ஜாகனவி பருவா

ஜாகனவி பருவா (Jahnavi Barua) அசாமைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் கிளர்ச்சியைப் பின்னணியாகக் கொண்டு அசாம் மொழியில் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பான 'நெக்ஸ்ட் டோர்' ஆசிரியர் ஆவார். இந்தத் தொகுப்பு விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது.[1][2] பருவா பெங்களூரில் வசித்துவருகின்றார். குவகாத்தி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தார். இருப்பினும் மருத்துவர் தொழிலை இவர் தொடரவில்லை.[3][4] ஐக்கிய இராச்சியத்தில் படைப்பு எழுத்து குறித்து கற்றுள்ளார்.[5]

ஒரு மறுபிறப்பு என்பது தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான தனித்துவமான பிணைப்பைப் பற்றியது. பெற்றோரைப் பற்றியது அல்ல. கருவில் இருக்கும் குழந்தையைத் தாய் சுமக்கும் குறிப்பிட்ட காலகட்டம் குறித்து இவரது இலக்கியப் படைப்பில் அழகாக வெளிப்படுகிறது.[6]

அண்டர்டோ என்பது இடம்பெயர்வு, நாடுகடத்தல் மற்றும் தனிமை பற்றிய ஒரு நாவல். தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் நாம் போராடுகிறோம் என்பது குறித்து இயற்றப்பட்டுள்ளது.[7]

நூல் பட்டியல்

தொகு
  • நெக்ஸ்ட் டோர் (பெங்குயின் இந்தியா, 2008)
  • மறுபிறப்பு (பெங்குயின் இந்தியா, 2010)
  • அண்டர்டோவ் (பெங்குயின் இந்தியா, 2020)

விருதுகள்

தொகு
  • 2020 இலக்கியத்திற்கான ஜே. சி. பி. பரிசு. பரிந்துரை
  • 2012 பொதுநலவாயப் புத்தகப் பரிசு. பரிந்துரை
  • 2011 மான் ஆசிய இலக்கியப் பரிசு. பரிந்துரை
  • 2009 பிராங்க் ஓ'கானர-பன்னாட்டு சிறுகதை விருது. பரிந்துரை
  • 2006 யுனிசுன் வெளியீட்டாளர்கள் நடத்திய சிறுகதைப் போட்டி (இரண்டாம் பரிசு, குழந்தைகள் புனைகதை வகை)
  • 2005 யுனிசன் வெளியீட்டாளர்கள் நடத்திய சிறுகதைப் போட்டி.- பரிந்துரை
  • சார்லஸ் வாலஸ் இந்தியா அறக்கட்டளை நிதியுதவி, படைப்பிலக்கியம்

மேற்கோள்கள்

தொகு
  1. Writing a New Story, telegraphindia.com; accessed 6 April 2015.
  2. Into a Closed Terrain, Hindu.com; accessed 6 April 2015.
  3. Mary Mathew, Annie Chandy Mathew.Winners: a collection of prize-winning poems and stories (vol 2), books.google.co.in; accessed 6 April 2015.
  4. Freshly Pressed பரணிடப்பட்டது 1 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம், expressindia.com; accessed 6 April 2015.
  5. "Jahnavi Barua - the girl Next Door". Abhijit Bhaduri (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-09-29.
  6. Staff (2008-04-24). "RS pays homage to former member Sarojini Babar". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-29.
  7. Rao, Kavitha (2020-04-21). "An Assamese writer confronts migration and exile". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-29.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாகனவி_பருவா&oldid=3892143" இலிருந்து மீள்விக்கப்பட்டது