ஜூலியானா (நெதர்லாந்து)

ஜூலியானா (டச்சு ஒலிப்பு: [ˌjyliˈjaːnaː]; Juliana Louise Emma Marie Wilhelmina; 30 ஏப்ரல் 1909 – 20 மார்ச் 2004) நெதர்லாந்து அரச குடும்பத்தில் ஒருவர் ஆவார். 1948 முதல் 1980 வரை இவர் நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார்.[1][2]

ஜூலியானா
ஜூலியானா 1981 ல்
நெதர்லாந்து அரசி
ஆட்சிக்காலம்4 செப்டம்பர் 1948 – 30 ஏப்ரல் 1980
பதவியேற்பு6 செப்டம்பர் 1948
முன்னையவர்வில்ஹெல்மினா
பின்னையவர்பீட்ரிக்ஸ்
Prime MinistersSee list
பிறப்பு(1909-04-30)30 ஏப்ரல் 1909
Noordeinde Palace, The Hague, நெதர்லாந்து
இறப்பு20 மார்ச்சு 2004(2004-03-20) (அகவை 94)
Soestdijk Palace, Baarn, நெதர்லாந்து
புதைத்த இடம்30 மார்ச் 2004
துணைவர்
குழந்தைகளின்
பெயர்கள்
பீட்ரிக்ஸ்
இளவரசி ஐரீனி
இளவரசி மார்கரீட்
இளவரசி கிறிஸ்டியானா
பெயர்கள்
ஜூலியானா லூயிஸ் எம்மா மேரி வில்ஹெல்மினா
மரபுஆரஞ்சு நஸ்ஸாவ்(அரச)
Mecklenburg (தந்தை வழி)
தந்தைகோமான் ஹென்றி
தாய்வில்ஹெல்மினா
மதம்Dutch Reformed Church

ஜூலியானா நெதர்லாந்து நாட்டின் ராணி வில்ஹெல்மினா மற்றும் இளவரசர் ஹென்றியின் ஒரே மகள் ஆவார். பிறப்பிலிருந்தே நெதர்லாந்தின் அரியணை வாரிசாக அறியப்பட்டவர். தனிப்பட்டமுறையில் இவருக்கு கல்வி வழங்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டு இளவரசர் பெர்ன்ஹார்டை மணந்தார். இவர்களுக்கு பீட்ரிக்ஸ், ஐரீனி, மார்கரீட், கிறிஸ்டினா என்ற நான்கு குழந்தைகள்.

அரசி ஜூலியானா கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் டச்சு கிழக்கிந்திய பகுதிகளான இந்தோனேசியா மற்றும் சூரினாம் நாடுகளில் காலனியாதிக்கம் முடிவுக்குவந்தது. இவர் உலகிலேயே மிக நீண்ட காலமாக வாழ்ந்த முன்னாள் அரசி ஆவார்.

மேற்கோள்கள் தொகு

  1. Simons, Marlise (21 March 2004). "Princess Juliana, Former Dutch Monarch, Is Dead at 94". The New York Times. https://www.nytimes.com/2004/03/21/world/princess-juliana-former-dutch-monarch-is-dead-at-94.html. பார்த்த நாள்: 27 September 2012. 
  2. Wet op het Kroondomein (BWBR0002752)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலியானா_(நெதர்லாந்து)&oldid=2693932" இலிருந்து மீள்விக்கப்பட்டது