அயசு லதிப் பலிஜோ

பாக்கித்தான் அரசியல்வாதி

ஆயாஸ் லத்தீப் பலிஜோ (Ayaz Latif Palijo சிந்தி, உருது: اياز لطیف پلیجو‎ ) (பிறப்பு: நவம்பர் 15, 1968, தட்டா, சிந்து, பாகிஸ்தான் ) என்பவர் ஒரு அரசியல்வாதி, வழக்கறிஞர், ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். பாலிஜோ கோமி அவாமி தஹ்ரீக்கின் (மக்கள் இயக்கம்) தலைவரும், சிந்து முற்போக்கு தேசிய எதிர்ப்பு கூட்டணியின் நிறுவனரும் ஆவார். 2007 முதல், தென்கிழக்கு பாகிஸ்தான் மாகாணமான சிந்து மாகாணத்தினைப் பிரிப்பதை எதிர்த்து இவர் இடதுசாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2013 பொதுத் தேர்தல்களில் பிபிபியின் ஜாம் கான் ஷோரோவிடம் மாகாண சட்டமன்றத் தொகுதியை இழந்தது உட்பட இவரது சாதனைகளில் அடங்கும்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

பாலிஜோவின் தாயார் ஜீஜி ஜரினா பலூச் ப லூச் பெண்கள் உரிமை ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் கலைஞர், ஆவார் . இவரின் தந்தை ரசூல் பக்ஸ் பாலிஜோ அவாமி தஹ்ரீக்கின் நிறுவனர் ஆவார். இவர் சிந்தி இடதுசாரி அரசியல் சார்புடையவர் ஆவார்.

பாலிஜோ ஹைதராபாத்தின் சிந்து பல்கலைக்கழகத்தின் பழைய வளாகத்தில் உள்ள மாதிரி பள்ளியில் படித்தார். தனது இளமைப் பருவத்தில் பாலிஜோ தனது தாயின் அறிவுறுத்தலின் கீழ், சிந்தி, பலோச்சி மற்றும் உருது மொழியைப் பயின்றார். பின்னர் இவர் ஆங்கிலம், செராகி, பஞ்சாபி மற்றும் பாரசீக மொழிகளில் உரையாடினார்.   பதினொரு வயதில், பாலிஜோ குலான் ஜஹ்ரா பரிரா மற்றும் அவாமி தஹ்ரீக்கின் குழந்தைகள் பிரிவான சுஜாக் பார் தஹ்ரீக்கின் மத்திய பொதுச் செயலாளராக இவர் பணியாற்றினார். அப்போது இவர் பல்கலைக்கழக மாணவ ஆர்வலராக இருந்தார்.

இவர் பொறியாளர் பட்டத்தினை மெஹ்ரன் பல்கலைக் கழகத்தில் பயின்றார். வான்கூவர், பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் வளர்ச்சியில் பட்டம் பெற்றார். பாலிஜோ கிராமப்புற வளர்ச்சியில் முதுகலை பட்டத்தினை சிந்து பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

பாலிஜோ கல்வி நிர்வாக பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார்.

சட்டத்தில் தொழில்

தொகு

பாலிஜோ சிந்து உயர்நீதிமன்றத்தில் ஓர் அரசு வழக்கறிஞராக இவர் பணிபுரிந்தார். தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரியின் இயக்கத்திற்கு இவர் தலைமை தாங்கினார்.

அரசியல் செயல்பாடு

தொகு

பாலிஜோ, கோமி அவாமி தஹ்ரீக்கின் (மக்கள் இயக்கம்) தலைவரும், சிந்து முற்போக்கு தேசிய எதிர்ப்பு கூட்டணியின் நிறுவனரும் ஆவார். 2007 முதல், தென்கிழக்கு பாகிஸ்தான் மாகாணமான சிந்து மாகாணத்தினைப் பிரிப்பதை எதிர்த்து இவர் இடதுசாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.[1][2] 2013 பொதுத் தேர்தல்களில் பிபிபியின் ஜாம் கான் ஷோரோவிடம் மாகாண சட்டமன்றத் தொகுதியை இழந்தார்.

கலாபாக் அணை

தொகு

கலாபாக் அணை கட்டுவதற்கு பாலிஜோ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.[3]

கராச்சி மொஹாஜிர் சுபா பேரணி

தொகு

மே 2012 ஆம் ஆண்டில் அவாமி தெஹ்ரிக் கட்சி உறுப்பினர்களும் தொழிலாளர்களும் கராச்சியில் மொஹாஜிர் மாகாணம் (லியாரி மொஹாஜிர் சுபா) உருவாவதற்கு ஆதரவாக ஒரு பேரணியை ஏற்பாடு செய்தனர்.[4]

முஹாபத்-இ-சிந்து பேரணி

தொகு

2012 ஆம் ஆண்டில், ஆண்களுக்கு சம எண்ணிக்கையில் முஹாபத்-இ-சிந்து (சிந்து காதல்) பேரணியில் கலந்து கொண்டனர். அணிவகுப்பாளர்கள் பலர் நாவா லேன், பான் மண்டி மற்றும் ஜூனா சந்தை அருகே தாக்கப்பட்டனர். 11 பேர் இதில் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் முப்பது பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை முன்னிலைப்படுத்த சிந்து நகரில் அமைதியான வேலைநிறுத்தத்தை பத்திரிகைகளுக்கு அறிவித்த பாலிஜோ, தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் வரை தனது கட்சியினர் அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தப்போவதாகவும் கூறினார்.

குறிப்புகள்

தொகு
  1. "Ayaz Palijo briefly detained in Hyderabad | Pakistan Today | Latest news | Breaking news | Pakistan News | World news | Business | Sport and Multimedia". Pakistan Today. பார்க்கப்பட்ட நாள் 24 May 2013.
  2. "Election campaigns of nationalist parties safe and sound". Thenews.com.pk. Archived from the original on 26 May 2013. பார்க்கப்பட்ட நாள் 24 May 2013.
  3. "Kalabagh Dam is a death warrant for Sindh". tribune.com.pk. Express Tribune. 17 September 2018. பார்க்கப்பட்ட நாள் 22 November 2018.
  4. Rally, Ayaz Palijo. "Palijo under attack". http://dawn.com/news/720460/firing-on-awami-tehriks-rally-injures-five. பார்த்த நாள்: 6 November 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயசு_லதிப்_பலிஜோ&oldid=3924513" இலிருந்து மீள்விக்கப்பட்டது