ஜூனோ நடவடிக்கை

ஜூனோ நடவடிக்கை (Operation Juno) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இசுக்கேண்டிநேவியாவில் நிகழ்ந்த ஒரு கடற்படை சண்டை. நார்வே போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நார்வேயிலிருந்து பின்வாங்கும் நேச நாட்டுப் படைகளை ஜெர்மானியக் கடற்படை தாக்கியது.

மூழ்கடிக்கப்பட்ட எச்.எம்.எசு குளோரியசு

நார்வீக் சண்டைகள் நிகழ்ந்து கொண்டிருந்த போது நார்வீக்கை கடற்புறம் முற்றுகையிட்டிருந்த நேச நாட்டுக் கடற்படைகளை திசை திருப்ப ஜெர்மானிய கடற்படை கிரீக்சுமரீன் திட்டமிட்டது. அதன்படி ஜூன் 8, 1940ல் ஆர்சுடட் என்ற இடத்தைத்ட் தாக்க ஜெர்மானியக் கடற்படை தளபதிகள் திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் நார்வேயிலிருந்து நேச நாட்டுப் படைகள் காலி செய்து இங்கிலாந்து திரும்பத் தொடங்கின. எனவே முந்தையத் திட்டத்தைக் கைவிட்ட ஜெர்மானிய போர்க்கப்பல்கள் படைகளைத் ஏற்றிச் செல்லும் நேச நாட்டுக் கப்பல்களைத் தாக்கின. ஜூன் 8 அன்று பிரித்தானிய வானூர்தி தாங்கிக் கப்பல் எச். எம். எசு குளோரியசு மற்றும் அதன் துணை டெஸ்டிராயர்கள் அகாஸ்டா மற்றும் ஆர்டெண்ட் அகியவற்றை ஜெர்மானிய பொர்க்கல் ஷார்ன்ஹோஸ்ட் மற்றும் நைசனாவ் தாக்கின. இரண்டு மணி நேரம் நடந்த கடற்படைச் சண்டையில் மூன்று பிரித்தானியக் கப்பல்களும் மூழகடிக்கப்பட்டன; 1519 பிரித்தானிய மாலுமிகள் மாண்டனர். ஜெர்மானிய கப்பல்களுக்கு லேசான சேதங்களே ஏற்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூனோ_நடவடிக்கை&oldid=1360160" இலிருந்து மீள்விக்கப்பட்டது