ஜி. ஜான்சன்
ஜி. ஜான்சன் (பிறப்பு: டிசம்பர் 20 1946) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். தரணி மைந்தன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வைத்தியராவார். மேலும் ஜோகூர் மாநிலத் தமிழ் நேசன் இலக்கியப் பேரவையின் தலைவருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
தொகு1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நெடுங்கதை, கட்டுரைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் தினமுரசு நாளிதழிலும், தமிழ் நேசன் நாளிதழிலும் மருத்துவக் கேள்வி - பதில் எழுதி வருகிறார்.
பரிசில்களும், விருதுகளும்
தொகு- டத்தோ பத்மநாதன் இலக்கிய விருது (1994)
- கதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் பல பரிசுகள் பெற்றதுண்டு.
உசாத்துணை
தொகு- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் ஜி. ஜான்சன் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம்