சிறியதே அழகு (நூல்)
சிறியதே அழகு: மனிதனை முன்னிறுத்தும் பொருளாதாரம் (Small Is Beautiful: Economics As If People Mattered), என்பது பிரித்தானியப் பொருளியல் வல்லுநர் இ. எஃபு. ஷூமாசர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
நூலாசிரியர் | இ.எஃப் ஷூமாஸர் |
---|---|
வகை | சுற்றுச்சூழலியல் |
வெளியீட்டாளர் | எதிர் வெளியீடு (சனவரி 1, 2011) |
வெளியிடப்பட்ட நாள் | 2011 |
பக்கங்கள் | 333 பக். |
ISBN | 978-9384646516 |
OCLC | 19514463 |
330.1 20 | |
LC வகை | HB171 .S384 1989 |
உலகத்திலிருக்கும் ஏழைகளுக்கு பெருந்தொழில் உற்பத்தி (Mass production) தேவையில்லை. பெருமளவு மக்கள் பங்கேற்கும் பொருள் உற்பத்தியே (Production by masses) அவர்களுக்குத் தேவை என்பதை வலியுறுத்துகிறார்.
சிறியதே அழகு எனும் சொல்லாடலை, பெருமூலதனமும் உயரிய தொழில்நுட்பமுமே மானுடத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற மாயையை தகர்க்கப் பயன்படுத்துகிறார். ஆற்றல் பற்றாக்குறை, புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு எழ ஆரம்பித்த காலமாதலால், 1973ஆம் ஆண்டு வெளிவந்த முதற்பதிப்பு மேற்கத்திய பொருளாதார மேதைகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. வாதங்களும் எதிர் வாதங்களும் முன்னெடுத்து வைக்கப்பட்டன. 'The Times literary supplement' (தி டைம்ஸ் லிட்டெரி சப்பலிமென்ட்) இதழ் 'சிறியதே அழகு' நூலை இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் வந்த வெளியீடுகளில் சமூகத்தின் சிந்தனை ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த 100 நூல்களில் ஒன்றாக வரிசைப்படுத்தியது.
தமிழில்
தொகுதமிழில் இந்த நூல் எம். யூசுப் ராஜாவின் மொழிப்பெயர்பில் 2011 இல் எதிர் வெளியீடு பதிப்பகத்தினினால் சிறியதே அழகு என்ற பெயரில் முதல் பதிப்பாக வெளிவந்தது.[1]
வெளி இணைப்புகள்
தொகு- Multiple translations of the essay Buddhist Economics from the E. F. Schumacher Society பரணிடப்பட்டது 2006-11-05 at the வந்தவழி இயந்திரம்
- Small Is Beautiful: An Introduction to E. F. Schumacher by Noah Enelow பரணிடப்பட்டது 2011-07-17 at the வந்தவழி இயந்திரம்
- "Sustainability / Enoughness" from Project Worldview
- Fifty Possible Ways to Challenge Over-Commercialism
- Beyond Simplicity: Tough Issues For A New Era by Albert J. Fritsch, SJ, PhD
- ↑ "சிறியதே அழகு". கட்டுரை. http://www.sramakrishnan.com/?p=2851. பார்க்கப்பட்ட நாள் 25 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=