ஜீன் ஆடம்சன்
ஜீன் ஆடம்சன் எம்.பீ.ஈ (Jean Adamson MBE-Order of the British Empire), (பிறப்பு: பிப்ரவரி 29, 1928) இவர் குழந்தைகளின் புத்தக எழுத்தாளர் மற்றும் படம் வரைபவர் ஆவார். அவரது நன்கு அறியப்பட்ட புத்தகங்கள் டாப்ஸி மற்றும் டிம் ஆகும். முதலாவது புத்தகம் 1960 இல் வெளியிடப்பட்டு, 2003 ஆம் ஆண்டில் மறுவெளியீடு செய்யப்பட்டது.[1][2]
ஜீன் ஆடம்சன் MBE | |
---|---|
பிறப்பு | 29 பெப்ரவரி 1928 பெக்காம், இங்கிலாந்து |
தொழில் | எழுத்தாளர், விவரிப்பாளர் |
தேசியம் | பிரித்தானியர் |
கல்வி நிலையம் | இலண்டன் பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | டாப்சி மற்றும் டிம் |
துணைவர் | காரெத் ஆடம்சன் (தி. 1957; இற. 1982) |
பிள்ளைகள் | லியோ (1961) கேபிரில்லெ (1963) கேட்டி (1965) |
வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுஜீன் ஆடம்சன் தென்கிழக்கு லண்டனில் பெக்காமில் பிறந்தார். இலண்டன் பல்கலைக் கழகத்தில் கோல்ட்ஸ்மித்ஸ் கல்லூரியில் புத்தகங்களுக்கு ஓவியம் வரைதலைப் படிக்கும் முன், இலக்கணப் பள்ளியில் பயின்றார். பட்டம் பெற்ற பிறகு, அவர் பல்கலைக்கழகத்தில் படம் வரைதல் மற்றும் வடிவமைப்பு பற்றிக் கற்பித்தார்[1]. ஆடம்ஸன் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது தனது எதிர்கால கணவரும் மற்றும் சக எழுத்தாளருமான கரெத் ஆடம்சனை சந்தித்தார். அவர்கள் 1957 இல் திருமணம் செய்து, நியூக்கேசல் நகருக்கு குடிபெயர்ந்தார்கள், அங்கே அவர்கள் இருவரும் குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுத ஆரம்பித்தார்கள்.[3][4]
ஆடம்சன் 1968 ஆம் ஆண்டில் இருந்து, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயரில் உள்ள ஸ்ட்ரெத்தாமில் வாழ்ந்து வந்தார். திருமணமாகி 25 ஆண்டுகளுக்குப் பிறகு, 1982ல் கரெத் மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக இறந்தார்.[3] செப்டம்பர் 2009 ஆம் ஆண்டு ஸ்ட்ரெத்தாமில் நடைபயிற்சி மேற்கொண்டபோது ஆடம்சன் கொள்ளையரால் தாக்கப்பட்டார். அந்நிகழ்வில் அவரது கை முறிந்தது.[5]
விருதுகள்
தொகுஆடம்ஸன் 1999 ல் குழந்தைகளுக்கான இலக்கியத்திற்கு ஆற்றிய சேவைக்காக பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் மிகச் சிறந்த ஒழுங்கின உறுப்பினர் ஆனார். பின்னர் 2016 ஆம் ஆண்டில் தனது கோல்ட்ஸ்மித்ஸ் கல்லூரியின் கெளரவ உறுப்பினர் ஆக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Jean Adamson". Goldsmiths University of London. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.
- ↑ "Relaunch for Topsy and Tim". news.bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.
- ↑ 3.0 3.1 "Topsy and Tim author Jean Adamson to be made Honorary Fellow of Goldsmiths, University of London". Ely-News. 16 February 2016. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.
- ↑ Rhodes, Giulia (31 October 2013). "Topsy and Tim are just like members of the family". Sunday Express. பார்க்கப்பட்ட நாள் 18 September 2016.
- ↑ "Children's author, 81, is robbed". news.bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.