ஜுவால மந்திரம்
ஜுவால மந்திரம், ஷிங்கோன் பௌத்தத்தில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மந்திரங்களில் ஒன்றாகும். எனினும் இம்மந்திரம் மற்ற வஜ்ரயான பிரிவுகளில் வலியுறுத்தப்படுவதில்லை. இதை மந்திரம் அமோகபாஷாகல்பராஜ சூத்திரத்தில் இருந்து பெறப்பட்டது ஆகும். அம்மந்திரம் பின் வருமாறு:
ஓம் அமோக வைரோசன மஹாமுத்ரா மணி பத்ம ஜ்வால ப்ரவர்த்தய ஹூம்(ⓘ)
ॐ अमोघ वैरोचन महामुद्रा मणि पद्म ज्वाल प्रवर्त्तय हूँ
இந்த மந்திரம் ஆணவம் இன்றியும் மிகுந்த நம்பிக்கையுடனும் தெளிவான மனத்துடனும் உச்சரித்து வந்தால், வைரோசனர் தமது முத்திரையை வைத்து அறியாமையும் மாயையும் அகற்றுவார் என ஷிங்கோன் பௌத்தத்தில் நம்பப்படுகிறது.
இந்த மந்திரம் நெம்புட்ஸுவின் பிரபலாமான அதே காலகட்டத்தில் மியோயே என்பவரால் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டையுமே பௌத்தர்கள் பின்பற்றி வந்தனர். இறந்தவரின் உடலின் மீது இந்த மந்திரத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட தூய்மையான மண்ணை தூவினால் இறந்தவருடைய தீய கருமங்கள் அழிந்து அவர் நரகத்தில் பிறப்பது தடுக்கப்படுகிறது என நம்புகின்றனர்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- Mark Unno: Shingon Refractions: Myōe and the Mantra of Light. Somerville MA, USA: Wisdom Publications, 2004 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86171-390-7