ஜுட் (zud) என்பது மங்கோலியா மற்றும் மத்திய ஆசியாவின் புல்வெளி, பாலைவன மற்றும் பகுதியளவு பாலைவன இடங்களில் நடைபெறும் ஒரு பேரழிவு ஆகும்.[1] இச்சூழ்நிலையில் ஏராளமான கால்நடைகள் கடினமான காலநிலையால் மேய்ச்சல் இன்றி பட்டினியால் இறக்கின்றன. குளிர் காலத்தில் பனியானது புற்களை மூடுவதாலும், கோடைகாலத்தில் வறட்சி காரணமாகவும் இது ஏற்படுகிறது. குறிப்பிட்ட காலநிலையைப் பொறுத்து பல்வேறு வகையான ஜுட்கள் அறியப்படுகின்றன.

ஜுட்டால் இறந்த ஆடுகள். கோபி பாலைவனம், மார்ச் 2010.

மங்கோலியாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தங்கள் வாழ்வாதரத்திற்காக முழுவதுமாக மேய்ச்சல் விவசாயத்தையே நம்பி உள்ளனர். கடினமான ஜுட்கள் பொருளாதார மற்றும் உணவுப் பிரச்சினைகளை மங்கோலியாவில் ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன.[2][3][4]

கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய மத்திய ஆசியாவின் அனைத்து நாடுகளிலும் ஜுட் என்பது ஆண்டுதோறும் ஏற்படக்கூடிய பேரழிவாக உள்ளது. ஜுட்டை குறிக்க பயன்படுத்தப்படும் கசக் வார்த்தையின் பொருள் "பறித்துக் கொள்பவன்" என்பதாகும்.[5]

ஜுட்டை தடுக்க பயன்படுத்தப்படும் கிஸ்யக் அரண், தெற்கு கோபி, 2010

உசாத்துணை தொகு

  1. Bustanov, Alfrid (2015). Soviet Orientalism and the Creation of Central Asian Nations. New York: Routledge. பக். 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781138019225. 
  2. Jacobs, Andrew (May 19, 2010). "Winter Leaves Mongolians a Harvest of Carcasses". The New York Times. https://www.nytimes.com/2010/05/20/world/asia/20mongolia.html. 
  3. Mongolia: Harsh Winter Wiping Out Livestock, Stoking Economic Crisis for Nomads, Eurasianet, 1 April 2016
  4. The slow and deadly dzud in Mongolia, BBC, 14 May 2010
  5. Светлана КОВАЛЬСКАЯ, "Джут в казахской степи", January 22, 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுட்&oldid=3358185" இலிருந்து மீள்விக்கப்பட்டது