ஆகத்து 16
நாள்
(ஆகஸ்டு 16 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகத்து 16 (August 16) கிரிகோரியன் ஆண்டின் 228 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 229 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 137 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 1 – சீன ஆன் மரபு பேரரசர் ஆய் முந்தைய நாள் வாரிசுகள் இன்றி இறந்ததை அடுத்து வாங் மாங் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 963 – பைசாந்தியப் பேரரசராக இரண்டாம் நிக்கொபோரசு போக்காசு முடி சூடினார்.
- 1513 – கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரும் அவரது உரோமைக் கூட்டுப் படையினரும் பிரெஞ்சுப் படைகளை வென்றனர்.
- 1652 – முதலாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: பிளைமவுத்தில் மைக்கெல் டி ருய்ட்டர், சியார்ச் ஐசுக்கியூ ஆகியோரின் கடற்படைகள் போரில் ஈடுபட்டன.
- 1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: தென் கரொலைனாவில் காம்டன் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப் படைகளை வென்றனர்.
- 1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கத் தளபதி வில்லியம் அல் டிட்ராயிட் கோட்டையை எவ்வித எதிர்ப்பும் இன்றி பிரித்தானியப் படைகளிடம் கையளித்தார்.
- 1819 – இங்கிலாந்து, மான்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குதிரைப்படையால் அடக்கப்பட்டதில் 17 பேர் கொல்லப்பட்டு 600 பேர் காயமடைந்தனர்.
- 1841 – அமெரிக்கத் தலைவர் ஜான் டைலர் அமெரிக்காவின் இரண்டாவது வங்கியை அமைப்பதற்கு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடை விதித்தார். விக் கட்சியினர் வெள்ளை மாளிகையின் முன் வரலாறு காணாத மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
- 1856 – இலங்கையில் ரெயில்வே சட்டம் சட்டவாக்கப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.[1]
- 1858 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் புகேனன் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணிக்கு வாழ்த்துத் தெரிவித்து ஐரோப்பாவுடனான தந்திச் சேவையை ஆரம்பித்து வைத்தார். எனினும், பலவீனமான சமிக்ஞையினால் சில வாரங்களில் இச்சேவை நிறுத்தப்பட்டது.
- 1863 – டொமினிக்கன் குடியரசில் எசுப்பானியா மீண்டும் தனது குடியேற்றத்தை ஆரம்பித்ததை அடுத்து, அந்நாட்டின் இராணுவத் தலைவர் கிரிகோரியோ லுப்பெரோன் டொமினிக்கன் குடியரசின் கொடியை ஏற்றி டொமினிக்கன் மறுசீரமைப்புப் போரை ஆரம்பித்தார்.
- 1869 – பரகுவை போர்: சிறுவர்களைக் கொண்ட பரகுவைப் படைப்பிரிவினரை பிரேசில் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.
- 1891 – ஆசியாவிலேயே உருக்கினாலான முதலாவது தேவாலயம், சென் செபஸ்தியான் பேராலயம், மணிலாவில் திறந்து வைக்கப்பட்டது.
- 1900 – இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியா தனது 13 நாள் முற்றுகையை நிறுத்தியதை அடுத்து எலாண்ட்சு ஆற்று சமர் முடிவுக்கு வந்தது. இச்சமர் 2,000 முதல் 3,000 பூவரக்ள் 500 ஆத்திரேலிய, உரொடீசிய, கனடிய, பிரித்தானியக் கூட்டுப் படைகளை சுற்றி வளைத்ததை அடுத்து ஆரம்பமானது.
- 1906 – சிலியில் 8.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3,882 பேர் உயிரிழந்தனர்.
- 1918 – செக்கோசிலோவாக்கியப் படையினருக்கும் சோவியத் செஞ்சேனைக்கும் இடையில் பைக்கால் ஏரியில் போர் இடம்பெற்றது.
- 1920 – உசுபெக்கிசுத்தான், புகாரா கம்யூனிசுடுக் கட்சியின் மாநாட்டில் ஆயுதப் புரட்சிக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது.
- 1920 – போலந்து–சோவியத் போர்: சோவியத் செஞ்சேனை வார்சாவாவில் இருந்து கட்டாயமாகத் திரும்ப நேரிட்டது.
