ஜூன்டீன்த்

19, ஜூன், 1865 அன்று அமெரிக்காவின் டெக்சாசில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதை நினைவுகூரும் விடுமுறை நா

ஜூன்டீன்த் (Juneteenth, அதிகாரப்பூர்வமாக Juneteenth National Independence Day, என்பது அமெரிக்காவின் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். அமெரிக்காவில் அடிமைத்தனம் முடிவுக்கு வந்ததன் நினைவாக ஆண்டுதோறும் ஜூன் 19 அன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த விடுமுறை நாளின் பெயரானது "ஜூன்" மற்றும் "நைன்டீன்த்" ஆகிய இரு சொற்களின் சேர்க்கையால் உருவானதாகும். இது 19, ஜூன், 1865 அன்று, மேஜர் ஜெனரல் கார்டன் கிரேஞ்சர் அமெரிக்க உள்நாட்டுப் போரின் முடிவில் டெக்சாசில் அடிமைத்தனம் இறுதியில் ஒழிக்கப்பட்டதாக அறிவித்ததைக் குறிக்கிறது.[7][8]

ஜூன்டீன்த்
A large street festival in Milwaukee, Wisconsin. Much of the crowd is African American, and cooking smoke can be seen rising from food trucks and stands parallel to the street.
மில்வாக்கியில் ஜூன்டீன்த் திருவிழா, 2019
அதிகாரப்பூர்வ பெயர்Juneteenth National Independence Day
பிற பெயர்(கள்)
  • ஜூன்டீன்த் நாள்y[1]
  • அடிமை ஒழிப்பு நாள் (டெக்சாஸ்)[2][3]
  • விடுதலை நாள்
  • கருப்பர் விடுதலை நாள்
கடைபிடிப்போர்அமெரிக்கா (ம) வடக்கு மெக்சிகோவின் சில பகுதிகள்
வகைதேசிய அளவிலான விழா
முக்கியத்துவம்அமெரிக்காவில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலை
கொண்டாட்டங்கள்திருவிழாக்கள், விருந்துகள், அணிவகுப்புகள், தேவாலய கூட்டங்கள்
அனுசரிப்புகள்ஆப்பிரிக்க-அமெரிக்கர் வரலாறு, பண்பாடு, முன்னேற்றம்
நாள்சூன் 19[a]
நிகழ்வுஆண்டுதோறும்
முதல் முறை
  • 19, சூன், 1866 (கொண்டாட்டம்)
  • 19, சூன் 2021 (கூட்டாட்ச்சி விடுமுறை)[b]
மூலம் தொடங்கப்பட்டதுஆரம்பகால கொண்டாட்டங்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஃபிரீட்மென்ஸ் பீரோ அமைப்பால் நடத்தப்பட்டன
தொடர்புடையன
  • அடிமைத்தனம் ஒழிப்பு நாள்
  • ஹானர் அமெரிக்கா நாட்கள்

ஜூன்டீன்த் கொண்டாட்டங்கள் 1866 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டன. அது துவக்ககாலத்தில் டெக்சாஸ் மாகாண தேவாலயங்களை மையமாகக் கொண்ட சமூகக் கூட்டங்களில் நடந்தன. ஆப்பிரிக அமெரிக்கர்கள் பொது வசதிகளைப் பயன்படுத்த மறைமுகத் தடை இருந்த காரணத்தால் அப்போது பொது இடங்களில் இல்லாமல் தங்கள் தேவாலயங்களிலேயே அவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். இதனால் இந்தக் கொண்டாட்டம் தெற்கு அமெரிக்காவின் தெற்குவரை பரவ பல தசாப்தங்கள் ஆனது. தெற்கில் புதிதாக விடுவிக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்க அடிமைகள் மற்றும், அவர்களின் சந்ததியினர் இடையில் இந்தக் கொண்டாட்டம் மெதுவாக பரவி 1920 கள் மற்றும் 1930 களில் ஆடம்பரமான உணவுத் திருவிழாவாக வணிகமயமாக்கப்பட்டது. பெரும் இடம்பெயர்வில் ஈடுபட்டவர்கள் இந்த கொண்டாட்டங்களை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு சென்றனர். 160 களின் குடிசார் உரிமைகள் இயக்கத்தின் போது, குடிசார் உரிமைகளை அடைவதற்கான அறப் போராட்டங்களால் இந்த கொண்டாட்டங்கள் மறைந்ததன. ஆனால் 1970களில் ஆப்பிரிக்க-அமெரிக்கர் சுதந்திரம் மற்றும் ஆப்பிரிக்க-அமெரிக்கர் கலைகளில் கவனம் செலுத்தி மீண்டும் பிரபலமடைந்தது. 1938 இல் பிரகடனத்தின் மூலம் டெக்சாஸிலிருந்து தொடங்கி, 1979 இல் சட்டத்தால், ஒவ்வொரு அமெரிக்க மாநிலமும் கொலம்பியா மாவட்டமும் ஏதோ ஒரு வகையில் விடுமுறையை முறையாக அங்கீகரித்தன.

