ஜாக்சன் விகிதம்

முனைவர் ஓலிபாண்ட் ஜாக்சனால் ஆராய்ச்சி செய்யப்பட்டு தோற்றுவிக்கப்பட்டது, ஜாக்சன் விகிதம் (Jackson ratio) விகிதமாகும். இது ஆமை சிற்றினங்களான டெசுடுடோ கிரேக்கா அல்லது டெசுடுடோ ஹெர்மானி ஆகியவை அவற்றின் உகந்த உடல் எடையைப் பராமரிக்கிறதா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முறையாகும். வெற்றிகரமான குளிர்கால உறக்க நிலைக்கு இது மிக அவசியமாகும்.[1]

கணக்கீடு

தொகு

ஜாக்சன் விகிதமானது ஆமையின் எடையைக் கிராம் அளவில் நிறுத்து எடுத்து, அச்சுத்தள மேலோட்டின் (கார்பேசு) நீளத்தின் கனசதுரத்தினை சென்டிமீட்டரில் கொண்டு வகுக்கக் கிடைப்பதாகும்.[1] இது அடிப்படையில் ஆமை அடர்த்தியின் மதிப்பாகும். இதன் அலகு கிராம்/செ.மீ 3 ஆகும். ஜாக்சன் விகிதத்தின் பரிந்துரைக்கப்பட்ட உகந்த மதிப்பு 0.21 ஆகும். எனினும் இதன் வரம்பானது 0.18 முதல் 0.22 வரை இருப்பின் குளிர்கால உறக்க நிலைக்கு ஏற்கத்தக்கது. இதை விடக் குறைவான மதிப்பு எடை குறைந்த ஆமையினையும், அதிகமான ஜாக்சன் மதிப்பு அதிக எடையுள்ள ஆமை என்பதைத் தெரிவிக்கின்றது.

ஜாக்சன் விகிதம் கொடுக்கப்பட்ட மேலோட்டின் நீளத்திற்குக் குறைந்தபட்சம் மற்றும் உகந்த எடைகளின் அளவினை வரைபடமாக வெளிப்படுத்தப்படுகிறது. இதில் கணக்கீடு இல்லாமல் மேற்கூறிய கொள்கையின் அடிப்படையையே வெளிப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Jackson Ratio for Tortoises". Tortoise Protection Group. பார்க்கப்பட்ட நாள் 2017-02-24.

மேலும் பார்க்க

தொகு

இணையவழி ஜாக்சன் விதம் கணக்கிடல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்சன்_விகிதம்&oldid=3128344" இலிருந்து மீள்விக்கப்பட்டது