கலை (கோணம்)

(பாகைத்துளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கலை அல்லது பாகைத்துளி (ஆங்கிலம்: Minute of Arc) என்பது கோணத்தின் துணை அலகாகும். இது பாகையில் அறுபதிலொருபாகம் (160) ஆகும்; மேலும் 60 விகலைகள் ஒரு கலைக்கு சமமாகும். இது (') என்ற குறியீடினால் குறிக்கப்படுவது வழக்கம். 50' என எழுதும்போது அது 50 கலை என்பதைக் குறிக்கும்.

ஓர் பாகை என்பது ஒரு வட்டத்தின் முந்நூற்று அறுபதிலொருபாகம் (1360) என்றால், ஓர் கலை என்பது ஒரு வட்டத்தின் 121600 (அல்லது, ஆரையத்தில் π10800) பாகம். இது மிகச்சிறிய கோணங்களுடன் தொடர்புடைய வானியல், பார்வை அளவையியல், கண்ணியல், ஒளியியல், நில அளவியல் மற்றும் மறைசுடுதல் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

பயன்பாடுகள்

தொகு

நிலப்படவரைவியலில் பாகைத்துளி பயன்படுகின்றது. நில உருண்டை ஒரு முழுச்சீரான உருண்டை இல்லை எனினும், கடல் மட்டத்தில் நில நடுக்கோட்டை வட்டமாகக் கொண்டாலொரு பாகைத்துளி என்பது சுமார் 1.86 கிலோ மீட்டர் (1.15 மைல்). இதனையே சற்றேரக்குறைய 1 நாட்டிக்கல் மைல்(கடலோட்ட மைல்) ஆகும்.

மறைசுடு துப்பாக்கிகள்

தொகு

மனித கண்ணியல்

தொகு

வானியல்

தொகு

இவ்வகை சிறு கோணங்கள் வானியலில் தொலைவில் உள்ள விண்மீன்கள் பற்றிய அளவீடுகளுக்கு மிகவும் பயன்படுவது

இதனையும் பார்க்க

தொகு
  1. பாகை
  2. புடைநொடி இந்த வானியல் அலகை பாகை அலகுளை கொண்டே கணக்கிடுகின்றனர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலை_(கோணம்)&oldid=2747402" இலிருந்து மீள்விக்கப்பட்டது