ஜி. சாயன்னா
ஜி. சாயன்னா ( G. Sayanna ; 5 மார்ச் 1951 - 19 பிப்ரவரி 2023) தெலங்காணா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். [1] இவர் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும், செகந்திராபாத் கண்டோன்மென்ட் சட்டப் பேரவைத் தொகுதியில் ஐந்து முறை உறுப்பினராகப் பணியாற்ற்யுள்ளார்.[2]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஜி. சாயன்னா 1951 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி பிறந்தார். உசுமானியா பல்கலைக்கழகத்தில் அறிவியல், கலை மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர்.
அரசியல் வாழ்க்கை
தொகுசாயன்னா தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1994, 1999 மற்றும் 2004 இல் செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதியிலிருந்து சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2009 இல் பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளர் பி. சங்கர் ராவ் என்பவரிடம் தோல்வியடைந்தார். இவர் ஐதராபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின்இயக்குனராக ஆறு முறை பணியாற்றினார். ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் தெருவோரக் குழந்தைகளின் மறுவாழ்வுக்கான வீடுவழங்கும் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். சாயன்னா குழந்தை கடத்தல் தொடர்பான குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
சாயன்னா, 2014 இல் நடந்த தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதியிலிருந்துபோட்டியிட்டார். திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் உறுப்பினராக இருந்தார். பின்னர் 2015 இல் பாரத் இராட்டிர சமிதி கட்சியில் சேர்வதற்காக தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். 2018 இல் மீண்டும் செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
இறப்பு
தொகுசாயன்னா சிறுநீரகம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு சிகந்திராபாத்திலுள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மாரடைப்பு காரணமாக 18 பிப்ரவரி 2023 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இவரது உடல்நிலை மோசமடைந்து 2023 பிப்ரவரி 19 அன்று திடீரென மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது [4] [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ The Indian Express (19 February 2023). "Telangana: 5-time Secunderabad Cantt MLA G Sayanna passes away" (in en) இம் மூலத்தில் இருந்து 14 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240114121549/https://indianexpress.com/article/cities/hyderabad/telangana-five-time-secunderabad-cantt-mla-g-sayanna-passes-away-8454822/.
- ↑ The Hindu (19 February 2023). "BRS MLA from Secunderabad Cantonment G. Sayanna no more" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 14 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240114121748/https://www.thehindu.com/news/national/telangana/brs-mla-from-secunderabad-cantonment-g-sayanna-no-more/article66528702.ece.
- ↑ The Times of India (20 February 2023). "‘Merger Man’ & 5-time Telangana's Secunderabad Cantonment MLA G Sayanna dies before his dream comes true" இம் மூலத்தில் இருந்து 14 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240114132224/https://timesofindia.indiatimes.com/city/hyderabad/merger-man-5-time-telanganas-secunderabad-cantonment-mla-g-sayanna-dies-before-his-dream-comes-true/articleshow/98075089.cms.
- ↑ India Today (19 February 2023). "G Sayanna, BRS MLA from Secunderabad Cantonment, passes away at 72" (in en) இம் மூலத்தில் இருந்து 14 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240114131436/https://www.indiatoday.in/india/story/g-sayanna-brs-mla-from-secunderabad-cantonment-passes-away-2336896-2023-02-19.
- ↑ The News Minute (19 February 2023). "Secunderabad Cantonment MLA from BRS G Sayanna passes away at 72" (in en) இம் மூலத்தில் இருந்து 14 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240114131810/https://www.thenewsminute.com/telangana/secunderabad-cantonment-mla-brs-g-sayanna-passes-away-72-173483.