- 1923 – அந்தாட்டிக்காவில் தாம் உரிமை கோரிய நிலத்துக்கு ஐக்கிய இராச்சியம் ரொஸ் சார்புநிலம் எனப் பெயரிட்டு அதன் நிருவாகத்தை நியூசிலாந்து ஆளுநரிடம் கையளித்தது.
- 1927 – கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் இருந்து அவாய், ஒனலுலு வரையான வானூர்திகளின் ஓட்டப் போட்டி ஆரம்பமானது. போட்டியில் பங்குபற்றிய எட்டு வானூர்திகளில் ஆறு காணாமல் போயின.
- 1929 – பாலத்தீனத்தில் பலத்தீனிய அரபுகளுக்கும் யூதர்களுக்கும் இடையே இனக்கலவரம் ஆரம்பமானது. இக்கலவரங்களில் 133 யூதர்களும், 116 அரபுக்களும் உயிரிழந்தனர்.
- 1930 – பிடில்சுடிக்சு என்ற முதலாவது வண்ணக் கேலித் சித்திரத் திரைப்படம் வெளியிடப்பட்டது.
- 1930 – முதலாவது பிரித்தானியப் பொதுநலவாய விளையாட்டுகள் ஒண்டாரியோ, ஆமில்டன் நகரில் வெல்லிங்டன் பிரபுவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படையின் வான்கப்பல் ஒன்று பசிபிக்கில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் கலிபோர்னியாவில் டாலி நகரில் தரை தட்டியது. இதன் இரண்டு ஓட்டுநர்களும் காணாமல் போயினர்.
- 1946 – கல்கத்தாவில் இந்து-முசுலிம் கலவரங்கள் ஆரம்பமாயின. அடுத்த 72 மணி நேரத்தில் 4,000 பேர் உயிரிழந்தனர்.
- 1960 – சைப்பிரசு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1962 – பிரெஞ்சு இந்தியப் பகுதிகள் இந்தியாவுக்குத் திருப்பிக் கொடுத்து எட்டு ஆண்டுகளின் பின்னர், பிரெஞ்சு நாடாளுமன்றம் இவ்வுடன்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.
- 1964 – வியட்நாம் போர்: தென் வியட்நாமில் அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் டோங் வான் மின் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1972 – மொரோக்கோவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
- 1987 – அமெரிக்காவின் டிட்ராயிட் நகரில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 154 பேர் உயிரிழந்தனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது. தரையில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர்.
- 1991 – இந்தியன் ஏர்லைன்சு 257 போயிங் 737 வானூர்தி இம்பால் வானூர்தி நிலையத்தை அணுகும் போது விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 69 பேரும் உயிரிழந்தனர்.[2]
- 2005 – வெனிசுவேலாவில் மேற்குக் கரிபியன் வானூர்தி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 160 பேரும் உயிரிழந்தனர்.
- 2006 – இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
- 2012 – தென்னாப்பிரிக்காவில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட சுரங்கத் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் 34 பேர் கொல்லப்பட்டனர், 78 பேர் காயமடைந்தனர்.
- 2013 – பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 61 பேர் உயிரிழந்தனர், 59 பேர் காணாமல் போயினர்.
- 2015 – சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கூடிய சந்தை ஒன்றின் மீது படையினர் குண்டுகள் வீசியதில் 96 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- 2015 – இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் திரிகானா ஏர்லைன்சு வானூர்தி வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 54 பேரும் உயிரிழந்தனர்.[3]
பிறப்புகள்
- 1785 – சௌதாரிய புஷ்கர் ஷா, நேப்பாளப் பிரதமர் (இ. 1841)
- 1815 – ஜான் போஸ்கோ, இத்தாலிய போதகர் (இ. 1888)
- 1821 – ஆர்தர் கெய்லி, ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. 1895)
- 1832 – வில்கெம் உண்ட், செருமானிய மருத்துவர், உளவியலாளர் (இ. 1920)
