ஜிஜே 1245
ஜிஜே 1245 (GJ 1245) (கிளீசே 1245) என்பது ஜி 208-44, ஜி 208-45 உறுப்புகளைக் கொண்ட இரட்டை விண்மீனாகும், இது 14 ஒளி ஆண்டுகள் தொலைவில், ஒப்பீட்டளவில் சூரிய குடும்பத்திற்கு அருகில் உள்ளது. ஜி 208-44 என்பது இரண்டு செங்குறுமீன்களால் உருவாக்கப்பட்ட ஒரு நெருக்கமான இரட்டை விண்மீனாகும், அதே நேரத்தில் ஜி 208-45 ஒரு செங்குறுமீனாகும். ஜிஜே 1245 என்பது சிக்னசு விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள சூரிய குடும்பத்திற்கு மிக நெருக்கமான 37வது விண்மீன் அமைப்பு ஆகும். ஜிஜே 1245 A, B ஆகியவை செயல் முனைவான சுடருமிழ்வு விண்மீன்கள். [4] மேலும், இந்த இணை கூட்டாக வி1581 சிகுனி என பெயரிடப்பட்டுள்ளது. [5]
A blue band light curve for a flare of V1581 Cygni. The left-most point shows a 1 sigma error bar. Adapted from Cristaldi and Rodonò (1976)[1] | |
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Cygnus |
வல எழுச்சிக் கோணம் | 19h 53m 54.492s |
நடுவரை விலக்கம் | +44° 24′ 53.41″ |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 13.41 / 14.01 / 16.75 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M5.5 / M6 / M5.5 |
மாறுபடும் விண்மீன் | UV Cet[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: 349.363±0.056[3] மிஆசெ/ஆண்டு Dec.: −480.322±0.054[3] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 214.5745 ± 0.0476[3] மிஆசெ |
தூரம் | 15.200 ± 0.003 ஒஆ (4.660 ± 0.001 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 15.31 / 15.72 / 18.46 |
விவரங்கள் | |
ஒளிர்வு | 0.000084 / 0.000048 L☉ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Location of GJ 1245 in the constellation Cygnus |
மூன்று விண்மீன்களில் மிகப்பெரியது, ஜி208-44 A ( ஜிஜே 1245 A). இது சூரியனின் 11% பொருண்மையை மட்டுமே. கொண்டுள்ளது. மற்ற இரண்டு விண்மீன்களில் ஜி 208-44 B ( ஜிஜே 1245 C), விண்மீன் A க்கு 8 வானியல் அலகு தொலைவில் உள்ளது; இது சூரியனின் 7% பொருண்மையைக் கொண்டதாகும். மூன்றாவது விண்மீனான ஜிஜே 1245 B, விண்மீன் A இலிருந்து 33 வானியல் அலகு தொலைவில் உள்ளது, மேலும்ந்தன் பொருண்மை சூரியனைப் போல 10% ஆகும்; A விண்மீனில் இருந்து பார்க்கும் போது புவியில் இருந்து வெள்ளி போல் பொலிவாகத் தோன்றும்.
மேலும் காண்க
தொகு- அருகிலுள்ள விண்மீன்கள், பழுப்பு குறுமீன்களின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகுமேலும் படிக்க
தொகு- Harrington, R. S.; Dahn, C. C.; Kallarakal, V. V.; Guetter, H. H.; Riepe, B. Y.; Walker, R. L.; Pier, J. R.; Vrba, F. J. et al. (1993). "U.S. Naval Observatory photographic parallaxes - List IX". Astronomical Journal 105 (4): 1571–1580. doi:10.1086/116537. Bibcode: 1993AJ....105.1571H.
- Henry, Todd J.; Subasavage, John P.; Brown, Misty A.; Beaulieu, Thomas D.; Jao, Wei-Chun; Hambly, Nigel C. (2004). "The Solar Neighborhood. X. New Nearby Stars in the Southern Sky and Accurate Photometric Distance Estimates for Red Dwarfs". The Astronomical Journal 128 (5): 2460–2473. doi:10.1086/425052. Bibcode: 2004AJ....128.2460H.
- Smart, R. L.; Ioannidis, G.; Jones, H. R. A.; Bucciarelli, B.; Lattanzi, M. G. (2010). "Cool dwarfs stars from the Torino Observatory Parallax Program". Astronomy and Astrophysics 514: A84. doi:10.1051/0004-6361/200913424. Bibcode: 2010A&A...514A..84S.
- Dittmann, Jason A.; Irwin, Jonathan M.; Charbonneau, David; Berta-Thompson, Zachory K. (2014). "Trigonometric Parallaxes for 1507 Nearby Mid-to-late M Dwarfs". The Astrophysical Journal 784 (2): 156. doi:10.1088/0004-637X/784/2/156. Bibcode: 2014ApJ...784..156D. Table with parallaxes.
வெளி இணைப்புகள்
தொகு- ↑ Cristaldi, S.; Rodonò, M. (April 1976). "Discovery of Flare Activity in the Visual Binary G 208-44/45". Astronomy and Astrophysics 48: 165. Bibcode: 1976A&A....48..165C. https://ui.adsabs.harvard.edu/abs/1976A&A....48..165C. பார்த்த நாள்: 28 December 2021.
- ↑ Samus, N. N.Expression error: Unrecognized word "etal". (2009). "VizieR Online Data Catalog: General Catalogue of Variable Stars (Samus+ 2007-2013)". VizieR On-line Data Catalog: B/GCVS. Originally Published in: 2009yCat....102025S 1. Bibcode: 2009yCat....102025S.
- ↑ 3.0 3.1 3.2 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G. (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
- ↑ Lurie, John C.; Davenport, James R. A.; Hawley, Suzanne L.; Wilkinson, Tessa D.; Wisniewski, John P.; Kowalski, Adam F.; Hebb, Leslie (2015). "Kepler Flares III: Stellar Activity on GJ 1245A and B". The Astrophysical Journal 800 (2): 95. doi:10.1088/0004-637X/800/2/95. Bibcode: 2015ApJ...800...95L.
- ↑ Kholopov, P. N.; Kukarkina, N. P.; Perova, N. B. (1978). "63rd Name-List of Variable Stars". Information Bulletin on Variable Stars 1414: 1. Bibcode: 1978IBVS.1414....1K.