ஜீலான் மத்திய கல்லூரி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜீலான் மத்திய கல்லூரி இலங்கையின் தெற்கே பாணந்துறையில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும்.
வரலாறு
தொகுஅல்லாஹ்வின் உதவியை என்றும் பெறுவோம் என்ற மகுடத்தின் மணியாக ஒளித்துநிற்கும் பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி நீண்ட வரலாற்றினைக் கொண்டுள்ளது.
இலங்கை மணித்திருநாட்டில் கொழும்பு நகரிலிருந்து ருஹ{னுத் தலைநகரை நோக்கி கருநாகம் போல நெளிந்து செல்லும் காலி நெடுஞ்சாலையின் 22 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் ஹேனமுல்லை என்ற எழில் மிகு கிராமம் அமைந்துள்ளது. முஸ்லிம்கள் செறிந்து வாழும் கேந்திர நிலையமான இவ் ஊர் ஆதியில் “ஊர்மனை” என்றே அழைக்கப்பட்டது.
மேல் மாகாணத்தின் இதயமான கொழும்பு மாவட்ட தென்முனையையும் களுத்துறை மாவட்டத்தின் வடமுனையையும் பிரிக்கும் எல்லைக்கோடு பிரிக்கும் பொல்கொடை ஆற்றின் தீபகற்பமாக அமைந்துள்ள கவின் மிகு பிரதேசம் பாணந்துறை வடக்காகும். நீர்வளமும் நிலவளமும் மிக்க இப்பிரதே சத்தில் ஹேனமுல்லை, சரிக்கமுல்லை, பள்ளிமுல்லை, கொறக்காணை, கெசெல் வத்தை, வத்தல்பொலை என்ற ஆறு பிரதேசங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வாழும் பிள்ளைகளின் கல்விப் பசிக்கு அறிவமுதூட்டும் அன்னையாக ஜீலான் மத்திய கல்லூரி விளங்குகின்றது.
சமூக மறுமலர்ச்சி தந்தை அறிஞர் சித்திலெப்பை, சமூக சிந்தனையாளர் ஜ.எல்.எம்.அப்துல் அஸீஸ், பரோபகாரி வாப்பாச்சி மரிக்கார் இன்னோரன்ன சான்றோர்கள் முஸ்லிம் சமூக கல்வி எழுச்சிக்கு அழைப்பு விடுத்தபோது எங்கள் ஊரைச் சேர்ந்த வர்த்தகச் செம்மல் உதுமான் லெப்பை மரிக்காரும் பிரபல மாணிக்க வியாபாரி கொறக்காணை மீரார் லெப்பை மரிக்காரும் ஊர்மனை மஹல்லா மின்னா மரிக்கார் மற்றும் நாகூர் ஆலிம் சஹீப் போன்ற சன்மார்க்கப் பெரியார்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். இதன் விளைவாக 1900 ஆம் ஆண்டில் நாகூர் ஆலிம் இல்லத்தில் திண்ணைப் பள்ளிக் கூடமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இதுவே ஜீலான் பாடசாலையின் உதயத்திற்கு அத்திவாரமெனலாம்.
1906ம் ஆன்டில் அல்- முபாரக் ஜூம்மா மஸ்ஜீத்யை அன்டிய நிலத்தில் “ட” வடிவ அமைப்பில் கட்டிடமொன்று கட்டப்பட்டு அங்கு இத் திண்ணைப்பள்ளி மாற்றப்பட்டது. பின்னர் அரசாங்கம் இதனைப் பொறுப்பேற்று “ஹேண முல்லை தமிழ் கலவன் பாடசாலை” எனப் பெயர்சூட்டி இயக்கிய அதேநேரம் மாலை நேரத்தல் குர்ஆன் ஓதல் பாடசாலையாகவும் இது விளங்கியது. இதுவே இன்றைய கனிஷ்ட பிரிவாக பரிணமிக்கிறது.
