ஜி. யூ. போப் மொழிபெயர்ப்பு விருது

ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது என்பது தமிழ்நாட்டிலுள்ள திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவிய பணிப்புலமான தமிழ்ப்பேராயம் என்பதன் வழியாக அளிக்கப்படும் தமிழ்ப் பேராய விருதுகளில் ஒன்றாகும். தமிழில் வெளியான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களில் ஒன்றைத் தேர்வு செய்து, அந்நூலின் நூலாசிரியர் விருதுக்குரியவராகத் தேர்வு செய்யப்படுவார். இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 1,50,000 பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகின்றன.

விருது பெற்ற நூல்கள்தொகு

ஆண்டு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு குறிப்புகள்
2012 என் பெயர் சிவப்பு க. குப்புசாமி காலச்சுவடு பதிப்பகம்
2013 அசடன் ம. அ. சுசீலா -