சரீனா பலோச்சு

சரீனா பலோச்சு (Zarina Baloch) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த நாட்டுப்புற இசை பாடகியாவார். 1934 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பாடகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர், நடிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி கலைஞர், எழுத்தாளர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர், அரசியல் ஆர்வலர் மற்றும் சமூக சேவகர் என பன்முகங்களுடன் இவர் இயங்கி வருகிறார்

சரீனா பலோச்சு
Zarina Baloch
பிறப்பு(1934-12-29)29 திசம்பர் 1934
சிந்து மாகாணம்
இறப்பு25 அக்டோபர் 2005(2005-10-25) (அகவை 70) [1]
தேசியம்பாக்கித்தானியர்
பணிகிராமிய இசை[1]
வாழ்க்கைத்
துணை
இரசூல் பக்சு பேல்யோ[1]
பிள்ளைகள்அயசு லதிப் பலியோ (மகன்)[1]
அக்தர் பலோச்சு (மகள்)

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்

தொகு

பாக்கித்தான் நாடின் சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத் நகரத்தைச் சேர்ந்த அல்லாதத் சந்த் கிராமத்தில் இவர் பிறந்தார். இவரது தாயார் குல்ரோசு இயலாலனி சரினாவுக்கு ஆறு வயதாக இருக்கும் போதே 1940 ஆம் ஆண்டிலேயே இறந்தார். சிந்தி மொழி பாடகராக இருந்த முகமது சூமானுடன் சேர்ந்து சரினா படித்தார். 15 வயதிலேயே, இவரது குடும்பத்தினர் சரினாவுக்கு ஒரு தொலைதூர உறவினருடன் திருமணத்தை ஏற்பாடு செய்தது. சரினாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. சினா என்றும் அறியப்படும் அக்தர் பலோச் 1952 ஆம் ஆண்டு பிறந்தார். அசுலம் பர்வேசு 1957 ஆம் ஆண்டு பிறந்தார். இருப்பினும், சரினா பலோச்சும் இவரது கணவரும் தனது மேலதிக கல்வி நடவடிக்கைகளில் உடன்படவில்லை. இதனால் இந்த இணை 1958 ஆம் ஆண்டு பிரிந்தது. சரினா 1960 ஆம் ஆண்டு ஐதராபாத்து வானிலியில் சேர்ந்தார். 1961 ஆம் ஆண்டு தனது முதல் இசை விருதைப் பெற்றார். பின்னர் சரீனா சிந்தி அரசியல்வாதி ரசூல் பக்சு பாலிசோவை மணந்து கொண்டார். இவர்களது திருமணம் ஐதராபாத்தில் 22 செப்டம்பர் 1964 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 அன்று நடந்தது. தம்பதியர்களுக்கு அயாசு லத்தீப் பாலிசோ என்ற ஒரு மகன் பிறந்தார். 1967 ஆம் ஆண்டில், சிந்து பல்கலைக்கழகத்தின் மாதிரிப் பள்ளியில் சரீனா ஆசிரியரானார். 1997 ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 2005 ஆம் ஆண்டு லியாகத் தேசிய மருத்துவமனையில் மூளை புற்றுநோயால் சரீனா இறந்தார்.

சிறைவாசம் மற்றும் அரசியல் செயல்பாடு

தொகு

1979 ஆம் ஆண்டில் அதிபர் சியா உல் அக்கின் இராணுவச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததற்காக சரீனா சுக்கூர் மற்றும் கராச்சி சிறைகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான மற்றும் பாலின பாகுபாடு, நிலப்பிரபுத்துவம் மற்றும் ஆயுப் கான் மற்றும் யாகியா கான் ஆகியோரின் இராணுவச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் காரணமாக , இவர் சிந்தி மக்களின் தாய் என்ற பட்டத்தைப் பெற்றார். [2] [3] சிந்தியானி தாரீக் என்ற பெண் இயக்கத்தை நிறுவிய முன்னணி நிறுவனர்களில் சரீனாவும் ஒருவராவார். பெண்கள் நடவடிக்கை மன்றம், சிந்தி அதாபி சங்கத் மற்றும் சிந்தி ஆரி குழு ஆகிய அமைப்புகளிலும் இவர் நிறுவனராக இருந்தார். சிந்தி, உருது, செராகி, பலோச்சி, பாரசீகம், அரபு மற்றும் குசராத்தி மொழிகளில் சரளமாக இவர் பேசுவார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

தொகு
  • 1994 ஆம் ஆண்டு பாக்கித்தான் சனாதிபதியால் பிரைடு ஆஃப் பெர்பாமென்சு விருது
  • பாயிசு அகமது பாயிசு விருது
  • பாக்கித்தான் தொலைக்காட்சிக் கழக விருது [4]
  • லால் சாபாசு கலந்தர் விருது [4]
  • சா அப்துல் லத்தீப் பித்தாய் விருது [4]

கலை மற்றும் இலக்கிய பங்களிப்புகள்

தொகு

சிந்து மற்றும் பலுசிசுதானில் உள்ள தேசியவாதிகளிடையே பிரபலமான பல பாடல்களையும் கவிதைகளையும் இவர் எழுதினார். இவர் பல கதைகள் மற்றும் கவிதைகளையும் எழுதினார். இவரது புத்தகம் "துஞ்சிஞ்சீ கோலா துஞ்சிஞ்ஞூன் கால்கியோன்" 1992 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Palija, Khair (27 October 2005). "Jiji Zarina laid to rest". Dawn. http://www.dawn.com/news/163070/jiji-zarina-laid-to-rest. 
  2. "HYDERABAD: Jiji Zarina Baloch remembered". 26 October 2007. பார்க்கப்பட்ட நாள் 20 February 2018.
  3. In loving memory: Jiji Zarina Baloch remembered The Express Tribune (newspaper), Published 26 October 2015.
  4. 4.0 4.1 4.2 4.3 "LEGENDARY HEROINE OF SINDH JEEJEE ZAREENA BALOCH". Indus Asia Online Journal. 22 October 2010 இம் மூலத்தில் இருந்து 1 ஜூன் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200601061718/https://iaoj.wordpress.com/2010/10/22/legendary-heroine-of-sindh-jeejee-zareena-baloch/. "LEGENDARY HEROINE OF SINDH JEEJEE ZAREENA BALOCH" பரணிடப்பட்டது 2020-06-01 at the வந்தவழி இயந்திரம்.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரீனா_பலோச்சு&oldid=3650105" இலிருந்து மீள்விக்கப்பட்டது