கிரெம்லின்

கிரெம்லின் (Kremlin) (Russian: Кремль) என்ற உருசிய சொல் கோட்டை அல்லது கொத்தளத்தைக் குறிப்பதாகும்.உருசியாவின் நாடாளுமன்றம் அமைந்துள்ள மாஸ்கோ கிரெம்லின்(Russian: Московский Кремль, Moskovskiy Kreml) பல நேரங்களில் கிரெம்லின் எனவே குறிப்பிடப்படுகிறது. இது மாஸ்கோ நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த பலப்படுத்தப்பட்ட கோட்டையாகும்.தெற்கே மாஸ்க்வா ஆறும் கிழக்கே புனித பாசில் தேவாலயமும் செஞ்சதுக்கமும் மேற்கே அலெக்சாண்டர் பூங்காவும் எதிர்நோக்கியுள்ளது.உருசியாவின் நன்கு அறியப்பட்ட கிரெம்லின்களில் ஒன்றான இதனுள் நான்கு அரண்மனைகளும் நான்கு தேவாலயங்களும் உள்ளன. கிரெம்லின் சுவர்கள் சூழ்ந்துள்ள இக்கோட்டையில் உள்ள கோபுரங்கள் கிரெம்லின் கோபுரங்கள் என அழைக்கப்படுகின்றன.இந்த கோட்டையில் உருசியாவின் அதிபர் மாளிகை அமைந்துள்ளது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கிரெம்லின் மற்றும் செஞ்சதுக்கம், மாஸ்கோ
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Aerial overall of the Moscow Kremlin
வகைபண்பாடு
ஒப்பளவுi, ii, iv, vi
உசாத்துணை545
UNESCO regionஐரோப்பா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1990 (14வது தொடர்)

எவ்வாறு வெள்ளைமாளிகை என்பது அமெரிக்க அரசினை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறதோ அவ்வாறே கிரெம்லின் என்னும் சொல் சோவியத் ஒன்றியத்தின் அரசியலைக் குறிக்கும் சொல்லாக (1922–1991) விளங்கியது.

லெனின் உடல்பாதுகாப்பகம்தொகு

இக்கோட்டையினுள்ளே தான் உருசியப் புரட்சிக்குத் தலைமையேற்ற விளாடிமிர் லெனின் உடல் பாதுகாக்கப் படுகிறது.இங்கு பாதுகாக்கப் பட்டு வந்த அடுத்த தலைவர் ஜோசப் ஸ்டாலின்உடல் நவம்பர் 1, 1961 அன்று வெளியே எடுக்கப்பட்டு அப்போதைய அதிபர் நிகிடா குருச்சேவ் ஆணைப்படி கிரெம்லின் சுவர்களுக்கு வெளியே எளிய கல்லறை ஒன்றில் புதைக்கப்பட்டது.[1]

உசாத்துணைகள்தொகு

புத்தகங்கள்தொகு

அடிக்குறிப்புகள்தொகு

புற இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கிரெம்லின்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: 55°45′6″N 37°37′4″E / 55.75167°N 37.61778°E / 55.75167; 37.61778

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரெம்லின்&oldid=3410196" இருந்து மீள்விக்கப்பட்டது