ஆசை இராசையா

ஓவியர் ஆசை இராசையா (பிறப்பு: ஆகஸ்ட் 16, 1946) ஈழத்து ஓவியர், ஆசை என அழைக்கப்படும் இவர் தரமான நூல்களின் வடிவமைப்பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் இருக்கின்றார். இவர் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஒருவர். இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை இவர் வரைந்துள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்புதொகு

இவர் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்சமயம் யாழ். பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்கும் மாணவர்களுக்கு வருகை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.

ஓவியங்கள்தொகு

இவரது படைப்புக்களில் வெளிக்காட்டப்படும் உருவங்கள் யாழ் மண் சார்ந்ததாகவே இருக்கின்றன. இவரது முதலாவது தனிநபர் ஓவியக் கண்காட்சி 1985 இல் அச்சுவேலி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

இவர் வரைந்த முத்திரை ஓவியங்கள்தொகு

 1. சேர். பொன். இராமநாதன் (மெய்யுரு)
 2. சேர். பொன். அருணாசலம் (மெய்யுரு)
 3. சேர். வைத்திலிங்கம் துரைசுவாமி (மெய்யுரு)
 4. சேர்.ஜோன் கொத்தலாவல (மெய்யுரு)
 5. ஜோர்ஜ் ஈ.டி. சில்வா (மெய்யுரு)
 6. ஈ.பி. மல்லசேகரா (மெய்யுரு)
 7. தவலம் என்ற மலையகப் போக்குவரத்து மார்க்கம்
 8. இலங்கையின் முதற் புகைவண்டி ஓவியம்

விருதுகள்தொகு

 • கலைஞானச் சுடர் விருது (2009, நல்லூர் பிரதேச செயலகம் வழங்கியது),
 • வடமாகாண ஆளுநர் விருது (2009)
 • கலாபூஷணம் விருது (2010)
 • கொழும்புத் தமிழ்ச் சங்க விருது (2012)
 • ஞானம் சஞ்சிகை விருது (2012)
 • ஓவியர் கிக்கோ தமிழியல் விருது (2013, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கியது) [2]
 • கலைஞானபூரணன் விருது (2014, திருமறைக் கலாமன்றம் வழங்கியது)
 • அச்சூர்க்குரிசில் விருது (2014, அச்சுவேலி கலை பண்பாட்டு மன்றம் வழங்கியது) [3]

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. "Power of a painter and his paintings" (in English). sundaytimes.lk. pp. 14 th Paragraph. http://www.sundaytimes.lk/101010/Magazine/sundaytimesmagazine_01.html. 
 2. மட்டக்களப்பு எழுத்தாளர் மையத்தின் தமிழியல் விருது முடிவுகள்
 3. "கிராமிய கலை பண்பாட்டுப் பெருவிழா" (in Tamil). Tamilmirror.lk. pp. இரண்டாவது பத்தி. http://www.tamilmirror.lk/115222. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசை_இராசையா&oldid=2712672" இருந்து மீள்விக்கப்பட்டது