ஜா. லூயிசு போன்கோத்தே

பிரித்தானியப் பறவையியலாளர் (1875-1922)

 

ஜா. லூயிசு போன்கோத்தே
ஜா. லூயிசு போன்கோத்தே (1910-இல்)
பிறப்பு(1875-06-13)சூன் 13, 1875
இறப்பு(1922-10-22)அக்டோபர் 22, 1922
மற்ற பெயர்கள்ஜா. லூயிசு போன்கோத்தே
பணிவிலங்கியலாளர், பறவையியலாளர் & எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பேர்சு ஆப் பிரிட்டன் (Birds of Britain) (1907)

ஜான் லூயிசு ஜேம்சு போன்கோத்தே (J. Lewis Bonhote)(13 சூன் 1875 - 10 அக்டோபர் 1922)[1] என்பவர் இங்கிலாந்து விலங்கியல், பறவையியல் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். [2]

இவரது பெயர் பொதுவாக ஜே. லூயிசு போன்கோத்தே (கீழே உள்ள இவரது வெளியீடுகளின் பட்டியலைப் பார்க்கவும்) என்பதாகும்.

போன்கோத்தே இலண்டனில் பிறந்தார். கேம்பிரிச்சில் உள்ள ஹாரோ பள்ளி மற்றும் திரித்துவக் கல்லூரியில் படித்தார். இவர் 1897-இல் பகாமாசு ஆளுநரின் தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் 1913 முதல் 1919 வரை கீசாவில் உள்ள விலங்கியல் பூங்காவின் துணை இயக்குநராக இருந்தார். போன்கோத்தே 1905-இல் இலண்டனில் நடந்த 4வது பன்னாட்டு பறவையியல் மாநாட்டின் இணைச் செயலாளராக (எர்ன்சுட் ஆர்டெர்ட்டுடன்) இருந்தார் பறவையியல் வளர்ப்புச் சமூகத்தின் செயலாளராகவும் பொருளாளராகவும், பிரித்தானிய பறவையியல் வல்லுநர்கள் சங்கத்தின் செயலாளராகவும் (1907-1913) மற்றும் பிரித்தானிய பறவையியல் நிபுணர்கள் சங்கத்தின் செயலாளர்-பொருளாளராகவும் இருந்தார் (1920–1922).

போன்கோத்தே 1922-இல் இறந்தார். கென்சல் பசுமை கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

ஒரு வகை பாலூட்டிக்கு போன்கோத்தே, போன்கோத்தே சுண்டெலி எனவும் வேலைக்கார சுண்டெலிக்கு மசு பேமுலசு எனவும் பெயரிட்டார்.

போன்கோத்தே பாலைவன எலிச் சிற்றினம் இவரது பெயரால் ஜெர்மிலசு போன்கோத்தே என ஓல்டுபீல்டு தாமசால் பெயரிடப்பட்டது. தற்பொழுது இது ஆண்டர்சன் பாலைவன எலி ஜெர்பிலசு ஆண்டர்சனி எனப்படுகிறது.

நூல் பட்டியல்

தொகு

போன்கோத்தேயின் வெளியீடுகளில்:

மேற்கோள்கள்

தொகு
  1. "John Lewis James Bonhote". Billiongraves.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-23.
  2. The Eponym Dictionary of Mammals. JHU Press. பார்க்கப்பட்ட நாள் 2020-04-23.
  3. Bonhote 1900: see also copy in Biodiversity Heritage Library (BHL).
  4. Bonhote 1907: see also copy in Internet Archive and copy, copy and copy in BHL.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜா._லூயிசு_போன்கோத்தே&oldid=3865195" இலிருந்து மீள்விக்கப்பட்டது