ஜான் கிறிஸ்டியன் பெய்லர்

ஜான் கிறிஸ்டியன் பெய்லர் இளையர் (John Christian Bailar Jr.)(மே 27, 1904[1] – அக்டோபர் 17, 1991)என்பவர் இலினொய் பல்கலைக்கழகத்தில் கனிம வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் ஆவார். இவர் தனது இளங்கலைப் பட்டத்தை கொலராடோ பல்கலைக்கழகத்திலும் தனது முனைவர் பட்டத்தை மிக்சிகன் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

ஜான் கிறிஸ்டியன் பெய்லர் இளையர்
பிறப்பு(1904-05-27)மே 27, 1904
கோல்டன், கொலராடோ
இறப்புஅக்டோபர் 17, 1991(1991-10-17) (அகவை 87)
அர்பானா, இலினொய்
துறைகனிம வேதியியல்
கல்வி கற்ற இடங்கள்மிச்சிகன் பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
  • பிரெடு பாசோலோ
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள்
  • பாசுதேப் தாசுசர்மா
விருதுகள்பிரீஸ்ட்லீ பதக்கம் (1964)

இலினொய் பல்கலைக்கழகத்தில் அணைவுச் சேர்மங்கள் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டார். இவர் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் “அணைவு வேதியியலின் தந்தை” எனவும் அழைக்கப்பட்டார். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இவரது காலத்திற்குச் சற்று முன்னராகத் தான் அணைவு வேதியியல் சிறிதளவு கவனத்தைப் பெறத் தொடங்கியிருந்தது.[2] அணைவுச் சேர்மங்களில் ஏற்படும் ஒரு விதமான முறுக்கு அல்லது திருகல் இவரது பெயராலேயே பெய்லர் திருகல் என அழைக்கப்பட்டது. “கரிம வேதியியல் தொகுப்பு” என்ற புத்தகத் தொடர் மற்றும் கனிம வேதியியல் என்ற பருவ இதழ் வெளிவருவதற்கும் இவர் உதவிகரமாக இருந்தார்.[3] இவரது பணிகள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு அமெரிக்க வேதியியல் குமுகத்தால் பிரீஸ்ட்லி பதக்கமும் வழங்கப்பட்டது. இதே அமைப்பிற்கு இவர் தலைவராகவும் இருந்தார். [4][5] இவருக்கு இரு மகன்கள் உண்டு. அவர்களில் ஒருவர் ஜான் கிறிஸ்டியன் பெய்லர் III ஆவார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bailar, John Christian Jr.". Who was who in America : with world notables, v. XI (1993–1996). New Providence, N.J.: Marquis Who's Who. 1996. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0837902258.
  2. Kauffman, G. B.; Girolami, G. S.; Busch, D. H. (1993). "John C. Bailar Jr. (1904–1991): Father of Coordination Chemistry in the United States". Coord. Chem. Rev. 128 (1–2): 1–48. doi:10.1016/0010-8545(93)80022-W. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-06. பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.
  4. Girolami, Gregory S. (1992). "John C. Bailar Jr. 1904–1991 in memoriam". Inorg. Chem. 31 (15): 3183–3184. doi:10.1021/ic00041a001. 
  5. "Noyes Laboratory at the University of Illinois, Urbana-Champaign". National Historic Chemical Landmarks. American Chemical Society. Archived from the original on December 20, 2012. பார்க்கப்பட்ட நாள் June 28, 2012.
  6. Kauffman, George B. (1994). "John C. Bailar Jr. (1904–1991)". ACS Symposium Series 565: 74–80. doi:10.1021/bk-1994-0565.ch006. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8412-2950-3.