ஜாவேப்லு சாய்
ஜாவேப்லு சாய் (Jaweplu Chai) என்பவர் ஓர் இந்தியப் பெண் நீதிபதி ஆவார். இவர் தற்போது நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். 2013இல், சாய் தனது மாநிலத்தின் முதல் பெண் நீதிபதியானார்.[1] இவர் மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள பாசாரில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2]
இந்தச் செயல்பாட்டில், சீனாவின் எல்லையோர மலைப்பாங்கான மாநிலத்தில் சுமார் 30,000 மக்கள்தொகை கொண்ட மிஷ்மி என்று அழைக்கப்படும் இவரது சமூகத்தில் சாய் முதல் வழக்கறிஞர் ஆனார். ஏப்ரல் 2013இல், அவர் அருணாச்சல பிரதேச நீதித்துறை தேர்வில் முதலிடம் பிடித்தார்.[3] தற்பொழுது சாய் யுப்பி மாவட்ட அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வருகின்றார்.
கல்வி
தொகுசாய் டி. சி. எம். அரசு மேல்நிலைப் பள்ளியிலும், தேசுவில் உள்ள அரசு எச். எசு. பள்ளியிலும் படித்தார். சாய் மேகாலயாவில் உள்ள சில்லாங்கில் உள்ள கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் சட்டப் பட்டமும் முடித்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arunachal Pradesh gets its first woman judge in Jaweplu Chai". Hindustan Times. 2013-07-29. https://www.hindustantimes.com/delhi-news/arunachal-pradesh-gets-its-first-woman-judge-in-jaweplu-chai/story-0bOMFT071hpc9JLSQUpqQJ.html.
- ↑ "India: Arunachal's first woman judge is in court". OWSA. http://southasia.oneworld.net/features/india-arunachal2019s-first-woman-judge-is-in-court#.WoA0a51ubMx.
- ↑ 3.0 3.1 "Mishimi girl tops Arunachal Judicial Service exam". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/guwahati/Mishimi-girl-tops-Arunachal-Judicial-Service-exam/articleshow/19796307.cms.