பாகிஸ்தானியர்

பாகிஸ்தான் நாட்டின் குடிமக்கள் பாகிஸ்தானி என அழைக்கப்படுவர். இவர்களில் பல இனத்தவரும், பல்வேறு மொழிகளைப் பேசுவோரும், பல சமயப் பிரிவுகளைச் சேர்ந்தோரும் அடங்குவர்.

மொழிகள் தொகு

பாகிஸ்தானியரில் பல மொழிகள் பேசுவோர் உள்ளனர். பெரும்பான்மையான மக்கள் பஞ்சாபி மொழியைத் தாய் மொழியாக கொண்டுள்ளார்கள். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 44% ஆக உள்ளனர். இவர்களைவிடப் பாஷ்தூ மொழி பேசுவோர் 15% ஆகவும், சிந்தி பேசுவோர் 14% ஆகவும், சராய்க்கி மொழி பேசுவோர் 11% ஆகவும் உள்ளனர். உருது நாட்டின் அரச மொழியாக இருப்பினும் அதனைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் சுமார் 8% மட்டுமே. எனினும் பெரும்பாலான பாகிஸ்தானியர் உருது மொழியைப் பேசக்கூடியவர்களாக உள்ளனர். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவிலிருந்து சென்ற மக்கள் உருது மொழியைத் தாய் மொழியாக கொண்டுள்ளார்கள். இவர்கள் முகாஜிர் (Muhajir) என்று அழைக்கப்படுகிறார்கள்.

சமயம் தொகு

இஸ்லாமிய மார்க்கம் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகிஸ்தானியர்&oldid=2041675" இலிருந்து மீள்விக்கப்பட்டது