக இருப்பதையும் எலிசபெத் அறிகிறாள். எனினும் நீண்ட நாட்கள் கோமாவில் இருப்பதினால், எலிசபத்தின் உடலுக்கு உயிர் கொடுக்கும் கருவிகளின் செயல்பாட்டை நிறுத்த மருத்துவமனை முடிவு செய்கிறது. இதற்குள் எலிசபெத்தும் டேவிட்டும் காதல் வயப்படுகின்றனர். தன் மனைவி மறைந்த துக்கத்தில் இருந்து டேவிட் மீள்கிறான்.

கருவிகளின் செயல்பட்டை நிறுத்துவதை தடுக்கும் பொருட்டு, டேவிட்டும் அவனது நண்பனும் எலிசபெத்தின் உடலை மருத்துவமனையில் இருந்து கடத்த முனைகின்றனர். எனினும் அது நிறைவேறாமால் பாதியில் நிற்கும் வேளையில், எலிசபெத்தின் உடலுக்கு நினைவு திரும்புகிறது. ஆனால் எலிசபெத்துக்கு தான் ஆவி உருவில் இருந்த நினைவுகள் அனைத்தும் மறந்து விடுவதால், டேவிட்டை அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இதனால் டேவிட் ஆழந்த மன வருத்தத்துக்கு உள்ளாகிறான்.

ஒரு நாள் எலிசபெத், டேவிட்டை அவள் விட்டு மொட்டைமாடியில் சந்திக்கிறாள். டேவிட் தன் வீட்டுச்சாவியை எலிசபெத் கேட்கிறாள். சாவியை எலிசபெத்துக்கு கொடுக்கும் போது, இருவரின் கைகள் ஒன்றை ஒன்று தொடும் போது, எலிசபெத்துக்கு பழைய நினைவுகள் திரும்புகின்றன. பிறகு இருவரும் முத்தத்தை பரிமாறிக்கொள்கின்றனர்.

வெளி இணைப்புகள்

தொகு