இ. எஃபு. ஷூமாசர்

எர்ன்ஸ்ட் ஃப்ரீட்ரிக் "ஃபிரிட்ஸ்" ஷூமேக்கர் (Ernst Friedrich "Fritz" Schumacher) (19 ஆகத்து 1911 – 4 செப்டம்பர் 1977) என்பவர் ஒரு ஜெர்மன் புள்ளியியல் நிபுணர் மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். உலகத்திலிருக்கும் ஏழைகளுக்கு பெருந்தொழில் உற்பத்தி தேவையில்லை. பெருமளவு மக்கள் பங்கேற்கும் பொருள் உற்பத்தியே அவர்களுக்கு உகந்த தொழில்நுட்பம் என்பதற்காக நன்கு அறியப்பட்டவர்.[1] இவர் இரண்டு தசாப்தங்கள் பிரித்தானிய தேசிய நிலக்கரிக் கழகத்தில் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர், மற்றும் 1966 ஆம் ஆண்டில் பிறக்டிக்கல் அக்சனை நிறுவினார். இடைநிலை தொழில்நுட்ப மேம்பாட்டுக் குழுவை நிறுவினார்.

இ. எஃபு. ஷூமாசர்
E.F. Schumacher
பிறப்புErnst Friedrich Schumacher
(1911-08-19)19 ஆகத்து 1911
செருமானியப் பேரரசு, பான்
இறப்பு4 செப்டம்பர் 1977(1977-09-04) (அகவை 66)
Switzerland
கல்விஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
பணிபொருளியலாளர்
சமயம்கத்தோலிக்கர்

1995 ஆம் ஆண்டில் இவரது 1973 ஆண்டைய நூலான சிறியதே அழகு என்னும் நூலை இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் வந்த வெளியீடுகளில் சமூகத்தின் சிந்தனை ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த 100 நூல்களில் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டது.[2] 1977 ஆம் ஆண்டில் அவர் எ கைட் ஃபார் தி பிர்பிளக்சிடு-ஐ வெளியிட்டார், இது பொருள் முதல்வாத அறிவியலின் விமர்சனமாகவும், அறிவின் தன்மை மற்றும் அமைப்பின் ஆராய்ச்சியாகவும் இருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Biography on the inner dustjacket of Small Is Beautiful
  2. The Times Literary Supplement, 6 October 1995, p. 39
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._எஃபு._ஷூமாசர்&oldid=2895605" இலிருந்து மீள்விக்கப்பட்டது