- 1845 – காபிரியேல் லிப்மன், நோபல் பரிசு பெற்ற இலக்சம்பர்கு-பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1921)
- 1860 – மார்ட்டின் ஹாக், ஆங்கிலேய-இசுக்கொட்டிய துடுப்பாளர் (இ. 1938)
- 1872 – அ. மாதவையா, தமிழ் முன்னோடி எழுத்தாளர் (இ. 1925)
- 1888 – டி. ஈ. லாரன்சு, பிரித்தானியத் தொல்லியலாளர் (இ. 1935)
- 1908 – ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு, அமெரிக்க வானியலாளர் (இ. 1974)
- 1911 – இ. எஃபு. ஷூமாசர், செருமானிய பொருளியலாளர் (இ. 1977)
- 1913 – மெனசெம் பெகின், இசுரேலின் 6வது பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1992)
- 1928 – ரஜினி கோத்தாரி, அரசியல் அறிஞர் (இ. 2015)
- 1933 – தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (இ. 2008)
- 1946 – ஆசை இராசையா, ஈழத்து ஓவியர்
- 1643 – ம. பெ. சீனிவாசன், தமிழறிஞர்
- 1950 – நசிருதீன் ஷா, இந்திய திரைப்பட, நாடக நடிகர், இயக்குநர்
- 1951 – உமரு யராதுவா, நைஜீரியாவின் 13வது அரசுத்தலைவர் (இ. 2010)
- 1953 – ஜயலத் ஜயவர்தன, இலங்கை அரசியல்வாதி, மருத்துவர் (இ. 2013)
- 1954 – ஜேம்ஸ் கேமரன், கனடிய இயக்குநர்
- 1958 – மடோனா, அமெரிக்கப் பாடகி, நடிகை
- 1968 – அரவிந்த் கெஜ்ரிவால், தில்லியின் 7வது முதல்வர்
- 1970 – சைஃப் அலி கான், இந்திய நடிகர், தயாரிப்பாளர்
- 1970 – மனிஷா கொய்ராலா, இந்திய நடிகை
- 1974 – சிவ்நாராயின் சந்தர்பால், கயானா துடுப்பாளர்
- 1982 – கேம் ஜிகாண்டே, அமெரிக்க நடிகர்
இறப்புகள்
- 1327 – புனித ஆரோக்கியநாதர், பிரெஞ்சுப் புனிதர் (பி. 1295)
- 1886 – இராமகிருஷ்ணர், இந்திய ஞானி, மெய்யியலாளர் (பி. 1836)
- 1888 – ஜான் ஸ்டைத் பெம்பர்டென், கொக்கக் கோலாவைக் கண்டுபிடித்த அமெரிக்க மருந்தியலாளர் (பி. 1831)
- 1946 – ஆசை இராசையா, ஈழத்து ஓவியர்
- 1971 – இ. மு. வி. நாகநாதன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1906)
- 1977 – எல்விஸ் பிரெஸ்லி, அமெரிக்கப் பாடகர் (பி. 1935)
- 1991 – செ. அச்சுத மேனன், இந்திய அரசியல்வாதி (பி. 1913)
- 1997 – நுசுரத் பதே அலி கான், பாக்கித்தானியப் பாடகர் (பி. 1948)
- 2000 – எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை, இலங்கை-இந்தியத் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (பி. 1914)
- 2001 – அன்னா மாணி, இந்திய இயற்பியலாளர், வானிலை ஆய்வாளர் (பி. 1918)
- 2002 – ஒரு விரல் கிருஷ்ணா ராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1929)
- 2003 – இடி அமீன், உகாண்டாவின் 3வது அரசுத்தலைவர் (பி. 1928)
- 2004 – ஜிக்கி, தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி (பி. 1937)
- 2008 – மசனோபு ஃபுக்குவோக்கா, சப்பானிய வேளாண் அறிஞர் (பி. 1913)
- 2016 – குர்தியால் சிங், பஞ்சாபி எழுத்தாளர் (பி. 1933)
- 2018 – அடல் பிகாரி வாச்பாய், 10வது இந்தியப் பிரதமர் (பி. 1924)
சிறப்பு நாள்
- குழந்தைகள் நாள் (பரகுவை)
- விடுதலை நாள் (காபோன், பிரான்சிடம் இருந்து, 1960)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ Ranter, Harro. "ASN Aircraft accident Boeing 737-2A8 Advanced VT-EFL Imphal Municipal Airport (IMF)". aviation-safety.net. பார்க்கப்பட்ட நாள் 2019-06-30.
- ↑ Ranter, Harro. "ASN Aircraft accident ATR 42-300 PK-YRN Oksibil Airport (OKL)". aviation-safety.net. பார்க்கப்பட்ட நாள் 2019-07-21.
வெளி இணைப்புகள்
- பிபிசி: இந்த நாளில்
- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்
- கனடா இந்த நாளில் பரணிடப்பட்டது 2012-12-09 at Archive.today