ஜாட்டியா சங்சத் பவன்
ஜாட்டியா சங்சத் பவன் (Jatiya Sangsad Bhaban அல்லது National Parliament House, (வங்காள மொழி: জাতীয় সংসদ ভবন) என்பது வங்கதேச தலைநகரான டாக்காவில், ஷேர்-இ-பங்களா நகரிலுள்ள வங்காளதேச நாடாளுமன்ற இல்லமாகும். கட்டிடக் கலைஞர் லூயி கானால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடமானது, உலகின் மிகப்பெரிய சட்டவாக்க அவை வளாகம் ஆகும், இது 200 ஏக்கர் (800,000 சதுர மீட்டர்) கொண்டது.[1]
ஜாட்டியா சங்சத் பவன் Jatiya Sangsad Bhaban জাতীয় সংসদ ভবন | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
வகை | நாடாளுமன்ற கட்டிடம் |
கட்டிடக்கலை பாணி | நவீனம், நினைவுச் சின்னம் |
இடம் | வங்காளதேசம், டாக்கா |
கட்டுமான ஆரம்பம் | 1961 |
நிறைவுற்றது | 1982 |
செலவு | ஐஅ$32 மில்லியன்[1] |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அமைப்பு முறை | வலுவூட்டப்பட்ட கான்கிரீட், செங்கல் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | லூயி கான் முஜார்ல் இஸ்லாம் (இணை கட்டிடக் கலைஞர்) |
இந்தக் கட்டிரமானது கட்டிடக்கலைஞர் லூயி கான் குறித்து எடுக்கப்பட்ட ஆவனப்படமான மை ஆர்கிடெக் என்ற ஆவணப்படத்தில் முக்கிய இடம்பெற்றது. மேலும் ராபர்ட் மெக்கார்டர் என்பவர் Louis I. Kahn என்ற பெயரில் கானின் கட்டிட வடிவமைப்பில் முறை, வாழ்க்கை முறை குறித்து புத்தகம் எழுதியுள்ளார். இப்புத்தகத்தில் வங்கதேசத்தின் ஜாட்டியா சங்சத் பவன் 21ஆம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.[2]
வரலாறு
தொகுஇது கட்டி முடிப்பதற்கு முன்னர் நடந்த முதல் மற்றும் இரண்டாம் நாடாளுமன்ற அவைகள் பழைய சங்சத் பவன் கட்டிடத்தில் கூடின. தற்போது அந்தக் கட்டிடத்தில் பிரதமர் அலுவலகம் செயல்படுகிறது.[3]
வங்காளதேசமானது பாகிஸ்தான் கட்டுப்பாட்டியில் அதன் ஒரு பகுதியாக கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் இருந்த காலகட்டத்தில் பாக்கித்தானில் உள்ள ஏற்றத்தாழ்வையும், கிழக்குப் பாக்கித்தானில் நிலவிய பிரிவினைவாதத்தை சமாளிக்கவும் பாக்கித்தான் அரசு பல முயற்சிகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக பாக்கித்தானின் அயூப் கான் அரசானாது 1961இல் பாக்கித்தான் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியாக டாக்காவில் துணை நாடாளுமன்றத்தைக் கட்டி அதை பாக்கித்தானின் இரண்டாவது தலைநகராக்க திட்டமிட்டது.[4]
இத்திட்டத்தை நல்லமுறையில் முடிக்க. பாக்கித்தான் அரசாங்கமானது தெற்காசிய செயற்பாட்டாளரும் கட்டிடக்கலை நிபுணருமான முஜார்ல் இஸ்லாமின் உதவியை நாடியது. இதற்காக அவர் உலகின் முன்னணி கட்டிடக்கலைஞர்களை இந்த திட்டத்திற்றாக பணியமர்த்த விரும்பினார். அவர் துவக்கத்தில் அல்வார் ஆல்ட்டோ மற்றும் லெ கொபூசியே ஆகியோரை இந்த திட்டத்துக்குள் கொண்டு வர முயற்சித்தார், ஆனால் அவர்கள் இருவரையுமே இதில் கொண்டுவர முடியவில்லை. இறுதியில் முஜார்ல் இஸ்லாம் அவரது முன்னாள் யேல் ஆசிரியரான லூயி கானை ஈடுபடுத்தினார்.[4]
1971 வங்காளதேச விடுதலைப் போர் நடந்தபோது கட்டுமானம் நிறுத்தப்பட்டது. போருக்குப் பிறகு பணிகள் மீண்டும் துவக்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு சனவரி 28 அன்று முடிக்கப்பட்டது. ஜாட்டியா சங்சத் பவன் கட்டிடத்தின் முக்கால்வாசி பணிகள் முடிந்த நேரத்தில் 1974ஆம் ஆண்டு லூயி கான் காலமானார். கட்டிடத்தின் ஏனைய பகுதிகளை கானின் உதவியாளர் டேவிட் விஸ்டம் நிறைவுசெய்தார்.[4]
கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு
தொகுஜாட்டியா சங்சத் பவன் வளாகத்தில் இடம்பெற்ற புல்வெளிகள், ஏரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகள் போன்ற அமைத்தையும் லூயி கான் வடிவமைத்தார். ஜாட்டியா சங்சத் வடிவமைப்பில் வங்க மக்களின் காலச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் பிரதிபலிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டது. ஜாட்டியா சங்சத் பவனின் வெளிப்புறப் பகுதியானது எளிமையானதாகவும், செயற்கையான நீர்ப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளது. ஜாட்டியா சங்சத் பவன் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மெயின் பிளாசா, தெற்கு பிளாசா, பிரசிடென்சியில் பிளாசா எனத் தனிதனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜாட்டியா சங்சத் பவன் முதன்மைக் கட்டிடத்தின் மூன்று பக்கமும் சுற்றியதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஏரியானது, நாடாளுமன்ற உறுப்பினர் அறைகள் வளாகம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எண்ணற்ற நதிகள் பாயும் இடமாக வங்கதேசம் உள்ளதை வெளிப்படுத்தும் விதமாக இந்த செயற்கையான நீர்ப்பாதை அழகியலோடு அமைக்கப்பட்டுள்ளது.[5]
பபன் (முதன்மைக் கட்டிடம்)
தொகுஜாட்டியா சங்சாத் பபனில் தனித்தனியாக மொத்தம் ஒன்பது தொகுதிகள் உள்ளன. இவற்றில் எட்டு தொகுதிகளின் உயரம் மட்டும் 110. அதேபோல் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள எண்கோண வடிவத் தொகுதியின் உயரம் 155 அடியாகும். கட்டிடத்தின் உட்புற பகுதிகள் ஒவ்வொன்றும் பல்வேறு விதமாக இணைக்கப்பட்டுள்ளன.[6]
படக்காட்சியகம்
தொகு-
சூரிய உதய தோற்றம்
-
அவைக் கூடம்
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Jatiya Sangsad Bhaban". banglapedia.org.
- ↑ McCarter, Robert (2005). Louis I. Kahn. London: Phaidon Press. p. 258,270. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7148-4045-9.
- ↑ http://www.parliament.gov.bd/index.php/en/about-parliament/history-and-building
- ↑ 4.0 4.1 4.2 "Jatiyo Sangsad Bhaban (National Parliament House), Bangladesh". 2014. Archived from the original on 4 March 2016.
- ↑ "The Grand Architecture of Jatiyo Sangsad Bhaban – Bangladesh Blog – By Bangladesh Channel". bangladesh.com.
- ↑ "History and Building". Bangladesh Parliament.
மேற்கோள்கள்
தொகு- McCarter, Robert [2004]. Louis I. Kahn. Phaidon Press Ltd, p. 512. ISBN 0-7148-4045-9.
- Wiseman, Carter [2007]. Louis I. Kahn: Beyond Time and Style: A Life in Architecture, New York: W.W. Norton. ISBN 0-393-73165-0.
வெளி இணைப்புகள்
தொகு- Bangladesh Parliament Legislative Information Centre
- ArchNet Entry Images, articles on the Jatiyo Sangshad Bhaban.
- Infographic of Jatiyo Sangshad Bhaban.
- Seven Wonders of the World, Architecture The Globe and Mail has named it as one of the seven architectural wonders of the world.