ஜெசிக்கா ஆரோ

பின்லாந்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்

ஜெசிக்கா ஆரோ ( Jessikka Aro ) (பிறப்பு: டிசம்பர் 19, 1980) பின்லாந்தின் யில் என்ற பொதுச் சேவை ஒளிபரப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஆவார். இவர் புடின்ஸ் ட்ரோல்ஸ் என்ற புனைகதை அல்லாத புத்தகத்தை எழுதியுள்ளார். செப்டம்பர் 2014 இல், இவர் உருசிய சார்பு இணைய பதிவுகளை விசாரிக்கத் தொடங்கினார். ஆனால் அவர்களின் நடவடிக்கைகளுக்கு இவர் பலியாகிவிட்டார்.[2][3] இந்த துன்புறுத்தலுக்காக அக்டோபர் 2018 இல் மூன்று பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.[4] 2019 ஆம் ஆண்டில், இவர் அமெரிக்க வெளியுறவுத் துறையிடமிருந்து ஒரு சர்வதேச தைரியமான பெண்கள் விருதைப் பெற இருப்பதாக இவருக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அது விழாவிற்கு சற்று முன்பு ரத்து செய்யப்பட்டது.

ஜெசிக்கா ஆரோ
2017இல் ஜெசிக்கா ஆரோ
பிறப்பு19 திசம்பர் 1980 (1980-12-19) (அகவை 43) பின்லாந்து[1]
தேசியம்பின்லாந்து
பணி
  • பத்திரிக்கையாளர்
  • எழுத்தாளர்
பணியகம்யில் பொதுச் சேவை ஒளிபரப்பு நிறுவனம்

உருசிய பதிவுகள்

தொகு

கிரெம்லினுடன் இணைக்கப்பட்ட இணைய பதிவுகளின் செயல்கள் "பின்லாந்து மக்களின் பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்" என்று ஆரோ கூறினார்.[5]

இணைய நிறுவனத்தை விசாரிப்பதற்காக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்குச் சென்ற பிறகு, போலி இணைய கணக்குகளை உருவாக்கி, போலிக் கதைகளை உருவாக்கும் தொழிற்சாலை ஊழியர்களை இவர் நேர்காணல் செய்தார். உருசிய சார்பு ஊழியர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க பின்னடைவை எதிர்கொண்டார்.[5][2][6] உருசிய தேசியவாத இணையதளங்கள் இவர் மேற்குலகின் பாதுகாப்பு நிறுவனங்களில் பணிபுரிவதாக விவரித்தன.[7]

சான்றுகள்

தொகு
  1. Aliisa Ristmeri. "Toimittaja ei anna vihamyllyn jauhaa". Utain 9/201. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16. (Published on: issuu.com)
  2. 2.0 2.1 Higgins, Andrew (30 May 2016). "Effort to Expose Russia's 'Troll Army' Draws Vicious Retaliation". The New York Times. https://www.nytimes.com/2016/05/31/world/europe/russia-finland-nato-trolls.html. 
  3. Aro, Jessikka (9 November 2015). "My Year as a Pro-Russia Troll Magnet: International Shaming Campaign and an SMS from Dead Father" (in en-US). Yle Kioski இம் மூலத்தில் இருந்து 26 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170226083457/http://kioski.yle.fi/omat/my-year-as-a-pro-russia-troll-magnet. 
  4. Higgins, Andrew (19 October 2018). "Three Internet Trolls Convicted of Systematic Defamation Against Journalist in Finland". The New York Times. https://www.nytimes.com/2018/10/19/world/europe/finland-internet-trolls-defamation.html. 
  5. 5.0 5.1 Schultz, Teri (17 October 2018). "Pro-Kremlin online harassment on trial in Finland". Deutsche Welle. https://www.dw.com/en/pro-kremlin-online-harassment-on-trial-in-finland/a-45911827. 
  6. "Yle Kioski Traces the Origins of Russian Social Media Propaganda – Never-before-seen Material from the Troll Factory". Yle. 20 February 2015. https://kioski.yle.fi/omat/at-the-origins-of-russian-propaganda. 
  7. Standish, Reid (1 March 2017). "Why Is Finland Able to Fend Off Putin's Information War?". Foreign Policy. https://foreignpolicy.com/2017/03/01/why-is-finland-able-to-fend-off-putins-information-war/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெசிக்கா_ஆரோ&oldid=3664865" இலிருந்து மீள்விக்கப்பட்டது