பிறக்டிக்கல் அக்சன்

பிறக்டிக்கல் அக்சன் (Practical Action) ஐக்கிய இராச்சியத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு சமூக சேவை நிறுவனமாகும். இது உலகின் இலத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஆபிரிக்கா, மேற்கு ஆபிரிக்கா, தெற்கு ஆசியா ஆகிய நான்கு பகுதிகளில் தனது சேவையை வழங்குகின்றது. பெரூ, கென்யா, சூடான், சிம்பாப்வே, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் தனது சேவையை ஆற்றுகின்றது. 2005 ஆம் ஆண்டுவரை இது இடைத்தர தொழில்நுட்ப வளர்ச்சிக் குழுவெனப் பெயர்படும் இண்டமீடியேட் ரெக்னோலொஜி டெவலப்மெண்ட் குரூப் (Intermediate technology Development Group) என்றவாறு அழைக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட நாடுகளில் பிறக்டிக்கல் அக்சன் வறுமையானவர்களுடன் சேர்ந்தியங்கி உணவு தயாரிப்பு, வேளாண்மை (விவசாயம்), போக்குவரத்து, சிறு கைத்தொழில்கள், ஆபத்துதவி, குடிநீர் மற்றும் சுகாதாரம், தங்குமிடம் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். பிறக்டிக்கல் அக்சனில் கீழ்மட்டத்தில் இருந்து கிடைத்த அனுபவங்கள் ஆலோசனை வழங்குதல், பிரசுரித்தல், கல்வி சார் நடவடிக்கைகள், சர்வதேச தொழில்நுட்ப உதவி போன்றவற்றை வழங்குகின்றது.

1965 இல் விரைவான சீர்திருத்தவாதியும் தத்துவாசிரியருமான E.H.Schumacher ஆப்ஸேவர் (Observer) பத்திரிகையில் உதவிகளின் கட்டுப்பாடுகளை வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள பாரிய தொழில்நுட்ப வசதிகளும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இன்மையால் ஓர் இடைநிலை தொழில்நுட்பமே இந்நாடுகளுக்குன் பொருத்தமானது என எடுத்துரைத்தார்.

இதுபற்றிய கருத்துக்களிற்குக் கிடைத்த ஆதரவை அடுத்து Schumacherமற்றும் அதனுடன் கூட்டுச் சேர்தவர்களும் சேர்ந்து வினைத்திறனான வேலைச் செறிவான எண்ணக்கருவுடன் 1996 ஆம் ஆண்டுமுதல் இடைநிலை தொழில்நுட்ப விருத்திக் குழுவெனத் தமிழில் பொருள்படும் இண்டமீடியேட் ரெக்னோலொஜி டெவலப்மெண்ட் குரூப் (Intermediate technology Development Group) ஆரம்பிக்கப்பட்டது.

இந்த அமைப்பு 1966 இல் உருவாக்கப் பட்டது. வேளாண்மையில் ஏற்பட்ட ஆரம்ப வெற்றியைத் தொடர்ந்து கட்டிடப் பொருட்களைத் தயாரித்தல், கிராப்புறச் சுகாதாரம் போன்ற வேலைகளில் ஈடுபட்டு ஒரு சர்வதேச அமைப்பாக வளர்ந்து கொண்டது. இந்த அமைப்பானது 7 நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளதோடு 70 இற்கு மேற்பட்ட திட்டங்களில் உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறக்டிக்கல்_அக்சன்&oldid=1380822" இலிருந்து மீள்விக்கப்பட்டது