ஜாமியா பள்ளிவாசல், நதோவல்

ஜாமியா பள்ளிவாசல் (Jamia Masjid), இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா மாவட்டத்தில் நதோவல் கிராமத்தில் அமைந்துள்ளது.

ஜாமியா பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்லூதியானா, பஞ்சாப்,இந்தியா
சமயம்இசுலாம்

அமைவிடம்

தொகு

இப்பள்ளிவாசல் அமைந்துள்ள நதோவல் ராய்கோட்டிலிருந்து 12 கிமீ தொலைவிலும், லூதியானாவிலிருந்து 54 கிமீ தொலைவிலும் உள்ளது.

வரலாறு

தொகு

1947 இல் இந்தியப் பிரிவினை போது சுமார் 10 முசுலிம் குடும்பங்கள் பாக்கித்தான் சென்றது. ஆனால் 50 முசுலிம் குடும்பங்கள் உள்ளூரிலேயே தங்கினர். அவர்கள் தொழுவதற்கு ஜாமியா பள்ளிவாசலைக் கட்டினர்.[1]

புனரமைப்பு

தொகு

ஜாமியா பள்ளிவாசல் 2015 இல் புனரமைக்கப்பட்டது. மொத்த செலவான 2.5 மில்லியன் இந்திய ரூபாயில் 1.5 மில்லியன் இந்திய ரூபாய் உள்ளூர் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களால் கொடுக்கப்பட்டது. இப்பள்ளிவாசல் நதோவல் பகுதியில் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Non-Muslims help repair Punjab mosque. The times of India.
  2. Sikhs and Hindus help Muslims repair mosque in Indian Punjab. Daily Pakistan.