ஜாக்குலின் அலெமானி
ஜாக்குலின் மைக்கேல் அலெமானி (Jacqueline Michele Alemany) (பிறப்பு பிப்ரவரி 24, 1989) [1] ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளரும் அரசியல் நிருபரும் ஆவார், இவர் தி வாசிங்டன் போஸ்ட்டின் காங்கிரசின் நிருபராக உள்ளார். [2] இவர் முன்பு அதிகாலையில் வெளிவரும் பவர் அப் என்பதில் செய்திமடலை எழுதியுள்ளார். [3] 2021 இல், தி வாஷிங்டன் போஸ்டின் அரசியல் செய்திமடலான தி எர்லி 202 இன் தொகுப்பாளராக நியமிக்கப்பட்டார்.[4]
ஜாக்குலின் அலெமானி | |
---|---|
பிறப்பு | ஜாக்குலின் மைக்கேல் அலெமானி பெப்ரவரி 24, 1989 ஸ்கார்ஸ்டேல். நியூயார், அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆர்வர்டு பல்கலைக்கழகம் |
பணி | பத்திரிகையாள, செய்தி நிருபர், தொகுப்பாளர் |
பெற்றோர் | ஜாக்கின் அலெமானி எலன் அலெமானி |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுநியூயார்க்கின் ஸ்கார்ஸ்டேலில் பிறந்த இவர் ஸ்கார்ஸ்டேல் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். [5] எலன் அலெமானி மற்றும் ஜோவாகின் "ஜாக்" அலெமானி ஆகியோர் இவரது பெற்றோராவர். இவரது தாயார் இத்தாலிய குடியேறியவர்களின் வழித்தோன்றல் [1] மேலும் இவரது தந்தை எசுப்பானியாவிலிருந்து வந்த காத்தலோனியா குடியேற்றவாசி ஒருவரின் மகன். [6] இவரது தாயார் சிஐடி குழுமத்தின் தலைவராகவும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். [6]
2011 இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியலில் பட்டம் பெற்றார். [7] கல்லூரி நாட்களில் ஆர்வர்டு கிரிம்சன் பெண்கள் கூடைப்பந்து அணியின் கேப்டனாக இருந்தார்.[5][8]
பத்திரிகை வாழ்க்கை
தொகு2012 இல் நிருபராக பணியமர்த்தப்படுவதற்கு முன்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள், அரசியல் மற்றும் பொதுச் செய்திகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் , சிபிஎஸ் செய்திப்பக்கத் திட்டத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [9] [10] சிபிஎஸ் செய்தியில், 2016 குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரத்தைப் பற்றிப் பேசினார். [11] [12] [13]
2017 இல் சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளையின் உதவித்தொகை வழங்கப்பட்டது [14]
தேசிய அரசியல், வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரசை மையமாகக் கொண்ட பவர் அப் என்ற அதிகாலை செய்திமடலில் எழதி வந்தார்..[15][16] பிறகு 2018 இல் தி வாஷிங்டன் போஸ்ட்டில் சேர்ந்தார். 2021 இல், இவர் காங்கிரசு நிருபராக நியமிக்கப்பட்டார். வோக் மற்றும் ஹஃபிங்டன் போஸ்ட்டில் பங்களிப்பாளராகவும் பணியாற்றினார். [17][18] செப்டம்பர் 2021 இல், தி வாஷிங்டன் போஸ்டின் காலை செய்திமடலான தி எர்லி 202 இன் தொகுப்பாளராகவும் பங்களிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.[19]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Broughton, Kristin (September 26, 2017). "How Ellen Alemany is reinventing CIT". American Banker. https://www.americanbanker.com/news/how-ellen-alemany-is-reinventing-cit. "Alemany has two other children: Jackie, 25, who works as a reporter for CBS in Washington, D.C."
- ↑ "The Washington Post hires White House reporter Jacqueline Alemany to anchor new early-morning newsletter "Power Up"". The Washington Post. 5 September 2018. https://www.washingtonpost.com/pr/wp/2018/09/05/the-washington-post-hires-white-house-correspondent-jacqueline-alemany-to-anchor-new-early-morning-newsletter-power-up/.
- ↑ Jacqueline Alemany (23 October 2017). "How complicated is it to declare opioids a national emergency?". CBS News. https://www.cbsnews.com/news/how-complicated-is-it-to-declare-opioids-a-national-emergency/.
- ↑ "Jacqueline Alemany, Washington, D.C., Anchor of The Early 202". The Washington Post. 2021. https://www.washingtonpost.com/people/jacqueline-alemany/.
- ↑ 5.0 5.1 "Jackie Alemany". Harvard Crimson. Archived from the original on January 19, 2018. பார்க்கப்பட்ட நாள் January 19, 2018.
- ↑ 6.0 6.1 Lerner, Jane (October 29, 2015). "Village justice appointed in Scarsdale". The Journal News.
- ↑ "Jacqueline Alemany | HuffPost". HuffPost. பார்க்கப்பட்ட நாள் December 2, 2017.
- ↑ Daley, Nicholas (May 27, 2021). "Jackie Alemany". Harvard Crimson. https://www.thecrimson.com/article/2021/5/27/Alemany-Post-Player/.
- ↑ "Jacqueline Alemany". International Women's Media Foundation. 2019. பார்க்கப்பட்ட நாள் September 23, 2019.
- ↑ Politico Staff. "BIRTHDAY OF THE DAY: Jacqueline Alemany, WaPo reporter and 'Power Up' anchor". POLITICO (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-01.
- ↑ "CBS News 2016 presidential campaign digital journalists". CBS News. September 16, 2015.
- ↑ "On a street in Ohio, defiant Democrats flock to Trump". CBS News.
- ↑ "New Hampshire: What It Takes In The Granite State". HuffPost.
- ↑ "African Great Lakes Reporting Fellows – International Women's Media Foundation (IWMF)". iwmf.org.
- ↑ "Jacqueline Alemany". International Women's Media Foundation. 2019. பார்க்கப்பட்ட நாள் September 23, 2019.
- ↑ Politico Staff. "BIRTHDAY OF THE DAY: Jacqueline Alemany, WaPo reporter and 'Power Up' anchor". POLITICO (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-01.
- ↑ "CBS News 2016 presidential campaign digital journalists". CBS News. September 16, 2015.
- ↑ "On a street in Ohio, defiant Democrats flock to Trump". CBS News.
- ↑ "African Great Lakes Reporting Fellows – International Women's Media Foundation (IWMF)". iwmf.org.