தா. இராமலிங்கம்
தா. இராமலிங்கம் (ஆகஸ்ட் 16, 1933 - ஆகஸ்ட் 25, 2008) வித்தியாசமான பாணியில் புதுக்கவிதை எழுதிய ஈழத்து எழுத்தாளர். 1960களில் எழுதத் தொடங்கிய இவர் ஓர் ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர்
தா. இராமலிங்கம் | |
---|---|
பிறப்பு | ஆகஸ்ட் 16, 1933 கல்வயல் ,சாவகச்சேரி |
இறப்பு | ஆகஸ்ட் 25, 2008 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஆசிரியர் ,ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | தாமோதரம்பிள்ளை / சின்னப்பிள்ளை |
உறவினர்கள் | மனைவிமகேசுவரி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇராமலிங்கம் யாழ்ப்பாண மாவட்டம், சாவகச்சேரியிலுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று தன் பட்டப் படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பெற்றார். மீசாலையைச் சேர்ந்த மகேசுவரி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு கலைச்செல்வன், அருட்செல்வன், தமிழ்ச்செல்வன், இசைச்செல்வி, கதிர்ச்செல்வன் ஆகிய ஐவர் பிள்ளைகள் ஆவர்.[1]
ஆசிரியப் பணி
தொகுபட்டப்படிப்பை முடித்த பின்னர் இலங்கையின் மலைநாட்டில் இரத்தினபுரி சென் லூக்ஸ் கல்லூரியில் ஆசிரியப் பணியில் இணைந்தார். பின்னர் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் பணியாற்றி அதன் அதிபரானார்.[1]
எழுத்துப்பணி
தொகு1960களில் இருந்து கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவரது புதுமெய்க் கவிதைகள் (1964), காணிக்கை (1965) ஆகிய இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. அலை, சுவர், புதுசு, சமர் போன்ற சிற்றிதழ்களில் எழுதிய கவிதைகளில் சில "மரணத்துள் வாழ்வோம்" (1985 - 1996) தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984 - 2003) தொகுதியில் இவரது 5 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.[1]
மறைவு
தொகுதா. இராமலிங்கம் தனது இறுதிக்காலத்தை கிளிநொச்சியில் கழித்தார். ஞாபகமறதி நோயினால் பீடிக்கப்பட்டிருந்தவர் 2008 ஆகத்து 25 இல் காலமானார்.[1]
இவரது நூல்கள்
தொகு- புதுமெய்க் கவிதைகள் (1964)
- காணிக்கை (1965)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்". முல்லை அமுதன். திண்ணை. 28 ஆகத்து 2008. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)