ஜென்ம நட்சத்திரம்

தக்காளி சீனிவாசன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஜென்ம நட்சத்திரம் (Jenma Natchathiram) 1991ஆம் ஆண்டு வெளியான திகில் தமிழ்த் திரைப்படம் இப்படத்தை தக்காளி சி. சீனிவாசன் இயக்கியுள்ளார்.

ஜென்ம நட்சத்திரம்
இயக்கம்தக்காளி சி. சீனிவாசன்
தயாரிப்புதிரை கங்கை பிலிம்ஸ் (Pvt) லிமிடெட்
கதைகிருஷ்ணன்
இசைப்ரேமி-சீனி
நடிப்புநாசர்
விவேக்
பிரமோத்
சிந்துஜா
ஒளிப்பதிவுதயாள் ஓஷோ
படத்தொகுப்புகார்திகேயஸ்
வெளியீடு1991
நாடுஇந்தியா
மொழிதமி ழ்

வகை தொகு

பேய்ப்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சாத்தானின் குறியீடுகளுடன் பிறக்கும் ஒரு குழந்தையும், அதன் துணையாக வரும் வேலைக்காரியும், செய்யும் பயங்கரங்கள் தான் இப்படத்தின் கதை. இது தி ஓமன் என்னும் ஆங்கிலப் படத்தின் தழுவல். கதாநாயகனின் மனைவி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக டாக்டர் தெரிவிக்கிறார். இன்னொரு பெண்மணிக்கு குழந்தை பிறந்ததாகவும் தாய் இறந்து விட்டதாகவும் சொல்லி மற்றொரு குழந்தையை கதாநாயகனிடம் கொடுக்கிறார் டாக்டர். சாத்தானின் குழந்தை அக்குடும்பத்தில் வந்து சேர்க்கிறது, குழந்தையின் பிறந்த நாள் அன்று அதன் செவிலி இறக்கிறாள். புதிதாக வரும் செவிலி அக்குழந்தைக்கு உதவியாக இருக்கிறாள். இரண்டாம் முறை கரு உண்டாகும் போது அந்த குழந்தை பிறக்ககூடாது என்ன கதாநாயகியை கீழே தள்ளி விடுகிறது அந்த சாத்தான் குழந்தை. அதன் ரகசியம் கண்டறிந்த பாதிரியார், புகைப்படக்கலைஞர் என வரிசையாக சாகிறார்கள். குழந்தையின் பிறப்பின் ரகசியம் அறிகிறார் கதாநாயகன். முடிவில் தனது வளர்ப்பு பெற்றோர்களை அழித்து விட்டு புதிய உறவினர்களுடன் செல்கிறது அந்த சாத்தனின் குழந்தை என்பதாக படம் நிறைவு பெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜென்ம_நட்சத்திரம்&oldid=3710306" இலிருந்து மீள்விக்கப்பட்டது