மேலும் 1959 ஆம் ஆண்டு இது “ஹேனமுல்லை முஸ்லிம் மகா வித்தியால யமாக” தரமுயர்த்தப்பட்டது. காலப்போக்கில் கல்வி, பௌதீக வளங்கள் நிறைந்த இப் பாடசாலைக்கு புதுப்பெயர் ஒன்றைச் சூட ஆலோசனை நடத்தியபோது பாடசாலை யின் பழைய மாணவர்களில் ஒருவரான பேராசிரியர் கலாநிதி. எம்.எம். உவைஸ் அவர்கள் “ஜீலான்” என்ற பெயரை பிரேரித்தார். அதனை யாவரும் ஏகமானதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் 1992.03.09 இல் மேல்மாகாண கல்வி அமைச்சரினதும் உயர்கல்வி அமைச்சரின தும் கல்வி முன்னேற்ற அறிக்கைக்கு இணங்க பிரதேசத்தில் 1 யுடீ தர ஒரே பாடசாலையாக அங்கீகாரம் பெற்றது. அதனைத் தொடர்ந்து 1999 இல் நவோதய திட்டத்தின் கீழ் அரசாங் கத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்டது.
1906 ஆம் ஆண்டு உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தற்போது சிரேஷ்ட, கனிஷ்ட மற்றும் விசேட பிரிவு எனப்பரிக்கப்பட்டு மூன்று இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது இக்கல்லூரியில் சிரேஷ்டபிரிவில் 59 ஆசிரியர்களும் கனிஷ்ட மற்றும் விசேட பிரிவில் 28 ஆசிரியர்களும் கற்பிப்பதுடன் சிரேஷ்டபிரிவில் பிரிவில் 1043 மாணவர் களும் கனிஷ்ட பிரிவில் 700 மாணவர்களும்; கல்வி பயில்கின்றனர்.
சிரேஷ்டபிரிவானது ஹேனமுல்லை,பாட சாலை ஒழுங்கை வீதியில் அமைந்துள்ளது, கனிஷ்ட பாடசாலை தொடர்ந்தும் திக்கலவீதியில் அமைந்துள்ள அல்- முபாரக் ஜூம்மா மஸ்ஜீதுக்கு அருகில் இயங்கி வருகின்ற அதேநேரம் விசேட தேவை யுடைய மாணவர்களுக்காக விசேட பிரிவு கனிஷ்ட பாடசாலை வளாகத்திற்கு முன்னால் அமைந்து காணப்படுகிறது.
ஜீலான் வரலாற்றுப் பார்வையில் இப்பாட சாலையில் பணியாற்றிய அதிபர்களைப் (தலைமை ஆசிரியர்கள்) பற்றி நோக்குவது இன்றியமையாதாகும். அந்தவகையில் ஜீலான் வரலாற்றில் முதலாவது தலைமை ஆசிரியராக பணிபுரிந்த பெருமையை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்;த திரு. சாமுவேல் அவர்கள் பெறுகி றார்கள். இவரைத் தொடர்ந்து 1910ல் திரு. சற்குணம், 1916ல் திரு. கந்தையா, 1926ல் திரு.தேவச சகாயம், 1935ல் திரு. எஸ் கர்திகேசு ( இவர் இக்கலூரியின் பழைய மாணவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் தகப்பனாவார்), திரு. முருகேசு, திரு. செல்லையா, திரு. கனகலிங்கம், திரு. ஏ. சுப்பிரமணியம் ஆகியோர் 1959ம் ஆண்டு வரை தலைமை ஆசிரியராக சேவையாற்றினர்.
