ஜார்ஜ் எர்பிக்
ஜார்ஜ் அவார்டு எர்பிக் (George Howard Herbig, சனவரி 2, 1920 – அக்டோபர் 12, 2013) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் அவாய் பல்கலைக்கழகத்தில் வானியலாளராகப் பணியாற்றினார்.[1] எர்பிக்-ஆரோ பொருட்கள் கண்டுபிடிப்பில் இவர் பெயர் பெற்றார்.[2][3]
ஜார்ஜ் எர்பிக் George Herbig | |
---|---|
பிறப்பு | வீலிங்கு, மேற்கு வர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்கா | சனவரி 2, 1920
இறப்பு | அக்டோபர் 12, 2013 ஹொனலுலு, ஹவாய் | (அகவை 93)
வாழிடம் | ஹொனலுலு, ஹவாய் |
குடியுரிமை | அமெரிக்கர் |
துறை | விண்மீன்கள் உருவாக்கம், விண்மீன்களிடை ஊடகம் |
பணியிடங்கள் | அவாய் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) |
அறியப்படுவது | எர்பிக்-ஆரோ பொருட்கள் எர்பிக் ஏஇ/பிஇ விண்மீன்கள் |
பின்புலம்
தொகுஇவர் 1920இல் மேற்கு வர்ஜீனியா, வீலிங்கில் பிறந்தார்.[4] எர்பிக் முனைவர் பட்டத்தை 1948இல் பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பெற்றார், அதன் ஆய்வேடு, ”ஒண்முகில்நிலையில் மாறுபடும் விண்மீன்கள்” என்பதாகும். அவரது சிறப்புப் புலம் படிமலர்ச்சியின் தொடக்கநிலை விண்மீன்கள் ஆகும். இவை இடைநிலைப் பொருண்மை உள்ள முந்து முதன்மை வரிசை விண்மீன்களாகும். இவை எர்பிக் Ae/Be வகை விண்மீன்கள் என வழங்கப்படுகின்றன. மேலும் உடுக்கணவெளி ஊடகத்தைக் கண்டுபிடித்தார். இவர் கியூல்லெரிமோ ஆரோவுடன் இணைந்து எர்பிக் ஃஆரோ பொருட்களைக் கண்டுபிடித்தார்; இவை ஒண்முகில் நிலையில் தோன்றும் விண்மீனின் இருமுனைமைப் பாய்வால் ஏற்படும் பொலிவார்ந்த படலத்திட்டுகள்/பட்டைகளாகும். உடுக்கணவெளி விரவல் பட்டை அறிவுப்புல ஆய்விலும் பெரும்பங்களிப்பு செய்துள்ளர். இவ்வகையில் 1963முதல் 1995வரை தொடர்ச்சியாக ஒன்பது கட்டுரைகளை “விரவிய உடுக்கணப் பட்டைகள்” என்றதலைப்பில் வெளியிட்டுள்ளார்.
தகைமைகள்
தொகு- விருதுகள்
- அமெரிக்க வானியற் கழகத்தின் வானியலுக்கான எலன் பி. வார்னர் பரிசு (1955)[5]
- அயலக அறிவியல் உறுப்பினர், மாக்சு பிளான்கு வானியல் நிறுவனம், ஐடல்பர்க்
- அமெரிக்க வானியற் கழகத்தின் என்றி நோரிசு இரசலின் விரிவுரைத் தகைமை (1975)[6]
- லீக் பல்கலைக்கழக விருது (1969)
- பசிபிக் வானியற் கழக புரூசு விருது (1980)[1]
- கனடிய வானியற் கழக பெட்ரி பரிசும் விரிவுரைத் தகைமையும் (1995)
- இவரது பெயரைக் கொண்டவை
- குறுங்கோள் 11754 எர்பிக்
- எர்பிக் Ae/Be வகை விண்மீன்கள்
- எர்பிக்-ஆரோ பொருட்கள்
தேர்ந்தெடுத்த வெளியீடுகள்
தொகு- FU ஓரியானிசு விண்மீன்களின் உயர்-பிரிதிறக் கதிர்வரைவு ApJ 595 (2003) 384–411 [7]
- இள விண்மீன் கொத்து IC 5146, AJ 123 (2002) 304–327 [8]
- பர்னார்டுவின் மெரோப் ஒண்முகில் மீள்வருகை: புதிய நோக்கிட்டு முடிவுகள் AJ 121 (2001) 3138–3148 [9]
- விரவிய உடுக்கணவெளிப் பட்டைகள், Annu. Rev. Astrophys. 33 (1995) 19–73
- இயல்பிகந்த முன்முதன்மை வரிசை விண்மீன் VY தௌரி, ApJ 360 (1990) 639–649
- R Monocerotis இன் கட்டமைப்பும் கதிர்நிரலும் ApJ 152 (1968) 439
- புபொப 1999 அருகில் உள்ள இரு ஒண்முகிற்பொருட்களின் கதிர்நிரல்கள், ApJ 113 (1951) 697
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "The Bruce Medalists: George Howard Herbig". பார்க்கப்பட்ட நாள் 2010-02-01.
- ↑ "George Herbig (1920-2013)". AstroWright. 2013-10-13. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-11-03.
- ↑ எஆசு:10.1038/503470a
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ [1]
- ↑ "Helen B. Warner Prize for Astronomy". American Astronomical Society. Archived from the original on 2010-12-22. பார்க்கப்பட்ட நாள் 2010-02-01.
- ↑ "Henry Norris Russell Lectureship". American Astronomical Society. Archived from the original on 2010-12-22. பார்க்கப்பட்ட நாள் 2010-02-01.
- ↑ Herbig, G. H.; Petrov, P. P.; Duemmler, R. (2003). "High-Resolution Spectroscopy of FU Orionis Stars". The Astrophysical Journal 595 (1): 384–411. doi:10.1086/377194. Bibcode: 2003ApJ...595..384H.
- ↑ "The Young Cluster IC 5146". Adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.
- ↑ எஆசு:10.1086/321077
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand