ஜீவன்திகா
ஜீவன்திகா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 17 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய சூர்யகாந்தம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
தொகுஜீவன்திகா இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிஷபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுச்ருதி தைவதம் (த2), காகளி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ரி1 ம1 ப த2 நி3 ச் |
அவரோகணம்: | ச் நி3 த2 ப ம1 ரி1 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ" இராகம் எனப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- வைணிக வித்வான் ஏ. ஸுந்தரமய்யர், "ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் கீர்த்தனைகள்", Music books publishers, Madras, 1989