ஜெப்-உன்-நிசா (பாடகர்)
ஜெப்-உன்-நிசா( சிந்தி : زيب النساءُ; இறப்பு: 19 டிசம்பர் 2019) பாகிஸ்தானின் சிந்தி நாட்டுப்புற பாடகர் ஆவார். 1960கள் முதல் 1990கள் வரையிலான காலகட்டத்தில் சிந்துவின் முன்னணி பெண் பாடகர்களில் ஒருவராக இருந்தார். [1] ரேடியோ பாகிஸ்தான் ஹைதராபாத் மூலம் பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான சூஃபி பாடல்களை அவர் பாடியுள்ளார். [2]
ஜெப்-உன்-நிசா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சிந்தி மொழி: زيب النساء |
இயற்பெயர் | கைம் கதூன் |
பிற பெயர்கள் | ஜெப்-உன்-நிசா |
பிறப்பு | நவாப்ஷா, சிந்த், அன்றையா பிரிடிஷ் இந்தியா, பாகிஸ்தான் | 24 செப்டம்பர் 1939
இறப்பு | 19 திசம்பர் 2019 நவாப்ஷா, சிந்த், பாகிஸ்தான் | (அகவை 80)
இசை வடிவங்கள் | சிந்தி |
தொழில்(கள்) | நாட்டுப்புற பாடகர் |
இசைத்துறையில் | 1958 – 2010 |
பிள்ளைகள் | சமினா கன்வால் (மகள்) |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் குழந்தை பருவம்
தொகுஜெப்-உன்-நிசா நவாப்ஷா சிந்துவில் பச்சு ஷைய்க்கின் வீட்டில் பிறந்தார். [3] அவரது உண்மையான பெயர் கைம் கதூன். அவர் ஒரு பாடகர்கள் குடும்பததையோ அல்லது இசைக்கலைஞர்களின் குடும்பத்தையோ சேர்ந்தவர் அல்ல. இருப்பினும், அவரது தாயார் உள்ளூர் திருமண விழாக்கள் மற்றும் சமூகக் கூட்டங்களில் பாடுபவராவார். [2]
பாடும் தொழில்
தொகுஜெப்-உன்-நிசா தனது பாடும் வாழ்க்கையை 1958 இல் ரேடியோ பாகிஸ்தான் ஹைதராபாத்திலிருந்து தொடங்கினார். புகழ்பெற்ற சிந்தி பாடகர் முஹம்மது ஜுமானிடம் இசைப் பாடங்களைக் கற்றார். [4] ரேடியோ பாகிஸ்தான் சூஃபி கவிஞர்களின் பல பாடல்களை அவரது குரலில் பதிவு செய்தது. அந்த சூஃபி கவிஞர்களில் ஷா அப்துல் லத்தீஃப் பிடாய், சச்சல் சர்மஸ்த், மிஸ்ரி ஷா, மந்தர் ஃபக்கீர், புதால் ஃபக்கீர் மற்றும் பலர் அடங்குவர். அவர் பாடிய பாடல்களின் செழுமையான தொகுப்பு ரேடியோ பாகிஸ்தானின் இசை நூலகத்தில் உள்ளது. சிந்தியில் "செஹ்ரா" அல்லது "லாடா" என்று அழைக்கப்படும் திருமணப் பாடல்களுக்காகவும் அவர் பிரபலமானார். பிரபல பெண் பாடகர்களான ஜரீனா பலோச், அமினா மற்றும் ரூபினா குரேஷி ஆகியோருடன் திருமணப் பாடல்களைப் பதிவு செய்தார். உஸ்தாத் முஹம்மது ஜுமான் மற்றும் உஸ்தாத் முஹம்மது யூசுப் ஆகியோருடன் அவர் பாடிய பாடல்களும் மிகவும் பிரபலமானவை. பாக்கிஸ்தான் தொலைக்காட்சி மையம்-கராச்சி மற்ற பெண் பாடகர்களுடன் இணைத்து 50 க்கும் மேற்பட்ட பாடல்களை இவரது குரலில் பதிவு செய்தது. [5]
இறப்பு
தொகுஜெப்-உன்-நிசா 19 டிசம்பர் 2019 அன்று நவாப்ஷாவில் இறந்தார். [2] அவரது ஐந்து மகள்கள் மற்றும் இரண்டு மகன்களில், சமினா கன்வால் என்ற ஒரு மகள் மட்டுமே பாடகியாக உள்ளார். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 سنڌ جي لوڪ فنڪاره زيب النساءِ ڪافي عرصو بيمار رهڻ بعد نوابشاهه ۾ ۸۰ سالن جي ڄمار ۾ لاڏاڻو ڪري وئي, Daily Panhinji Akhbar, 19 December 2019.
- ↑ 2.0 2.1 2.2 لوڪ گيتن جي راڻي زيب النساءِ لاڏاڻو ڪري وئي، روزاني سنڌيار، 20 ڊسمبر 2019, Daily Sindhyar.
- ↑ Zub-un-Nissa (in Sindhi), Sindhi Wikipedia
- ↑ زيب النساءِ گمناميءَ ۾ گذاري ويل سھرا لاڏا ڳائيندڙ ھڪ لوڪ گائڪا, Daily Kawish, Hyderabad, 21 December 2019.
- ↑ ٰمصطفيٰ ملاح: خوبصورت آواز جي مالڪ گائڪا زيب النساء اسان کان وڇڙي وئي، روزاني ڪاوش، 21 ڊسمبر 2019, Daily Kawish, Hyderabad.