ஜெஃப்ரி ச.ஹால்

ஜெஃப்ரி ச.ஹால் (பிறப்பு 3 மே 1945) ஒரு அமெரிக்க மரபியலர் மற்றும் உயரியலாளர். இவர் பிரான்டிஸ் பல்கலைகழகத்தில் எமிரிட்ஸ் பேராசிரியராக உள்ளார் [2] மற்றும் தற்போது கேம்பிரிட்ச் வசிக்கிறார். ஹால் ஈக்களில் உண்டாகும் காதலூட்டம் மற்றும் நடத்தை ஏற்படும் சீரான மாற்றம் குறித்த நரம்பியல் கூறு பற்றிய ஆய்வுகளை செய்வதற்கு தனது பெரும்பான்மையான நேரத்தை கழித்தார். அவருடைய நரம்பியல் மற்றும் டிராஸாபிலா நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வுகள் மூலம் அவர் ஒரு முக்கிய் உயிரியல் சம்பந்தமான நிகழ்வை கண்டுபிடித்தார். இந்த ஆய்வுகள் மூலம் உயிரியல் கடிகாரங்கள் மற்றும் நரம்பு மண்டலத்தில் பாலியல் வேறுபாடு அடித்தளங்கள் மீது அத்தியாவசிய வழிமுறைகளை ஏற்படுத்த உதவியது. உயிரியல் துறையில் அவரது புரட்சிகர வேலைக்காக அறிவியல் தேசிய கழகத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] மைக்கேல் W. யங் மற்றும் மைக்கேல் ரோபாஸ் உடன் இனைந்து ஹால் 2017 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் உடலியக்கியல்கான நோபல் பரிசு பெற்றார்.[4][5]

ஜெஃப்ரி ச.ஹால்
ஜெஃப்ரி ச.ஹால், நோபல் பரிசு விழாவில்,ஸ்டாக்ஹோம், திசம்பர் 2017
பிறப்புஜெஃப்ரி கானர் ஹால்[1]
மே 3, 1945 (1945-05-03) (அகவை 79)
நியூயார்க் நகரம், அமெரிக்கா
துறைமரபியல்
பணியிடங்கள்பிரான்டிஸ் பல்கலைகழகம்
மெனி பல்கலைகழகம்
கல்விஆம்ஹர்ஸ் கல்லூரி(BS)
வாஷிங்டன் பல்கலைக்கழகம்(MS, PhD)
ஆய்வு நெறியாளர்லாரி சேண்ட்லர்
ஏனைய கற்கை ஆலோசகர்கள்சீமோர் பென்சர், ஹெர்சல் ரோமன்
அறியப்படுவதுமரபியல்
விருதுகள்அமெரிக்க மரபியல் சமுகத்தின் விருது(2003)
நரம்பியலுக்கான குருபர் பரிசு(2009)
Louisa Gross Horwitz Prize (2011)
Gairdner Foundation International Award (2012)
Shaw Prize (2013)
Wiley Prize (2013)
நோபல் பரிசு (2017)

வாழ்க்கை

தொகு

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

ஜெஃப்ரி ஹால் நியூயார்க் புரூக்லினில் பிறந்தார், வாஷிங்டன் டி.சி. புறநகர் பகுதியில் வளர்ந்தார், அவரது தந்தை அமெரிக்க செனட் செய்திகளை சேகரிக்கும் அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகைக்கு நிருபராக பணியாற்றினார், ஹாலின் தந்தை, ஜோசப் W. ஹால்,[6] சமீபத்திய நிகழ்வுகள் தெறிந்துகொள்ள ஹாலை தினசரி பத்திரிக்கைகளை படிப்பதற்கு ஊக்கம் கொடுத்தார். ஒரு நல்ல உயர்நிலைப் பள்ளி மாணவராக ஹால் இருந்தார். எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் தொடர திட்டமிட்டார். ஹால் 1963 ஆம் ஆண்டில் அஹெர்ஸ்ட் கல்லூரியில் ஒரு இளங்கலைப் பட்டத்தைத் தொடர்ந்தார். ஆயினும், ஒரு இளங்கலை மாணவராக இருந்த காலத்தில், இயல்பாகவே அவருக்கு உயிரியலில் ஆர்வம் இருப்பதை உணர்ந்து கொண்டார்.[3]

ஆரம்பகால கல்விப் பணி

தொகு

ஹால் 1967 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு பள்ளியில் லாரன்ஸ் சேண்ட்லரின் ஆய்வகத்தில் பணிபுரியத் தொடங்கினார். திராஸோபிலாவில் வயது சார்ந்த சார்பு மரபியல் மாற்றங்களை ஆய்வு செய்ய ஹால் சேண்ட்லருடன் பணிபுரிந்தார், இவர்களின் ஆய்வு குரோமோசோமின் நடத்தையில் மரபணு கட்டுப்பாட்டை மையப்படுத்தி இருந்தது. பின்னாளில் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் [3] சீமோர் பென்சரிடம் மரபியலில் முனைவர் பட்டத்திற்குப் பிந்தய ஆராய்ச்சிப் பணி மேற்கோள்ள ஹாலை ஹெர்சல் ரோமன் ஊக்கப் படுத்தினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "American Men and Women of Science: The physical and biological sciences". Bowker. October 2, 1989. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017 – via Google Books.
  2. Jeff Hall – Brandeis Faculty Guide
  3. 3.0 3.1 3.2 Nuzzo, Regina (November 15, 2005). "Profile of Jeffrey C. Hall". PNAS 102: 16547–16549. doi:10.1073/pnas.0508533102. பப்மெட்:16275901. பப்மெட் சென்ட்ரல்:1283854. http://www.pnas.org/content/102/46/16547.full.pdf. 
  4. Cha, Arlene Eujung (October 2, 2017). "Nobel in physiology, medicine awarded to three Americans for discovery of ‘clock genes’". Washington Post. https://www.washingtonpost.com/news/to-your-health/wp/2017/10/02/nobel-prize-in-medicine-or-physiology-awarded-to-tktk/?hpid=hp_hp-more-top-stories_nobel-550am%3Ahomepage%2Fstory. 
  5. "The 2017 Nobel Prize in Physiology or Medicine – Press Release". The Nobel Foundation. October 2, 2017. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017.
  6. Hall, Jeffrey C. (September 16, 2009). "The Stand of the U.S. Army at Gettysburg". Indiana University Press. பார்க்கப்பட்ட நாள் October 2, 2017 – via Google Books.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெஃப்ரி_ச.ஹால்&oldid=3435150" இலிருந்து மீள்விக்கப்பட்டது