ஜாக்ருதி யாத்ரா
ஒரே ரயிலில் இந்தியாவில் பல்வேறு பகுதியில் உள்ள வித்தியாசமான முன்மாதிரி நபர்களை, நானூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் யாத்திரையே ஜாக்ருதி யாத்ரா.[1]
இந்தியாவின் அறியப்படாத, உள்ளார்ந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்திய முன்மாதிரி நபர்களை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதும், அதன் மூலம் இளைஞர்களின் தொழில்முனைவுத் தன்மையை ஊக்குவிப்பதும் டாடா ஜாக்ருதி யாத்ராவின் நோக்கம்.
முன்மாதிரி நபர்களின் சிறிய உரைக்குப் பின்னர், இளைஞர்கள் அவர்களுடன் உரையாடுவதற்கும் அதன் மூலம் கற்றுக்கொள்ளவும் வழிவகுக்கப்படுகிறது,
மேலும், பயணத்தில் உழவு, கல்வித்துறை போன்ற பல துறைகளில் இருந்தும் முன்னோடியான பலர் சக பயணிகளாக உடன் வருவதால், மாணவர்கள் உற்சாகமூட்டப்பட்டு கற்றுக்கொள்கின்றனர்.
இதில் பங்கு கொள்வோரில் 60% பேர் கிராமப்பகுதியில் இருந்து வருபவர்கள்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2014-07-26.
- ↑ http://www.jagritiyatra.com/
வெளியிணைப்புகள்
தொகு- http://srkvijayam.com/2014/06/29/tata/ பரணிடப்பட்டது 2014-09-13 at the வந்தவழி இயந்திரம்