ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு

ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு (Gerald Maurice Clemence) (ஆகஸ்டு 16, 1908நவம்பர் 22, 1974) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் சைமன் நியூகோம்பு அவர்களால் கவரப்பட்டவர் ஆவார். எனவே இவர் தம் வாழ்நாளில் கணினியைப் பயன்படுத்தி வானியலில் மாபெரும் முன்னேற்றங்களைக் கொண்டுவந்தார். இவர் அமெரிக்க கடற்பயண நாவாய் இயக்க வழிகாட்டி அலுவலகத்துக்குப் பெருமையைச் சேர்த்தார்.[1]

இளமைதொகு

இவர் உரோடே தீவில் உள்ள கிரீன்வில்லியில் பிறந்தார். இவரது தந்தையார் இரிச்சர்டு ஆர். கிளெமான்சு ஆவார். இவரது தாயார் ஓவட்லீ எனும் உலோரா ஆவார். இவரது தொடக்க்க் கல்வி பள்ளி ஆசிரியராக இருந்த தன் தாயாரால் அளிக்கப்பட்டது. தன் ஆர்வத்தால் இவர் வனியலைக் கற்றார்.இவர் பிரவுன் பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் சேர்ந்து 1930 இல் தன் பட்டத்தைப் பெற்றார். இவர் வானியலுக்கான அரசுப் பணித் தேர்வில் கலந்துகொண்டு போட்டியிட்ட 50 பேரில் முதல்வராகத் தேறி, அமெரிக்க நாவாயியல் வான்காணகத்தில் சேர்ந்தார்.இந்தப் பதவியில் சேர்ந்த்தும், இவர் எடித் மெல்வினாவை வைல் எனும் செவிலியை 1928 இல்மணந்தார்.[1]

புதனும் செவ்வாயும்தொகு

நாவாய் வழிகாட்டி அலுவலகம்தொகு

கூட்டுமுறை ஆராய்ச்சிதொகு

செறிவான கூட்டுறவுமுறை ஆராய்ச்சி 1947 இல் வானியக்கவியலில் தொடங்கியது. இதில் கிளெமான்சின் அலுவலகமும் கொலம்பியா எக்கர்ட் ஆராய்ச்சிக் குழுவும் யேல் பல்கலைக்கழக வான்காணகமும் டிர்க் பாவுவேரின் வழிகாட்டுதலின்கீழ் கலந்துக்கொண்டன. டிர்ய் பாவுவேர் ஏற்கெனவே எக்கர்ட்டுடன் கணினித் துளையட்டைகள் ஆய்வில் ஈடுபட்டவராவார்.[1]

பின்னாள் வாழ்க்கைதொகு

பல மாதங்கள் நோய்வாய்பட்டிருந்து, 1974 நவம்பர் 22 இல் உரோடே தீவில் உள்ள புராவிடென்சில் இறந்தார்.[1]

ஆளுமைதொகு

இவர் எப்போதுஅடக்கமான, ஆனால் தன்மதிப்பில் அக்கறை கொண்டவராக இருந்துள்ளார். நடத்தையிலும் தோற்றத்திலும் மரபுசார்ந்தவராக விளங்கினார். இவரது எழுத்து சுருக்கமாகவும் துல்லியமாகவும் அமைந்தது. இவர் தம் பெற்றோரைப் போலவே உண்மையானவராகவும் அறச் சிந்தனை வாய்ந்தவராகவும் விளங்கினார். இவர் குடும்பப் பாங்கானவர். இவர் இரு ஆண்பிள்ளைகளுக்குத் தந்தையார். இவர் மூன்று ஆண் உடன்பிறப்புகளோடும் தங்கையுடனும் எப்போதும் இணக்கமான தொடர்பு வைத்துக்கொண்ட்ருந்தார். இவர் இசையில் ஆர்வம் மிகத் தானே இசையும் வயலினும் பியானோவும் குழலும் கற்றுகொண்டுள்ளார். இவருக்குத் தொடர்வண்டிப் பயணம் பிடிக்கும்.[1]

தகைமைகளும் விருதுகளும்தொகு

  • அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினர் (பெரும்பிரித்தானியா), (1946);[1]
  • கனடிய அரசு வானியல் கழக உறுப்பினர், (1946);[1]
  • அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர், (1952);[1]
  • அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழக ஆய்வுறுப்பினர், (1955);[1]
  • அமெரிக்க வானியல் கழகத் தலைவர், (1958–1960);[1]
  • அமெரிக்க வானியல் கழகப் பொற்பதக்கம், (1965);[1]
  • வானியல் இதழின் பதிப்பாசிரியர், (1969–1974);[1]
  • தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஜேம்சு கிரெய்கு வாட்சன் பதக்கம், (1975);[1]
  • முதன்மைப் பட்டைச் சிறுகோள் 1919 கிளெமான்சு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்தொகு

நூல்தொகைதொகு

வெளி இணைப்புகள்தொகு