1959 ஆம் ஆண்டு இது “ஹேனமுல்லை முஸ்லிம் மகா வித்தியலயமாக” தரமுயர்த் தப்பட்டதில் இருந்து சேவைபுரிந்ததிலிருந்து முஸ்லிம் அதிபர்கள் நியமிக்கப்பட்டனர் இந்தவகையில் இங்கு சேவையாற்றிய முதல் முஸ்லிம் அதிபர் பேருவளையைச் சேர்ந்த ஜனாப் ஏ.எம் முஹம்மது அலி என்பவராவார். இவரைத் தொடர்ந்து காலியைச் சேர்ந்த ஓ.எள்.ஏ ஹபீல், தொட்டவத்தையைச் சேர் ந்த ஏ.எம்ஸம்ஸ{தீன், முஹம்மது ஸித்தீக், எம்.எஸ்.எம். ஸல்லதீன், மௌலவி எஸ்.எம். ஏ.எம் முஸம்மில், ஜனாப் ஏ.எம்.எம் இல்யாஸ், ஐ.எல்.எம் நியாஸ், எம்.எச்.எம் ஹம்மதுபசீர், எம்.எச் முஹம்மது கமர், அஹமட் இஸ்மாயீல், ஏ.சி.எம் சாலி, எம்.ஐ.எம் ஜாபிர், என்.பி.எம் சுல்தான், எஸ்.எச்.எம் நௌபல், என். அஹமட் யாஸீன் , எஸ்.எச்.எம் நௌபல் மற்றும் கல்முனை யைச் சேர்ந்த பிரபல அறிவிப்பாளர் ஜனாப். ஏ.ஆர்.எம் ஜிப்ரி, மற்றும் திருமதி. யோகராணி அவர்களும் பணிபுரிந்ததோடு அவரைத் தொடர்ந்து இன்றுவரை திருமதி. ஏ.எச். மும்தாஜ்பேகம் அவர்கள் பணிபுரிகி ன்றார்கள்.
தொடர்ந்தும் இப்பாடசாலையின் வரலாற்றினை எழுதுகின்ற போது அதன் பொளதீக அபிவிருத்தி தொடர்பாக நோக்க வேண்டி யுள்ளது. பாடசாலை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக 1960ம் ஆண்டைக் குறிப்பிலாம். 1960ம் ஆண்டு திரு.வெஸ்லி குணவர்தன அவர்கள் பாணந்துறைப் பிரதிநிதியாக சட்டசபைக்கு தெரிவு செய்யப்பட்டார். இவர் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். அவரின் சகபாடிகளான யு.ஆ.ஆ. இல்யாஸ், ஆ.ஐ.ஆ.சுஹைர் ஆகியோரின் வேண்டு கோளின்படி கணிஷ்ட பிரிவில் உள்ள முதலாவது இருமாடிக் கட்டிடத்தை 1985 இல் கட்டித்தந்தார். அதை அப்போதைய கல்வி அமைச்சரான கொளரவ பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் திறந்துவைத்தார்கள். அதேபோன்று பாடசா லைக்கு விளையாட்டு மைதானம் இல்லாததை அறிந்த திரு. வெஸ்லீ குணவர்தன திக்கல வீதியையும் ஹிஜ்ரா மாவத்தை வீதியையும் இணைக் குமிடத்திலுள்ள காணி ஒன்றை விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக பெற்றுத்தந் தார். இந்த இடம் தற்போது விசேட தேவையுடைய பாடசாலையாக அபிவிருத்தி செய்ய ப்பட்டு செயற்பட்டுகிறது.
1971.08.01ல் நாடாளுமன்ற உருப்பினர் திரு. வெஸ்லியின் நெருங்கிய நண்பரான சிரேஷ்ட ஆசிரயர் யு.ஆ.ஆ. இல்யாஸ் ஜீலானில் அதிபரானார் இவர் பாணந்துறைப் பிரதேச முஸ்லிம் மாணவிகள் நலன் கருதி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டிய தேவையை திரு வெஸ்லி குணவர்தன அவர்களின் கவணத்திற்குக் கொண்டுவந்தார். இதனால் காலி வீதியின்; மேற்குப்ப குதியிலுள்ள 2 ½ ஏக்கர் காணியை மகளிர் கல்லூரியை அமைப்ப தற்காக பெற்றுத்தந்து அங்கு இரு மாடிக்கட்டடிடம் ஒன்றை அமைக்கும் பணியையையும் துரிதப்படுத்தினார். இக்கட்டு மாணப் பணிக்கான அரைவாசிச செலவை தொழிலதிபர் யு.று.ஆ. பாரூக் ஹாஜியார் வழங்கினார். மறுபாதியை அரசு வழங்கியது. இக் காணியில் தற்போது சிரேஷ்ட பிரிவு பாடசாலை இயங்குகிறது.
அதிபர் அஹமட் இஸ்மாயீல் அவர்களின் காலத்தில் ஜீலானுக்கு விஞ்ஞானகூடம் இல்லாத குறை உணரப்பட்டு அக்குறையை நீக்க பாணந்துறை கல்விப் பேரவையின் வேண்டுகோளின் படி இப் பிரதேச தனவந்தர் சம்சுதீன் ஹாஜியார் கட்டிடம் ஒன்றை கட்டித்தந்தார் ஆனால் ஜீலானில் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவு இல்லாத காரணத்தினால் கனிஷ்டதர விஞ்ஞான கூடம் ஒன்றை ஆரம்பிக்கவே கல்வித்திணைக்களம் அனுமதி வழங்கியது. அதை அப்போதைய பிரதமர் கௌரவ ஆர்.பிரேமதாஸா அவர்கள் திறந்து வைத்தார்கள்.
ஜீலானுக்கு பழைய மாணவர்கள் பலரும் சிறுசிறு கட்டிடங்கள், சுற்றுமதில்கள் போன்ற வற்றை கட்டித் தந்துள்ளமையை மறக்க முடியாது. குறிப்பாக அதிபர் ஜனாப். என்.பி.எம்.சுல்தான் அவர்களின் ஏற்பாட்டில் இப்பாடசாலையின் பழைய மாணவியான மர்ஹ{மா உம்முல் மலீஹாவின் நினைவாக அவர்களின் புத்திரர்களான ஜனாப். முபஷ்ஷிர், ஜனாப். மார்ஜான் ஆகியோர் 4 ½ கோடி ரூபா செலவில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட படச்சட்ட மேடை மற்றும் உயர் தொழிநுட்பத்துடன் கூடிய கேட்போர் ;கூடத்தைக் 2006ல் கட்டித் தந்தமையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
மேலும், எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத் தலைவரும் இப் பிரதேசப் பெரும் பரோபகாரியுமான ஜனாப். அஹமத் புவாத் ஹாஜியார் அவர்கள் வகுப்பறைகள், சுற்றுமதில்கள் மற்றும் தளபாட வசதிகளை தந்து இப்பாடசாலைக்கு உதவி செய்துள்ள தோடு அன்மையில் விஞ்ஞான தொழிநுட்ப மற்றும் பல வசதிகளையும் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடத்தை தனது சொந்த செலவில் வழங்க ஆவணம் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இப்பகுதியில் காணப்படுகின்ற மிகப்பெரிய பெயின்ட் நிறுவனமான மல்டிலக் நிறுவனம் அடிக்கடி இலவசமாக நிறப் பூச்சுக்களை வழங்கி இப்பாடசலையின் பௌதீகத்தை அழகு படுத்துவதற்காக உதவுவதுடன் இன்னும் பல பௌதீக, கல்வி நடவடிக்கைகளுக்காக அவர்கள் தொடர்ந்;தும் உதவி செய்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு இப்பிரதேசத்திலுள்ள தனவந்தர்கள், பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத் திச்சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் பல்வேறு உதவிகளைச் செய்து இப் பாடசாலையின் பௌதீகவள, கல்வி அபிவிருத்திற்கு உதவி செய்துள்ளமையை குறிப்பிடத்தக்கதாகும். இறுதியாக ஜீலான் மத்திய கல்லூரியை பொறுத்தவரையில்; இச்சமூகத்தின் கல்வி மேம்பாட்டில் மிகப்பெரிய பங்களிப்பை 1906 ஆண்டு தொடக்கம் இன்றுவரை தொடர்ந்தும் மேற்கொண்டுவருகின்றது அதேபோன்று இப்பாடசாலையின் கல்வி மற்றும் பௌதீக அபிவிருத்திக்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனவந்தர்கள், பாடசாலையுடன் தொடர்புடைய ஏனைய அமைப்புக்கள் என பலர் தொண்டு செய்துள்ளதுடன் தொடர்ந் தும் சேவையாற்ற வருகின்றனர். இவர்களின் இத் தொண்டு பணிகள் தொடரப்படல் வேண்டும் என்பதுடன் தொடர்ந்தும் அவர்கள் வரலாற்றினூடாக பேசப்பட வேண்டும். மேலும் இப் பாடசாலை பல்வேறு துறை களில் மென்மேலும் சிறந்து விளங்கி அதன் வரலாற்றில் என்றுமில்லாதவாறு கல்வி, ஒழுக்கம் மற்றும் பௌதீக வளங்கள் விடயத்தில் மென்மேலும் சிறப்புற்று இவ்வரலாற்று ஆவனத்தில் பொன் எழுத்துக் காளால் அவை பொரிக்கப்படல் வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.
