ஜாலாவார் மாவட்டம்
சலாவார் மாவட்டம் (Jhalawar-ஜலாவார்) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள 33 மாவட்டங்களில் ஒரு மாவட்டமாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க ஜலாவார் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தில் உள்ள கோல்வி கிராமத்தில் பௌத்த கோல்வி குகைகள் உள்ளது.
எல்லைகள்தொகு
இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடமேற்கே கோட்டா மாவட்டமும், வடகிழக்கே பரான் மாவட்டமும், கிழக்கே குணா மாவட்டமும், தெற்கே ராஜ்கார் மர்றும் ஷாஜாபூர் மாவட்டமும் அமைந்துள்ளது.
வட்டங்கள் (தாலுகாக்கள்)தொகு
இம்மாவட்டம்,
- ஜலாவார்
- அக்லேரா
- பாவானி
- மாண்டி
- பிரவா
- கான்பூர்
- மனோகர் தானா
ஆகிய ஆறு தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகைதொகு
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 14,11,327 ஆகும்.[1]இது சுவிட்ஸர்லாந்து நாட்டின் மக்கட் தொகைக்குச் சமமாகும்.[2] மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 227 எனும் வீதத்தில் உள்ளது.[1]கல்வியறிவு 62.13% ஆகும்.[1]
பழங்குடியினர்தொகு
இம்மாவட்டத்தில் பல பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுள் மீனாஸ் மற்றும் பில்ஸ் எனும் பழங்குடி இனத்தவர் பெரும்பான்மையினாராய் உள்ளனர்.
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". 2011-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-01 அன்று பார்க்கப்பட்டது.
Swaziland 1,370,424
Cite uses deprecated parameter|dead-url=
(உதவி); line feed character in|quote=
at position 10 (உதவி); Invalid|dead-url=dead
(உதவி)