ஜானகி வசந்த்

ஜானகி வசந்த் (Janki Vasant)(பிறப்பு 1965 ) என்பவர் 2016ஆம் ஆண்டு நாரி சக்தி விருது பெற்ற இந்திய ஆர்வலர் ஆவார்.

தொழில்

தொகு

ஜானகி வசந்த் 1965ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1986ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பான் அமெரிக்க வானுர்தி 73ல் பயணித்தார். சேரிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் சுகாதார சேவைகளைப் பெற உதவுவதை நோக்கமாகக் கொண்டு 2003-ல் சம்வேதனா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினார். வசந்த் அகமதாபாத்தில் உள்ள சேரிகளில் வசிப்பவர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். 250 குழந்தைகள் கல்வி பயிலப் பள்ளி ஒன்றினை நிறுவினார். இப்பள்ளி கல்வி, தடுப்பூசிகள், உணவு மற்றும் பயிற்சி பட்டறைகளை இங்குள்ள குழந்தைகளுக்கு வழங்கியது. இவரது சாதனைகளை அங்கீகரிப்பதற்காக 2016ஆம் ஆண்டில் இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானகி_வசந்த்&oldid=3429737" இலிருந்து மீள்விக்கப்பட்டது