ஜான் பிரவுன் பிரான்சிஸ் எர்ரெசாஃப்
ஜான் பிரவுன் பிரான்சிஸ் எர்ரெசாஃப் (John Brown Francis Herreshoff) (பிப்ரவரி 7, 1850 - ஜனவரி 30, 1932) என்பவர் ஒரு வேதியியலாளரும், பெர்கின் பதக்கத்தின் இரண்டாவது வெற்றியாளர் ஆவார். [1]ஜெனரல் கெமிக்கல் கம்பெனியின் தலைவராகவும் இருந்தார்.
ஜான் பிரவுன் பிரான்சிஸ் எர்ரெசாஃப் | |
---|---|
பிறப்பு | பிரிஸ்டால், றோட் தீவு | பெப்ரவரி 7, 1850
இறப்பு | சனவரி 30, 1932 நியூயார்க் நகரம் | (அகவை 81)
பணி | வேதியியலாளர் |
வாழ்க்கை வரலாறு
தொகு1850 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாள் இவர் றோட் தீவில் பிரிஸ்டலில் சார்லஸ் ஃபிரடெரிக் எர்ரெசாஃப் III (1809-1888) மற்றும் ஜூலியா ஆன் லூயிஸ் (1811-1901) ஆகியோரின் மகனாகப் பிறந்தார். எர்ரெசாஃப் ஒரு உலோகவியல் வேதியியலாளர், கப்பல்கள் மற்றும் டார்பிடோ படகுகளை உருவாக்கும் எர்ரெசாஃப் நிறுவனத்துடன் இணைந்தார். [2] எர்ரெசாஃப் 1899 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஜெனரல் கெமிக்கல் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார். இந்நிறுவனம் 1920 ஆம் ஆண்டில் அல்லைட் கார்ப்பரேஷனுடன் இணைக்கப்பட்டது. [3]
பெர்கின் பதக்கம் பெற்றவர்
தொகுஎர்ரெசாஃப், 1908 ஆம் ஆண்டில், பெர்கின் பதக்கத்தைப் பெற்றார். வேதித்தொழிற்கழகத்தின் அமெரிக்கப் பிரிவால், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு அறிவியலாளருக்கு "பயன்பாட்டு வேதியியலில் புதுமை செய்ததற்காக" ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இது அமெரிக்க வேதியியல் துறையில் வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகக் கருதப்படுகிறது.
இறப்பு
தொகுஎர்ரெசாஃப் 1930 ஆம் ஆண்டில் சனவரி 30 அன்று நியூயார்க் நகரில் உள்ள தனது மகளின் வீட்டில் இறந்தார். [4] பிலடெல்பியாவில் உள்ள லாரல் ஹில் கல்லறையில் இறுதி சடங்கு நடைபெற்றது.
குடும்பம்
தொகுஜான் பிரவுன் பிரான்சிஸ் எர்ரெசாஃப் நான்கு முறை திருமணம் செய்து கொண்டார்.
- இவர் முதலில் கிரேஸ் யூஜீனியா டயர் என்பவரை 1876 ஆம் ஆண்டில் பிப்ரவரி 9 ஆம் நாள் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லூயிசு சேம்பர்லைன் எர்ரெசாஃப் (1876-1967) என்ற மகள் இருந்தார். இவர் ஒரு ஓவியராவார்.
- கிரேஸின் மரணத்திற்குப் பிறகு, இவர் 1882 ஆம் ஆண்டில் அக்டோபர் 25 இல் பிலடெல்பியாவில் எமலின் டுவால் லீ என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தின் மூலம் இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். மகன்களில் ஒருவரான பிரடெரிக் எர்ரெசாஃப் (1888-1920), ஒரு பிரபலமான அமெரிக்க கோல்ப் வீரரானார். இவரது மகள், சாரா லோத்ரோப் எர்ரெசாஃப் (1889-1958) வயிற்றுப் பேரனான கைடோ போர்கியானி (1914-2011), ஒரு பிரபலமான இத்தாலிய ஓவியர் ஆவார்.
- எர்ரெசாஃப் மற்றும் மில்ட்ரெட் 1919 ஆம் ஆண்டு சூன் 4 ஆம் நாள் மன்ஹாட்டனில் விவாகரத்து செய்தனர். மேலும், ஐந்து நாட்களுக்குப் பிறகு, 1919 ஆம் ஆண்டு சூன் 9 ஆம் நாள் எர்ரெசாஃப் கேரி லூகாஸ் ரிட்லியைத் திருமணம் செய்தார்.
- அக்டோபர் 5, 1924 இல் (கேரி இறந்து 6 மாதங்களுக்குப் பிறகு), எர்ரெசாஃப் இர்மா கேரி ரிட்லியை (1872-1946) மணந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dr. J. B. Herreshoff, Chemist, 81, Dies". த நியூயார்க் டைம்ஸ். January 31, 1932. https://select.nytimes.com/gst/abstract.html?res=FB0F17FC3F5513738DDDA80B94D9405B828FF1D3.
- ↑ "Coming International Yacht Race". The San Francisco Call. 10 September 1899. http://chroniclingamerica.loc.gov/lccn/sn85066387/1899-09-10/ed-1/seq-28/#date1=1836&index=5&rows=20&words=Herreshoff+John&searchType=basic&sequence=0&state=&date2=1922&proxtext=John+Herreshoff&y=10&x=18&dateFilterType=yearRange&page=1.
- ↑ "Died". The Sun and the New York Herald. March 24, 1920. http://chroniclingamerica.loc.gov/lccn/sn83030273/1920-03-24/ed-1/seq-11/#date1=1836&sort=relevance&rows=20&words=Frederick+Herreshoff&searchType=basic&sequence=0&index=5&state=&date2=1922&proxtext=Frederick+Herreshoff&y=12&x=14&dateFilterType=yearRange&page=2.
- ↑ "Dr. John Herreshoff, Noted Scientist, Dies at 81 in New York". 31 January 1932. http://idnc.library.illinois.edu/cgi-bin/illinois?a=d&d=DIL19320131.2.71.