பாடசாலையின் வரவாற்றிலிருந்து முக்கிய துளிகள்.
தொகு- 1900ம் ஆண்டில் நாகூர் ஆலிம் இல்லத்தில் திண்ணைப் பள்ளிக் கூடம்.
- 1906ம் ஆண்டில் அல்- முபாரக் ஜூம்மா மஸ்ஜீத்யை அண்டிய வளவில் “ட” வடிவ அமைப்பில் கட்டிடமொன்று கட்டப்பட்டு அங்கு இத் திண்ணைப்பள்ளி மாற்றப்பட்டது. நுஅரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு இது“ஹேண முல்லை தமிழ் கலவன் பாடசாலை” என பெயர்சூட்டப்படல்
- 1959 ஆம் ஆண்டு இது “ஹேனமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயமாக” தரமுய ர்த்தப்பட்டது.
- காலப்போக்கில் ஜீலான் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கலாநிதி. என்.எம் உவைஸ் அவர்கள் இப் பெயரை பிரேரித்தார்கள்.
- 1978ம் ஆண்டு பாடசாலைக் கீதம் இயற்றப்பட்டது
- 1991.02.01 இல் 1யுடீ பாடசாலையாக மாற்றப்பட்டது.
- 1992.03.09 - ஜீலான் மத்திய கல்லூரியக மாற்றப்பட்டது.
- முதலாவது அதிபர் - திரு. சாமுவேல் (யாழ்ப்பாணம்)
- முதலாவது முஸ்லிம் அதிபர் - ஜனாப் ஏ.எம் முஹம்மது அலி (பேருவளை).
- ஜீலானில் பணியாற்றிய முதலாவது முஸ்லிம் ஆசிரியர் - அப்துல் ஹக் (வெலிகமை).
- கொளரவ திரு வெஸ்லி குணவர்தன (பா.உ), இப்பாடசாலைக்கு அளப்பரிய பல சேவைகளைப் புரிந்துள்ளார்.
- ஜீலானின் வெளியிடப்பட்ட முதல் சஞ்சிகை – கலைப்பொழில்.
- ஜீலானுக்கு பெருமை சேர்த முன்னால் மாணவர்களில் கலாநிதி என்.எம். உவைஸ் (சேர்விலக்கம்-478), மற்றும் பேராசிரியர் கே.சிவத்தம்பி ஆகியயோர் முக்கிய இடங்களை வகிக்கின்றனர்.
- 1990; காலப்பகுதிகளில் திரு. திலக கருணாரத்ன பண்டாரகம என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் சிபாரிசில் உயர்தர விஞ்ஞான பிரிவை ஆரம்பிப்பதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றது.
கல்லூரிக் கீதம்
தொகு- ஜீலான் சிறார்கள் கூடியே
- அல்லாஹ்விடம் நாம் எந்நாளுமே
- நல்லெண்ணம் போல் வாழ்வு ஈடேறவே
- கையேந்தி துதி பாடுவோம்.
- கல்வி அறிவிலே நாம் உன்னத நிலை பெற்றே
- நல்லெண்ணம் போல் வாழ்விலே
- உயர்வைக் காணுவோம்.
- மண்ணில் எம் ஜீலான் கலையகம்
- புகழோங்க அருள்வாயே நாயனே
- நல்லாசான் பக்தி பணிவுடனே
- நன்றே நாம் பயின்றிடுவோம்.
- அண்ணலார் நபி
- நற் பண்பெல்லாம் பேணியே
- இறை எண்ணம் போல் வாழ்விலே
- உயர்வைக் காணுவோம்.
- அன்னையெம் ஈழத் தாயகம்
- செழித்தோங்க அருள்வாயே நாயனே
- தேசாபிமான உயர்வுடனே
- ஒன்றே நாம் வாழுவோம்.