ஜிஸ்மோ திட்டம்
ஜிஸ்மோ திட்டமானது இணையமூடாகவும் வேறுவலையமைப்புகளூடாகவும் ஒலியழைப்புக்களை ஏற்படுத்தும் இலவசமான மென்பொருட் தொலைபேசியாகும்.
ஜிஸ்மோ திட்டமானது மைக்கேல் ராபட்ஸ்சனினால் ஆரம்பிக்கப் பட்டது. இதனுடன் போட்டியிடும் ஸ்கைப் போன்றல்லாமல் ஜிஸ்மோதிட்டமானது அழைப்புக்களைக் கையாள்வதற்குத் திறந்த மூலநிரல்களைப் பாவிக்கின்றது. ஜபர் தொழில்நுட்பத்துடன் (கூகிள் டாக் இதைப் பாவிக்கின்றது). முறைகளையும் கையாள்கின்றது. எனினும் இது தனக்கேயுரிய பதிப்புரிமையுடைய மென்பொருட் பாகங்களையும் கொண்டுள்ளது. ஜிஸ்மோ கிளையண்டானது முற்றிலும் மூடியநிரலிலேயே ஆக்கப் பட்டுள்ளது.
எழுத்துக்களிலான அரட்டை அரங்கானது ஜபர் தொழில் நுட்பத்தில் இயங்குகின்றது. இதில் ஏதேனும் ஜபர் கிளையண்டில் (எடுத்துக் காட்டாக கெயிம்) ஊடாக உள்நுளையலாம். உள்நுளையும் போது பயனர் கணக்கானது username@chat.gizmoproject.com என்றவாறு அமையும்.
இது சோதனை முயற்சியாக பயனர்களிற்கு 60 நாடுகளிற்கு இலவச அழைப்பை ஏற்படுத்த உதவுகின்றது. இது பதிவு செய்யப் பட்ட பயனர் ஒருவரை பிறிதொரு பயனர் தொலைபேசிக்கு இலவச அழைப்பொன்றை ஏற்படுத்த முடியும்.
வெளி இணைப்புகள்
தொகு- ஜிஸ்மோ இணையத்தளம் பரணிடப்பட்டது 2008-05-17 at the வந்தவழி இயந்திரம்
- ஜிஸ்மோ தொலைத் தொடர்பாடல் பற்றிய ஆய்வு