1852இல் அமெரிக்க அடிமை முறையிலிருந்து தப்பி, மெக்சிக்கோவின் கோஹுய்லாவில் குடியேறிய பிளாக் செமினோயால்சின் வழித்தோன்றல்களான மாஸ்கோகோசால் மக்களாலும் ஜூன்டீன்த் கொண்டாடப்படுகிறது.[9]

ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜூன்டீன்த் நாளை அமெரிக்க சனாதிபதி ஜோ பைடன் 2021 ஆம் ஆண்டில் 117 வது அமெரிக்க காங்கிரசில் தேசிய அடிமை ஒழிப்பு நாள் சட்டத்தில் கையெழுத்திட்டு இதை கூட்டமைப்பு அரசு தேசிய விடுமுறை நாளாக அறிவித்தார்.[10]

குறிப்புகள்

தொகு
  1. The holiday name is a portmanteau of June and nineteenth.[4][5]
  2. First observed on Federal calendars on Friday, June 18, 2021, then Monday, June 20, 2022, per Federal law (5 U.S.C. § 6103), establishing that holidays falling on a Saturday or Sunday are observed on the Friday prior (if the holiday falls on Saturday) or the Monday following (if the holiday falls on Sunday).[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Cel-Liberation Style! Fourth Annual Juneteenth Day Kicks off June 19.". Milwaukee Star. June 12, 1975 இம் மூலத்தில் இருந்து June 20, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200620204605/https://infoweb.newsbank.com/apps/readex/user/login?destination=doc%3Fp%3DEANX&docref=image%2Fv2%3A12A7AE31A7B3CA6B%40EANX-12BA74AAA9B9AFB8%402442576-12BA74AAB9BFAD18%401-12BA74ABAE646B48%40Cel-Liberation%20Style%21%20Fourth%20Annual%20Juneteenth%20Day%20Kicks%20off%20June%2019. 
  2. Silva, Daniella (June 16, 2020). "What to know about Juneteenth, the emancipation holiday". NBC News (in ஆங்கிலம்). Archived from the original on June 19, 2020. பார்க்கப்பட்ட நாள் June 19, 2020.
  3. Davis, Kenneth C. (June 15, 2011). "Juneteenth: Our Other Independence Day". Smithsonian. Archived from the original on June 17, 2020. பார்க்கப்பட்ட நாள் June 27, 2019.
  4. "Juneteenth Celebrated in Coachella". Black Voice News. June 22, 2011 இம் மூலத்தில் இருந்து January 22, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120122071819/http://www.blackvoicenews.com/news/46366-juneteenth-celebrated-in-coachella.html. 
  5. Gulevich, Tanya (2003). Encyclopedia of Christmas and New Year's Celebrations. Omnigraphics. pp. 188–211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780780806252.
  6. "Federal Holidays" (in ஆங்கிலம்). U.S. Office of Personnel Management. Archived from the original on November 10, 2021. பார்க்கப்பட்ட நாள் November 12, 2021.
  7. Garrett-Scott, Shennette (2013). ""When Peace Come": Teaching the Significance of Juneteenth". Black History Bulletin 76 (2): 19–25. doi:10.1353/bhb.2013.0015. 
  8. Gates, Henry Louis Jr. (January 16, 2013). "What Is Juneteenth?". பொது ஒளிபரப்புச் சேவை. Archived from the original on June 11, 2020. பார்க்கப்பட்ட நாள் June 12, 2020.
  9. "Mascogos. Pueblo de afrodescendientes en el norte de México" [Mascogos. People of Afro-descendants in the north of Mexico.]. gob.mx (in ஸ்பானிஷ்). Archived from the original on July 31, 2017. பார்க்கப்பட்ட நாள் July 31, 2017.
  10. "President Biden Signs the Juneteenth National Independence Day Act Into Law". யூடியூப். June 17, 2021. Archived from the original on December 11, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூன்டீன்த்&oldid=4034807" இலிருந்து மீள்விக்கப்பட்டது