ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா

ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா ( JIFF) , ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்தியாவில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் நடத்தப்படுகிறது, இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் திரைப்பட விழாவாகும். இந்த சர்வதேச திரைப்பட விழா 2009 [1][2] முதல் இந்தியாவின் ஜெய்ப்பூரில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த விழாவை ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா அறக்கட்டளை நடத்துகிறது.

ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா
இடம் செய்ப்பூர், இந்தியா
நிறுவப்பட்டது 2009 ம் ஆண்டு முதல்
வழங்கியது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா அறக்கட்டளை
பட எண்ணிக்கை 182 திரைப்படங்கள் 52 நாடுகளில் இருந்து
[www.jiffindia.org இணையத் தளம்]

முக்கியத்துவம் தொகு

இந்த திரைப்பட விழாவின் நோக்கம், இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே அவர்களின் சமூக மற்றும் கலாச்சார நெறிமுறைகளின் பின்னணியில் புதிய திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட அறிவு, அவற்றின் தகவல், கருத்து பரிமாற்றங்கள் மற்றும் கலாச்சாரத்தின் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதாகும். இந்த திரைப்பட விழா, திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் மூலம் உலக மக்களிடையே நட்பு மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.

பெரும்பாலான நாடுகளில் திரைப்பட விழாக்கள் வழக்கமான நிகழ்வாக மாறினாலும், அவற்றில் பெரும்பாலானவை தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு மட்டுமே வழங்குவதோடு வணிக ரீதியாக வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களை மகிழ்விக்கின்றன. எவ்வாறாயினும், திரைப்பட ரசிகர்கள் மற்றும் திரைப்பட பார்வையாளர்களை உலகத்துடன் இணைக்கும் ஒரு திருவிழாவை ஏற்பாடு செய்ய இந்த திரைப்பட விழா உத்தேசித்துள்ளது, குறிப்பாக தீவிரமான திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் திரைப்படத் தயாரிப்பின் கலையைப் பற்றி அதிக புரிதலைக் கொண்டுவருவதற்காக இவ்விழா பயன்படுகிறது.

திரையிடல்கள் தொகு

  • முதல் திரைப்பட விழா 2009ம் ஆண்டில் வெற்றியை நோக்கிய முதல் மைல்கல்லாக. 3500 திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு, 7 வெவ்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 148 படங்கள் திரையிடப்பட்டது. மேலும் 6 வெளிநாடுகளில் இருந்து 58 குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் மற்றும் 2 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
  • இரண்டாவது திரைப்பட விழா 2010 ம் ஆண்டில் பெரும் வரவேற்புடன் நடைபெற்றது. 10,000க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். உலகின் 41 நாடுகளில் இருந்து மொத்தம் 350 படங்கள் திரையிடப்பட்டது. 23 நாடுகளில் இருந்து 87 குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் மற்றும் இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தொண்ணூற்று நான்கு படங்கள் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்காக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்திய அரசு, புது தில்லிக்கு அனுப்பப்பட்டன, அவற்றில் 87 படங்களுக்கு சென்சார் அனுமதி கிடைத்தது.
  • மூன்றாவது திரைப்பட விழா 2011 ம் ஆண்டில் கூடுதல் வரவேற்புடன் நடைபெற்றது. 15,000 க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். உலகின் 67 நாடுகளில் இருந்து மொத்தம் 600 படங்கள் வந்துள்ளன. 67 நாடுகளில் இருந்து 144 குறும்படங்கள், ஆவணப்படங்கள், அசைவூட்ட படங்கள் மற்றும் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
  • நான்காவது திரைப்பட விழா 2012 ம் ஆண்டில், 70 நாடுகளில் இருந்து 902 திரைப்படங்களைப் பெற்றது. மேலும் 18000 திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் விழாவிற்கு வருகை தந்தனர்.
  • ஐந்தாவது திரைப்பட விழா 2013 ம் ஆண்டில், 90 நாடுகளில் இருந்து 1397 திரைப்படங்களைப் பெற்றது மற்றும் திரையிடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட 217 படங்கள்.
  • ஆறாவது திரைப்பட விழா 2014 ம் ஆண்டில் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1587 படங்கள் மற்றும் திரையிடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட 156 படங்கள் ஆகும்.
  • ஏழாவது திரைப்பட விழா 2015 ம் ஆண்டில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1807 திரைப்படங்களைப் பெற்றது மற்றும் திரையிடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட 159 படங்கள்.[3][4]
  • எட்டாவது திரைப்பட விழா 2016 ம் ஆண்டில் பிரகாஷ் ஜாவைத் தலைமை விருந்தினராகக் கொண்டு 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2176 படங்களையும், திரையிடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட 152 படங்களையும் பெற்றது.[5]
  • ஒன்பதாவது திரைப்பட விழா 2017 ம் ஆண்டில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2004 திரைப்படங்களைப் பெற்றது மற்றும் திரையிடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட 134 படங்கள்.
  • பத்தாவது திரைப்பட விழா 2018 ம் ஆண்டில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2019 திரைப்படங்களைப் பெற்றது மற்றும் திரையிடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட 136 படங்கள்.
  • பதினொன்றாவது திரைப்பட விழா 2019 ம் ஆண்டில் 103 நாடுகளில் இருந்து 2221 திரைப்படங்களையும், திரையிடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட 232 திரைப்படங்களையும் பெற்றுள்ளது.
  • பனிரெண்டாவது திரைப்பட விழா 2020 ம் ஆண்டில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2411 படங்களையும், திரையிடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட 240 படங்களையும் பெற்றது.
  • பதின்மூன்றாவது திரைப்பட விழா 2021 ம் ஆண்டில் 85 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2121 திரைப்படங்களைப் பெற்றது மற்றும் திரையிடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட 266 படங்கள். இந்த விழாவானது COVID 19 காரணமாக இணையவழியில் நடைபெற்றது.[6]
  • பதினான்காவது திரைப்பட விழா 2022 ம் ஆண்டில் 85 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2100 திரைப்படங்களைப் பெற்றது மற்றும் திரையிடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட 279 படங்கள். இவ்வாண்டில் இணையவழியிலும் நேரடியாகவும் திரைப்படங்கள் திரையிடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு